செய்திகள் :

`வெட்கம், திமுக-வுக்கும், தலைவருக்கும் இழுக்கல்லவா?'- துரைமுருகன் இல்ல திருமணம் குறித்து கி.வீரமணி

post image

தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் உள்ள நண்பர் துரைமுருகன் இல்லத்தில் சமஸ்கிருத மந்திரங்களுடன் புரோகிதத் திருமணமா? என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்தி திருமண விழாவில் வைதீக முறைப்படி சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்டது, சமூக வலைதளங்களிலும் திராவிட இயக்கத்தினர் மத்தியிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், " தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் உள்ள நண்பர் துரைமுருகன் இல்லத்தில் சமஸ்கிருத மந்திரங்களுடன் புரோகிதத் திருமணமா?

தி.மு.க. தலைவர் தலைமையில் திருமணம் என்று அழைப்பிதழ்!

தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் படங்களும் அழைப்பிதழில்!

தி.மு.க.வுக்கும், தலைவருக்கும் இழுக்கல்லவா?

இரட்டை நிலை இனி தொடராமல் தி.மு.க. தலைவர் தடுத்திட வேண்டும்!

தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சில ஆண்டுகளாகப் பதவி வகித்துவரும், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அவர்களுடைய பேத்தியும், வேலூர் தொகுதி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் அவர்களின் மகளுமான செந்தாமரை திருமணம், மாண்மிகு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடத்தி வைப்பதாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டு, அத்திருமண அழைப்பிதழில் பெரியார், அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின், அவரது துணைவியார், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.

தி.மு.க. பொதுச் செயலாளர் இல்லத்தில் சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க புரோகிதத் திருமணமா?

1.11.2026 அன்று காலை நடைபெற்ற ஆடம்பரத் திருமணத்தில், ‘சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க நடந்த துரைமுருகன் இல்லத் திருமணம்’ என்ற செய்தி இன்றைய ‘நாளேடு ஒன்றில்’ வந்திருப்பதுடன், சமூக வலைத்தளங்களையும் ஆக்கிரமித்துள்ளது.

இப்படி இரட்டை நிலைப்பாட்டுடன் கொள்கைக்கு அவமதிப்பு ஏற்படுத்திய நடப்புக்காக திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், டாக்டர் செந்தில்குமார் (முன்னாள் எம்.பி.) ஆகியோர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் ‘இதயம் வலிக்கிறது’ என்றும், ‘கொள்கைப் பிடிப்புள்ள ஓர் இயக்கத்தில், இப்படி நடப்பதற்கு மனம் உடன்படவில்லை’ என்றும் தமது கருத்துகளை மென்மையாக தெரிவித்துள்ளனர்!

இதன்மூலமே இச்செய்தி அறிந்த நாம், பெரிதும் வேதனையும், வெட்கமும் அடைகிறோம்.

புரோகிதத் திருமணம் என்றால் தி.மு.க. தலைவர் தலைமையில் என்று அழைப்பிதழ் போடுவானேன்?

புரோகித முறையில்தான் தங்கள் வீட்டுத் திருமணம் நடைபெறும் நிலை உள்ளது என்றால், அதற்கேன் தி.மு.க. தலைவர் தலைமையில் அவர் நடத்தி வைப்பதுபோல், திராவிட இயக்கத் தலைவர்கள் படமும் போட்ட அழைப்பிதழ் எதற்காக?

அதுவும், தி.மு.க.வில் இரண்டாவது பொறுப்பில் உள்ள நமது அன்பிற்குரிய பொதுச்செயலாளர் இல்ல நிகழ்வில், தி.மு.க. தலைவருக்கும், இயக்கத்திற்கு இந்த இரட்டை செயல்முறை மூலம் இழுக்கைத் தேடித் தரலாமா?

நண்பர் துரைமுருகன் சுமார் 45 ஆண்டுகளுக்குமேல் தி.மு.க.வில் உள்ளவர். நாடறிந்தவர். அவரது பொது வாழ்க்கைக்கே இது ஒரு தீராத களங்கம் அல்லவா? ஒரு குடம் பாலானால் என்ன? ஒரு துளி (ஆரிய) விஷம் பட்டால்! ‘பாலின் வெண்மையா பேசப்படும்! சற்று சிந்தித்திருக்க வேண்டாமா?

தனி மனிதர்களைவிட இயக்கம் முக்கியம், இயக்கத்தைவிட கொண்ட கொள்கை, லட்சியம் மிக முக்கியம் அல்லவா? கட்டு்ப்பாடு அவற்றைவிட மிக முக்கியம்.

புரோகிதத் திருமணம்தான் என்றால், அதனை அறிவு நாணயத்துடன் தலைவரிடம் தெரிவித்து, அந்த வழியில் வெளிப்படையாக நடத்தியிருக்கலாமே!

