செய்திகள் :

`இதற்கெல்லாம் மதச்சாயம் பூசாதீர்கள்'- நடிகையின் விழிப்புணர்வு வீடியோ நீக்கப்பட்டதற்கு கோர்ட் கண்டனம்

post image

மும்பையில் பாலிவுட் நடிகைகள் தியா மிர்ஷா, மாதுரி தீட்ஷித், கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ஆகியோர் பட்டாசுகளை சாலையில் வெடிக்க வேண்டாம் என்று தெரிவிக்கும் விழிப்புணர்வு வீடியோவை, மும்பை மாநகராட்சி சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தது. இதில் நடிகை தியா மிர்ஷா முஸ்லிம் என்பதால் அவர் தீபாவளி விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கேற்பதற்கு மும்பை பா.ஜ.க தலைவர் அமீத் சாத்தம் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். உடனே மும்பை மாநகராட்சி தியா மிர்ஷாவின் வீடியோவை சமூக வலைதளத்தில் இருந்து அகற்றி விட்டது.

இதையடுத்து இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை உடனே விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சமூக வலைதளத்தில் இருந்து அகற்றப்பட்ட வீடியோவை உடனே மீண்டும் பதிவேற்றம் செய்யும்படி மும்பை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ்.குல்கர்னி மற்றும் டாக்டர் நீலா கோகலே ஆகியோர் அடங்கிய அமர்வு, ``பண்டிகைகளைக் கொண்டாடுவதிலிருந்து யாரையும் ஒதுக்கி வைக்க முடியாது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளுக்கு மதச்சாயம் பூசக் கூடாது.

குறிப்பாக சாமானிய மக்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்களின் சிறுபிள்ளைத்தனமான மனநிலை மிகுந்த வேதனை அளிக்கிறது. சுற்றுச்சூழல், காற்று மற்றும் ஒலி மாசுபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு காணொளிக்கு இத்தகைய வண்ணம் பூசப்பட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

நேற்று கருத்துகளைத் தெரிவித்த எந்தவொரு அரசியல்வாதியோ அல்லது தனிநபரோ, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான காணொளிகளை வெளியிட்டதை நாங்கள் காணவில்லை. நாம் ஒரு மதச்சார்பற்ற நாட்டில் வாழ்கிறோம். இது எங்களை மிகவும் காயப்படுத்தியுள்ளது. இது சுற்றுச்சூழலுக்குத் தொடர்புடைய ஒரு விவகாரம். மதம் அல்லது சாதி எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு மனிதனும் சுவாசிப்பது ஒரே காற்றைத்தான்.

சாதி, இனம், மதம் என எவ்வித வேறுபாடுமின்றி, சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய எவரும் இதில் பங்களிக்க முடியும். விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றதற்காகவே ஒரு குறிப்பிட்ட நபர் மட்டும் குறிவைக்கப்படுவது எங்களுக்கு மிகுந்த அதிருப்தியை அளிக்கிறது. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகப் பிரபலங்களைத் தேர்ந்தெடுத்ததில் மாநகராட்சி ஆணையர் முற்றிலும் சரியாகவே செயல்பட்டார். தேவையற்ற பிற விஷயங்கள் இதில் கொண்டுவரப்பட்டது துரதிஷ்டவசமானது. மதச்சார்பற்ற மனப்பான்மை இருக்க வேண்டும். குடிமக்கள் இத்தகைய மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அரசியலமைப்பு எதிர்பார்க்கிறது. அந்த காணொளி நீக்கப்பட்டிருந்தால், அதை மீண்டும் பதிவேற்றுவது பொருத்தமானதாக இருக்கும்" என்று நீதிமன்றம் கூறியது.

இது குறித்து மும்பை மேயர் மும்பை மேயர் ரிது தாவ்டே கூறுகையில், ``அந்த நடிகை எப்போதும் இந்துக்களுக்கு எதிராகவும், அரசாங்கத்திற்கு எதிராகவும் நிலைப்பாடு கொண்டிருக்கிறார். எனவேதான் அவரை எதிர்க்கிறோம்" என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிர அமைச்சர் நிதேஷ் ரானே இது குறித்து கூறுகையில், ''மிர்சா போன்ற நபர்களை மாநகராட்சி ஊக்குவிப்பது தவறானது. தியா மிர்சா தீபாவளி குறித்து ட்வீட் செய்துள்ளார். ஆனால் ஈத், மொஹரம் அல்லது பக்ரீத் பண்டிகைகளின்போது அவர் ஒருபோதும் ட்வீட் செய்வதோ அல்லது இது போன்ற அறிவுரைகளை வழங்குவதோ இல்லை. அவர்கள் ஹோலி அல்லது தீபாவளியை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் கொண்டாட வேண்டும் என்று மட்டுமே பேசுகிறார்கள்.

