Q2 Result | SBI, Bajaj Finserv | சந்தை ஏற்றம் தொடருமா? | IPS Finance - 646
காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு; லாக்கப்களைப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் விஜய்
ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்து கொண்டார். பின்னர் கோவை கிளம்பிய முதலமைச்சர் விஜய், செல்லும் வழியில் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார். காவல் நிலையத்திற்குள் சென்ற விஜய், பணியில் இருந்த காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் கலந்துரையாடினார்.

அப்போது காவல்துறையினருக்கு என்னென்ன தேவைகள் இருக்கின்றது என்பது குறித்தும், எந்தெந்த விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்தப்பட வேண்டி இருக்கிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள இரண்டு லாக்அப்களை பார்வையிட்ட முதலமைச்சர் விஜய், பின்னர் அங்கிருந்த காவல்துறையினருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த ஆய்வின்போது மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ரம்யா பாரதி மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்ததனர்.













