செய்திகள் :

Ramayana: "அதனால் 'ராமாயணா 2' 2028-ம் ஆண்டுக்கு தள்ளிப் போகிறது!" - தயாரிப்பாளர் நமித் மல்கோத்ரா

post image

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ஸ்ரீராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கும் 'ராமாயணா' திரைப்படத்தின் முதல் பாகம் நாளை வெளியாகிறது.

Ramayana Trailer - Yash
Ramayana Trailer - Yash

இந்நிலையில், படத்தின் அடுத்த பாகம் குறித்துத் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா பகிர்ந்திருக்கிறார்.

தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா, "முதல் பாகத்திற்கு உலகம் முழுவதும் கிடைத்துள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கண்டு, படத்தின் இறுதிப் பகுதியை இன்னும் பிரமாண்டமாக உருவாக்கக் கூடுதல் நேரம் தேவை என முடிவு செய்துள்ளோம்.

இது போன்ற பிரமாண்டமான ஒரு படைப்பிற்கு முழுமையான நியாயம் செய்யவே இந்த ஓராண்டு கூடுதல் கால அவகாசம்.

Namit Malhotra
Namit Malhotra

அவசர அவசரமாக எதையும் செய்து முடிக்க நாங்கள் விரும்பவில்லை. தொடக்கத்தில் இப்படத்தை 3 பாகங்களாக உருவாக்கவே திட்டமிட்டிருந்தோம்.

ஆனால், அதற்குப் பிறகு 2 பாகங்களாக வெளியிடத் திட்டமிட்டோம்" எனக் கூறியிருக்கிறார்.

இப்படத்தில் ராவணனாக யஷ், ஹனுமானாக சன்னி தியோல், லக்ஷ்மணனாக ரவி துபே, சூர்ப்பநகையாக ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் துஷார் கபூரிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்; பிஷ்னோய் பெயரைப் பயன்படுத்திய கும்பல்

பாலிவுட் பட தயாரிப்பாளர் ஏக்தா கபூரின் சகோதரரும், நடிகருமான துஷார் கபூரை மர்ம நபர் ஒருவர் போன் மூலம் தொடர்பு கொண்டார். அந்த நபர் தான் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தைச் சேர்ந்த ஹார்ரி பாக்ஸர் என்று அறிமுகப்... மேலும் பார்க்க

'எனக்கு ஸ்டாராக வேண்டும்!' - தொடக்க கால பட வாய்ப்புகளை ஷாருக் நிராகரித்தது குறித்து இயக்குநர் ஆனந்த்

பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாகத் திகழும் ஷாருக் கான், தனது திரைப்பயணத்தின் ஆரம்பக் கட்டத்தில் வணிக ரீதியாக தான் ஒரு பெரிய 'ஸ்டார்' ஆக வேண்டும் என்பதில் மட்டுமே ஆர்வமாக இருந்ததாகவும், அதனாலேயே பல ஆழமான... மேலும் பார்க்க

SRK: 'ரசிகர்களுக்குப் பறக்கும் முத்தம்!' - நண்பர்களுடன் 61வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஷாருக்கான்

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு இன்று 61வது பிறந்தநாள் ஆகும். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாள் அன்று மும்பை பாந்த்ராவில் உள்ள தனது மன்னத் பங்களாவின் பால்கனியில் இருந்து ரசிகர்களைப் பார்த்து ஷாருக்கா... மேலும் பார்க்க

ராமாயணா: ``விமர்சனங்களைக் கண்டு நாம் கலங்கக் கூடாது"- விமர்சனத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில்

நமித் மல்ஹோத்ரா மற்றும் இயக்குநர் நிதேஷ் திவாரியின் 'ராமாயணா: ரைஸ் ஆஃப் தி லெஜண்ட்' (Ramayana: Rise of a Legend) திரைப்படத்திற்கு ஜெர்மன் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து ரஹ்மான் இசையமைத்துள்ளா... மேலும் பார்க்க

'நான் வெள்ளையாக இல்லை, அதனால் எனக்கு வாய்ப்புகள்.!'- தென்னிந்திய சினிமா குறித்து ராதிகா ஆப்தே

தர்மராஜ் ஷெட்டி இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே, தன்வி ஆஸ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ள வெப் சீரிஸ் ’அக்கா’. பெண்கள் ஆளும் கற்பனை கேங்ஸ்டர் உலகை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வெப் ச... மேலும் பார்க்க

சாய் பல்லவி எதிர்ப்பு முதல் ரஹ்மான் இசை வரை! - 'ராமாயணா' திரைப்படத்தைத் தொடரும் சர்ச்சைகள்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகயிருக்கும் 'ராமாயணா' திரைப்படம், ஆரம்பக்கட்ட அறிவிப்பிலிருந்தே இந்திய சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்ப... மேலும் பார்க்க