75 ஆண்டுகால திராவிட முன்னேற்றக் கழகம், வெறும் அரசியல் கட்சி அல்ல; பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகளைச் செயல்படுத்திட, ஆட்சியைப் பயன்படுத்துவது என்ற உறுதியுடன் உருவான தனித்தன்மையான ஒன்றாகும். அறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் பாதை போட்டுத் தந்த இயக்கம்.

சுயமரியாதைத் திருமண முறையைத் தந்தை பெரியார் அறிமுகப்படுத்தினார்; முதலமைச்சர் அண்ணா சட்ட வடிவம் கொடுத்தார்.

பார்ப்பனப் புரோகிதர்களை, சமஸ்கிருத மந்திரங்களைத் தவிர்த்து, சுயமரியாதைத் திருமண முறையை அறிமுகப்படுத்தியவர் தந்தை பெரியார்.

துரைமுருகன் - ஸ்டாலின்
துரைமுருகன் - ஸ்டாலின்

தாம் முதலமைச்சராகப் பொறுப்பிலிருந்த குறுகிய ஆட்சிக் காலத்திலும் அதற்குச் சட்ட அங்கீகாரம் பெற்றுத் தந்து, அதனைத் தம் முத்தான மூன்று வரலாற்றுச் சாதனைகளுள் ஒன்றாக நிறுவியவர் அறிஞர் அண்ணா. அவர்களைத் தலைவர்களாகக் கொண்ட இயக்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருப்பவர், அக்கொள்கையில் இருந்து வழுவலாமா?

எனவே, இதனை திராவிடர் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. எது கிடைக்கும், தி.மு.க.வைத் தாக்க என்று காத்திருக்கும் எதிரிகளுக்கு, இப்படிப்பட்ட செய்தி, வெறும் வாய்க்குக் கிடைத்த அவல் போன்றதுதானே?

தி.மு.க. தலைவரின் கவனத்துக்கு

தி.மு.க. தலைவரும், இயக்கமும் இதுபோன்ற இரட்டை நிலை நடவடிக்கைகள் இனி தொடரா வண்ணம் கவனத்துடன் பார்ப்பது – தடுப்பது மிகவும் அவசியம், அவசரம்" என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

பெரிய குரும்பத்தெரு: தொடர் போராட்டம்; சுட்டிக்காட்டிய விகடன்; டாஸ்மாக்கை அகற்றிய மாவட்ட நிர்வாகம்!

சொன்ன வாக்குறுதிகள் நிறைவேறவில்லை... கொடுத்த மனுக்களுக்கும் தீர்வு கிடைக்கவில்லை... ஆனால், தங்களின் கோரிக்கையில் இருந்து பின்வாங்காமல் தொடர்ந்து போராடிய பெரியகுரும்பத் தெரு மக்களுக்கு இப்போது தீர்வு க... மேலும் பார்க்க

ஈரோடு: சுய உதவிக் குழுக்களுக்கு நிதி இணைப்பு வழங்கும் விழாவில் கலந்துகொண்ட முதல்வர் விஜய் | Album

ஈரோடு பெருந்துறையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தனர்ஈரோடு பெருந்துறையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தனர்ஈரோடு பெருந்துறையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தனர்ஈரோடு பெருந்துறையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தனர்ஈரோட... மேலும் பார்க்க

"இது என்ன சினிமாவா, Cut சொல்லிவிட்டு அடுத்த Take போவதற்கு?" - தவெக அரசை விமர்சித்த எடப்பாடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக அரசைக் கண்டித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், "வெளிசந்தையில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ... மேலும் பார்க்க

`எல்லோரும் கைவிரித்த நிலையிலும், மாணவியை மீட்டு மதுரைக்குக் கொண்டு வந்து விட்டோம்!' - நெகிழும் சு.வெ

மதுரையைச் சேர்ந்த மருத்துவ மாணவி டெய்சி ஆஷா மோரேஸ், ரஷ்யாவில் போர் பதற்றம் காரணமாக விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட எதிர்பாராத சூழலில், விசா காலம் முடிந்த நிலையில் அந்நாட்டு அதிகாரிக... மேலும் பார்க்க

`மாணவர்கள் தப்பு தப்பா முடிவெட்டிட்டு வந்தா மொட்டையடிச்சு விடுங்க..!' - அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அயன்ரெட்டியாபட்டி அரசு துவக்கப் பள்ளியில் மாணவர்களை மொட்டை அடித்துவிடுங்கள் என அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசி இருப்பது, சர்ச்சையாகிருக்கிறது.அவர் பேசும்போது, ``நம் வ... மேலும் பார்க்க

'எடப்பாடி பழனிசாமி அதிமுக-வை பூஜ்ஜியம் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' – அமைச்சர் வன்னியரசு

மதுரை மாவட்டம். தீர்த்தகாடு பகுதியைச் சேர்ந்த 112 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் வன்னியரசு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய ... மேலும் பார்க்க