செய்திகள் :

"பாஜகவின் ஆதரவோடு அதிமுகவும், திமுகவும் ஆட்சியமைக்க முயல்கிறது" - அமைச்சர் நிர்மல்குமார்

post image

மதுரை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மல்குமார் கலந்து கொண்டு கடனுதவி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மல்குமார், தவெக எம்எல்ஏ முஸ்தபா தன்னிடம் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க பேரம் பேசியதாக வைத்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, ''எம்எல்ஏக்களிடம் பேரம் பேசுவது குறித்து ஏற்கனவே அதிமுக, திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். கரூரைச் சேர்ந்த நபரைக் கைது செய்திருக்கிறார்கள்; எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதற்கு அனைத்து இடத்திலும் முயற்சி நடக்கிறது.

இப்போது அந்த முயற்சியை உதயநிதியும், ஸ்டாலினும் பெரிய அளவில் முடக்கிவிட்டிருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் திரும்பச் சொல்வது இத்தனை மாதம்தான் இந்த ஆட்சி இருக்கும் என்கிறார்கள்.

முஸ்தபா
முஸ்தபா

அவர்களின் ஒரே முயற்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக-வின் பின்புலத்தோடு பாஜகவின் ஆதரவோடு மீண்டும் எடப்பாடியும் திமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என முயற்சி நடந்து கொண்டே இருக்கிறது. அவர்களிடம்  ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஒவ்வொருவரிடம் உள்ளது; அதை வைத்து அவர்கள் செய்யக்கூடிய ஒரே முயற்சி இதுதான். மற்றபடி அவர்களால் வேறு எதையும் செய்ய முடியாது.

எங்களுடைய எம்.எல்.ஏ-க்களுக்கு 70 கோடி வரைக்கும் ஆஃபர் கொடுத்து மாட்டிக்கொண்டு கைதாகி நிற்கிறார்கள். அதிகபட்சமான பணம் எம்எல்ஏ பேரத்தில் மாட்டியுள்ளது. ஹவாலா பணம் பயன்படுத்தியுள்ளனர். பெங்களூரில் பணத்தை சப்ளை பண்ணியிருக்கிறார்கள். எல்லா விசாரணையும் நடந்து வருகிறது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

இடைத்தேர்தலில் திமுக - அதிமுக இருவரும் சேர்ந்து பொது வேட்பாளர் நிறுத்துவதாகத்தான் திட்டம் திமுகவிற்குள் கனிமொழி, நேரு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் அது கைவிடப்பட்டது.

இப்போது அடுத்து வரும் இடைத்தேர்தலில் திமுக, அதிமுகவும் சேர்ந்து பொது வேட்பாளரைப் போடலாம் என முடிவு செய்திருக்கிறார்கள். அதிலும் உட்கட்சியில் எதிர்ப்பு கிளம்பினால் மட்டுமே தனியாக வேட்பாளர் நிறுத்தப்படலாம்'' என்றார்.

அமெரிக்க தேர்தலில் செக்? ஜனநாயகக் கட்சி முன்னிலை! - ட்ரம்பை இந்தத் தோல்வி கட்டுப்படுத்துமா?

அமெரிக்க நாடாளுமன்றத்தில் தற்போது ஜனநாயகக் கட்சியின் கை மேலோங்கியுள்ளது. 2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக ட்ரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்றபோது, காங்கிரஸில் குடியரசுக் கட்சிதான் பெரும்பான்மையாக இருந... மேலும் பார்க்க

US Elections: இந்திய வேர்கள்... அமெரிக்க அரசியல் களம் - மீண்டும் வெற்றி பெற்ற சுஹாஸ் சுப்ரமணியம்!

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த பெற்றோருக்குப் பிறந்த சுஹாஸ் சுப்ரமணியம் (Suhas Subramanyam), ஒபாமா நிர்வாகத்தில் தொழில்நுட்பக் கொள்கைப் பணிகளை மேற்கொண்டு, விர்ஜீனியா மாகாண அரசியலில் ... மேலும் பார்க்க

மணப்பாறை: வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல் – பொதுமக்கள் கடும் அவதி!

காவல் நிலையத்தில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வழக்குகளில் தொடர்புடைய வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுபற்றி நம்மிடம் பேசிய, பா.ஜ.க மணப்பாறை ... மேலும் பார்க்க

`பெரியார் அறிவுலகத்திற்கு இந்த அரசு மூடுவிழா நடத்தியிருக்கும்; நல்லவேளை..!’ - மு.க.ஸ்டாலின்

கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்று கோவைக்கு வருகை தந்தார். பின்னர் நிலாம்பூர் பகுதியில் புதிய தி.மு.க கட்சி அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில்... மேலும் பார்க்க

புதிய தலைமைச் செயலகம்: கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்த அரசு? கடுப்பாகும் மீனவர்கள்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக மீனவர்களிடம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த கருத்துக் கேட்பு கூட்டத்தை அரசு ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. புதிய தலைமைச் செயலகம் அமை... மேலும் பார்க்க

Ro Khanna: அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியின் குரல்... மீண்டும் வெற்றி பெற்ற ரோ கண்ணா!

சிலிக்கான் வேலியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான ரோ கண்ணா (Ro Khanna), இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். தொழில்நுட்ப வளர்ச்சி, உற்பத்தித் துறை, வேலைவாய்ப்பு, வெளியுறவுக் கொள... மேலும் பார்க்க