அவர்கள் ரமலான் மற்றும் பக்ரீத் பண்டிகைகளையும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் கொண்டாட வேண்டும் என்று பேச வேண்டும். அவரைப் போன்றவர்கள் சனாதன இந்து மதத்திற்கு எதிரானவர்கள். எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுப்பது குறித்து நான் முதலமைச்சரிடம் பேசுவேன்" என்று அவர் கூறினார். இதற்கிடையே இந்த பட்டாசு விழிப்புணர்வு பிரசார வீடியோவிற்கு தான் பணம் வாங்கியதில்லை தியா மிர்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ''யாருக்குப் பெரிய தொகைகள் வழங்கப்பட்டன என்பது எனக்குத் தெரியவில்லை. உண்மை என்னவென்றால், எளிதில் தீர்க்கக்கூடிய மாசுபாட்டுப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டால், பொதுமக்கள் மற்றும் அரசாங்கங்களுடனும் இணைந்து பணியாற்றப் பிரபலங்கள் தயாராகவே உள்ளனர். பட்டாசுகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்கும் போதெல்லாம், நாங்கள் தாக்குதலுக்கு உள்ளாகிறோம்.” என்று தெரிவித்தார்.

'ஓமர் அப்துல்லா பத்திரிகையாளர் நிதியை திருமணம் செய்தது செல்லாது!' - ஜமாத் தலைவர் சொல்வது என்ன?

ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா சமீபத்தில் பத்திரிகையாளர் நிதி ராஜ்தான் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார். ஓமர் அப்துல்லாவிற்கு சுப்ரீம் கோர்ட் விவாகரத்து வழங்கியதை தொடர்ந்து இத்திரு... மேலும் பார்க்க

We're Out Of Time: புளோரிடாவில் ஜெட் விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன் பைலட்டின் இறுதி வார்த்தை

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சிறிய ரக ஜெட் விமானம் ஒன்று குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்து நடப்பதற்கு சில விநாடிகளுக்கு முன்பு, விமானி பதற்றத... மேலும் பார்க்க

`மறுமணம் செய்து கொள்ளுங்கள்'- கணவருக்கு கடிதம் எழுதிவிட்டு மகனுடன் 18வது மாடியிலிருந்து குதித்த பெண்

புனே அருகில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதியை சேர்ந்த ஏக்தா பங்காட் என்ற பெண், பல வருடங்களாக முதுகுத் தண்டு நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரது கணவர் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக இருக்கிறார். அ... மேலும் பார்க்க

48 ஆண்டுகளாகத் தண்ணீரே குடிக்காத வாரன் பஃபெட்: ரகசியம் உடைத்த பில் அக்மேன்!

தினமும் கோக்... கோடிகளில் முதலீடு: வாரன் பஃபெட்டின் விசித்திரப் பழக்கம்!பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவரும் உலகின் தலைசிறந்த முதலீட்டாளருமான வாரன் பஃபெட், கடந்த 48 ஆண்டுகளாகத் தண்ணீரே குடிப்பதில்ல... மேலும் பார்க்க

40 ரிசார்ட், வில்லாக்கள்... பதவியைப் பயன்படுத்தி முறைகேடு; சிக்கிய ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ் தம்பதி!

ராஜஸ்தான் மாநிலத்தில் கூடுதல் தலைமை செயலாளராக இருப்பவர் சிகர் அகர்வால். இவரது மனைவி பிரஷகா மாதூர். இவர் ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார். இவர்கள் இரண்டு பேரும் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ராஜஸ்தானின் ப... மேலும் பார்க்க

மரணத்தையும் கொண்டாடும் மெக்சிகோ: ‘Day of the Dead’! - இறந்தவர்களை வரவேற்கும் திருவிழா!

மரணம் என்றாலே துக்கம் மட்டும்தானா? மறைந்தவர்களை நினைத்து மகிழவும் முடியுமா? இதற்கான பதில்தான் மெக்சிகோவின் ‘Day of the Dead’ திருவிழா.ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படும் இத்திரு... மேலும் பார்க்க