செய்திகள் :

சொத்துக்குவிப்பு வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன், மனைவி, மகன்கள் உட்பட 7 பேரும் விடுவிப்பு!

post image

முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த 14.05.2001 முதல் 31.03.2006 வரையிலான அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாகக் கூறி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயகாந்தி, மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன் மற்றும் அவரது சகோதரர்கள் சண்முகானந்தன், சிவானந்தன் என மொத்தம் 7 பேர் குற்றம் சாட்டப்பட்டனர்.

அனிதா ராதாகிருஷ்ணன்

இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் Spl.C.No.3/2019 என்ற எண்ணில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் 79 சாட்சிகளும், எதிர்தரப்பில் 6 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டுள்ளனர். மேலும், அரசு தரப்பில் 312 ஆவணங்களும், எதிர்தரப்பில் 74 ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இருதரப்பு விசாரணைகளும் நிறைவடைந்தது.   

இதற்கிடையே, இந்த வழக்கை மதுரையில் உள்ள பணமோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தள்ளுபடி செய்தது.

இதனால், தூத்துக்குடி நீதிமன்றத்திலேயே சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது.  இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியானதால், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 7 பேரின் நீதிமன்ற நிலை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் எழுந்தது.  இந்த நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சுபா உத்தரவிட்டுள்ளார்.  அனிதா ராதாகிருஷ்ணனின் வழக்கு கடந்து வந்த பாதை குறித்து சில வழக்கறிஞர்களிடம் பேசினோம், “கடந்த 2001–2006 குற்றச்சாட்டு தொடர்பான காலகட்டம்.

தூத்துக்குடி நீதிமன்றம்

2006-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.  கடந்த 2017 டிசம்பர் 15-ம் தேதி  குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.  2019 Spl.C.No.3/2019 என்ற சிறப்பு வழக்காக விசாரணை நடைபெற்றது. 2025 அமலாக்கத்துறையும் பணமோசடி தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டது.  கடந்த 2026 ஆகஸ்ட் 5 வழக்கை மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய அமலாக்கத்துறையின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், இன்று (நவம்பர் 3-ம் தேதி) சொத்துக்குவிப்பு வழக்கில்  அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 7 பேரையும் நீதிமன்றம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.” என்றனர்.  

"கணவனை விவாகரத்து செய்யப்போகிறேன்; கருவைக் கலைக்க அனுமதியுங்கள்" - சுப்ரீம் கோர்டில் பெண் கோரிக்கை

சுப்ரீம் கோர்ட்டில் 6 மாதம் கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் தனது வயிற்றில் இருக்கும் கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார். கணவருடன் தனக்கு சண்டை இருப்பதாகவும், அவரை விவாகரத... மேலும் பார்க்க

`வேலை பறிபோனால் என்ன செய்யலாம்? உங்கள் உரிமைகள் என்னென்ன?' சட்டம் சொல்வது என்ன? - 10

``நாளையிலிருந்து நீங்கள் வேலைக்கு வர வேண்டாம்!” இந்த ஒற்றை வாக்கியம் ஒரு மனிதனின் ஒட்டுமொத்த உலகத்தையும் சில நொடிகளில் உலுக்கிப் போட்டுவிடும். மாதச் சம்பளம் நின்றுபோனால் குடும்பத்தை எப்படி நடத்துவது, ... மேலும் பார்க்க

``இந்த வாதத்தை ஏற்க முடியாது' ; கே.என் நேரு மீது FIR பதிவு செய்ய தடையில்லை' - உச்ச நீதிமன்றம் அதிரடி

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் வேலை வாய்ப்பு முறைகேடு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது முதல் தகவல் அறிக்கை (F... மேலும் பார்க்க

`இப்படிச் சொல்வது கூட தற்கொலைக்குத் தூண்டிய குற்றமாகிவிடுமா?' - சட்டம் சொல்வது என்ன? - 8

சட்டம் உங்கள் கையில்!“நீயெல்லாம் இன்னும் எதுக்கு உயிரோட இருக்க?” என்று கோபத்திலோ, விளையாட்டாகவோ யாரிடமாவது சொல்லியிருக்கலாம். ஆனால், இப்படிச் சொல்வதெல்லாம் தற்கொலைக்குத் தூண்டிய குற்றமாகிவிடுமா? ஒருவர... மேலும் பார்க்க

``பிரேக்அப் ஆனதும், சம்மத உறவுக்கு பாலியல் வன்கொடுமை முத்திரை குத்தாதீர்கள்" - சுப்ரீம் கோர்ட்

காதல் உறவு கசக்கும்போது ஆண்களுக்கு எதிராக பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் கொடுப்பது சில நேரங்களில் நடக்கிறது. இதனால் ஆண்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் சம்பவங்களும் நடக்கிறது. இருவரும் உ... மேலும் பார்க்க

`வீட்டு உரிமையாளர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்பு என்ன?' - சட்டம் சொல்வது என்ன? - 8

"சட்டம் சொல்வது என்ன?" 6-வது பகுதியில், வீட்டில் குடியிருக்கும் வாடகைதாரர்களின் உரிமைகள் என்னவென்று எழுதியிருந்தோம். இந்தப் பகுதியில், வீட்டின் உரிமையாளருக்கான சட்டவிதிகள் என்ன சொல்கின்றன என்பதைப் பார... மேலும் பார்க்க