செய்திகள் :

பெரிய குரும்பத்தெரு: தொடர் போராட்டம்; சுட்டிக்காட்டிய விகடன்; டாஸ்மாக்கை அகற்றிய மாவட்ட நிர்வாகம்!

post image

சொன்ன வாக்குறுதிகள் நிறைவேறவில்லை... கொடுத்த மனுக்களுக்கும் தீர்வு கிடைக்கவில்லை... ஆனால், தங்களின் கோரிக்கையில் இருந்து பின்வாங்காமல் தொடர்ந்து போராடிய பெரியகுரும்பத் தெரு மக்களுக்கு இப்போது தீர்வு கிடைத்திருக்கிறது. அப்பகுதியில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை மாவட்ட நிர்வாகம் முழுமையாக அகற்றியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், பெரியகுரும்பத் தெருவில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாகப் போராடி வந்தனர். பள்ளிக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான மாணவிகளின் பாதுகாப்பு, அந்தப் பகுதியில் நடந்த விபத்துகளில் இரண்டு உயிர்கள் பறிபோனது, அருகிலுள்ள விவசாய நிலங்கள் சேதப்படுத்தப்படுவது எனப் பல்வேறு காரணங்களை முன்வைத்து மாவட்ட நிர்வாகத்திடம் சுமார் 10 முறை மனு அளித்திருந்தனர்.

பெரிய குரும்பத்தெரு

அதிகாரிகள் தரப்பில் கடையை அகற்றுவதாக உறுதியளிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லாததால், அக்டோபர் 2-ம் தேதி நடைபெற்ற காந்தி ஜெயந்தி கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து, இனிமேல் பெரியகுரும்பத் தெருவில் கிராம சபையே நடக்காது எனத் தெரிவித்தனர். மேலும் டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்தனர்.

இந்த மக்களின் கோரிக்கையையும் தொடர் போராட்டத்தையும் சுட்டிக்காட்டி, அக்டோபர் 5-ம் தேதி விகடன் தரப்பில் ஸ்பாட் விசிட் செய்து மக்களின் பிரச்னையைக் கேட்டறிந்து, “டாஸ்மாக்கை அகற்றல... இனி கிராம சபையே நடக்காது!” – கிராம சபையை புறக்கணித்த பெரியகுரும்பத் தெரு மக்கள்; தீர்வு கிடைக்குமா? என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், தற்போது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, பெரியகுரும்பத் தெருவில் இருந்த டாஸ்மாக் கடையை முழுமையாக அகற்றியுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்திருக்கின்றனர்.

`ஓரிடத்தை எல்லா நேரமும் ஆக்கிரமிக்க முடியாது; மக்கள் வாழ்வாதாரமும் முக்கியம்..!’ - உச்ச நீதிமன்றம்

போராட்டம் நடத்துவதற்காக ஓர் இடத்தைக் காலவரையின்றி யாரும் ஆக்கிரமிக்க முடியாது என்றும், போராட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில்கூட குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம்... மேலும் பார்க்க

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு; லாக்கப்களைப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் விஜய்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்து கொண்டார். பின்னர் கோவை கிளம்பிய முதலமைச்சர் விஜய், செல்லும் வழியில் கரு... மேலும் பார்க்க

ஈரோடு: சுய உதவிக் குழுக்களுக்கு நிதி இணைப்பு வழங்கும் விழாவில் கலந்துகொண்ட முதல்வர் விஜய் | Album

ஈரோடு பெருந்துறையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தனர்ஈரோடு பெருந்துறையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தனர்ஈரோடு பெருந்துறையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தனர்ஈரோடு பெருந்துறையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தனர்ஈரோட... மேலும் பார்க்க

"இது என்ன சினிமாவா, Cut சொல்லிவிட்டு அடுத்த Take போவதற்கு?" - தவெக அரசை விமர்சித்த எடப்பாடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக அரசைக் கண்டித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், "வெளிசந்தையில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ... மேலும் பார்க்க

`எல்லோரும் கைவிரித்த நிலையிலும், மாணவியை மீட்டு மதுரைக்குக் கொண்டு வந்து விட்டோம்!' - நெகிழும் சு.வெ

மதுரையைச் சேர்ந்த மருத்துவ மாணவி டெய்சி ஆஷா மோரேஸ், ரஷ்யாவில் போர் பதற்றம் காரணமாக விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட எதிர்பாராத சூழலில், விசா காலம் முடிந்த நிலையில் அந்நாட்டு அதிகாரிக... மேலும் பார்க்க

`மாணவர்கள் தப்பு தப்பா முடிவெட்டிட்டு வந்தா மொட்டையடிச்சு விடுங்க..!' - அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அயன்ரெட்டியாபட்டி அரசு துவக்கப் பள்ளியில் மாணவர்களை மொட்டை அடித்துவிடுங்கள் என அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசி இருப்பது, சர்ச்சையாகிருக்கிறது.அவர் பேசும்போது, ``நம் வ... மேலும் பார்க்க