செய்திகள் :

'சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி' - திரைத்துறையினரின் கோரிக்கைக்கு அனுமதியளித்த தமிழக அரசு!

post image

திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்குத் தினமும் 6 காட்சிகள் காலை 6 மணி முதல், அடுத்த நாள் இரவு 2.30 மணி வரை திரையிட்டுக் கொள்ளத் தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.

கடந்த வாரம் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழக அரசிடம் சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

Jailer 2 Celebrations
Jailer 2 Celebrations

அதில் இந்த விடியற்காலை 6 மணி காட்சிக்காகத் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும், தயாரிப்பாளர்கள் சங்கமும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் இணைந்து கோரிக்கையை முன்வைத்திருந்தன. அதற்குத் தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.

இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அரசாணையில், "தமிழ் ஃபிலிம் ஆக்டிவ் ப்ரொடியூசர்ஸ் அசோசியேஷன், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் பல்வேறு கோரிக்கைகளைத் தமிழக அரசிடம் முன்வைத்தன.

அவற்றில் முக்கியமாக, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடும் நாளிலிருந்து ஒரு வார காலத்திற்குத் திரைப்படங்களை நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிட அனுமதியளிக்கும்படிக் கோரியிருந்தன.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திரைப்படத் துறையினர் அளித்த கோரிக்கை குறித்துக் கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் திருத்தம் செய்ய உத்தேசித்து, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதிதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்குத் தினசரி ஆறு காட்சிகளுக்கு மிகாமல் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிடவும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி ஆறு காட்சிகள் திரையிடவும் உத்தரவிட்டுள்ளார்கள்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Theatre
Theatre

கடைசியாக விஜய்யின் 'வாரிசு', அஜித்தின் 'துணிவு' திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியான சமயத்தில் இது போன்ற சிறப்புக்காட்சிகள் திரையிடப்பட்டிருந்தன.

அப்போது ரசிகர் ஒருவருக்கு ஏற்பட்ட விபத்தினால் சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

SCENE: 'என்னுடன் நடிக்க நஸ்ரியா 3 முறை மறுத்துவிட்டார், ஆனால்.!' - நடிகர் சூர்யா

கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என்ற இரண்டு ஹிட் படங்களை கொடுத்ததற்கு பிறகு சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் 'சீன்' (Scene). சூர்யாவின் 47வது திரைப்படமான இப்படத்தை 'ரோமஞ்சம்', 'ஆவேசம... மேலும் பார்க்க

ரோலக்ஸ் : 'ஹீரோவா... வில்லனா... லோகேஷை வந்து என்னைப் பார்க்க சொல்லுங்க.!' - சூர்யாவின் பதில்

கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என்ற இரண்டு ஹிட் படங்களை கொடுத்ததற்கு பிறகு சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் 'சீன்' (Scene). சூர்யாவின் 47வது திரைப்படமான இப்படத்தை 'ரோமஞ்சம்', 'ஆவேசம... மேலும் பார்க்க

தடம் : இரட்டை மாயம்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 38

`சினி'ஸ்கோப் 38தடம் : இரட்டை மாயம்!ஆகாஷ் எனும் இளைஞன் ஒருவன் கொடூரமாகக் கொல்லப்படுகிறான். அவனைக் கொலை செய்தது எழில், கவின் எனும் இரட்டையர்களில் ஒருவன் என்பது பார்வையாளர்களான நமக்குத் தெரியும். ஆனால், ... மேலும் பார்க்க

Power Up: அஜித் குமார் ரேசிங் உடன் கூட்டணி! 9 புதிய பிஸ்கட் வகைகளை அறிமுகப்படுத்திய Reliance

ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் நிறுவனம் ‘இன்டிபென்டன்ஸ்’ என்கிற பெயரில் 9 புதிய பிஸ்கட் ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் பிஸ்கட் அறிமுகம் நடிகர் அஜித்குமாரின் ரேசிங் அமைப்புடன் கூட்டுச் சேர்ந்து நடந்துள்ள... மேலும் பார்க்க