Us Mid-Term Election Results Impact in Share Market | Q2 Result | Crude | UDS | ...
``ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற தலைப்பில் விதிகளுக்குப் புறம்பாக கல்லூரி நிகழ்வு..." - சு.வெங்கடேசன்
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற தலைப்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் இளைஞர் நாடாளுமன்ற நிகழ்வுகளைத் திட்டமிட்டிருந்தது.
அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பரிசீலனையில் உள்ள ஒரு தலைப்பில், நாடாளுமன்ற விதிகளுக்கும் மரபுகளுக்கும் புறம்பாக ஒன்றிய அமைச்சகம் இப்படி நிகழ்வுகளை நடத்துவது அதிகார வரம்பை மீறும் செயலாகும் எனவும் குறிப்பிட்டு மக்களவை சபாநாயகருக்கும் இளைஞர் நலன் அமைச்சகத்திற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார்.
வெற்றி!“ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற தலைப்பில் ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் நாளை கல்லூரிகளில் நடத்த திட்டமிட்டிருந்த இளைஞர் நாடாளுமன்ற (Youth Parliament) நிகழ்வுகள் நாடாளுமன்ற விதிகளுக்குப் புறம்பானது எனச் சபாநாயகர், அமைச்சர் மற்றும் கூட்டு நாடாளுமன்றக் (JPC) குழுவின் தலைவருக்குக் கடிதம் எழுதியிருந்தேன்.இந்நிலையில் நாளை நடக்கவிருந்த இளைஞர் நாடாளுமன்ற நிகழ்வுகளை ரத்து செய்து கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.#ஒரேநாடுஒரேதேர்தல் #YouthParliament #வெற்றி #OneNationOneElection #YouthParliamentCancelled #Victory
— Su Venkatesan MP (@SuVe4Madurai) November 4, 2026
அதனைத் தொடர்ந்து நாளை நடைபெறவிருந்த இளைஞர் நாடாளுமன்ற நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
இது குறித்துப் பதிவிட்டிருக்கும் அவர், "வெற்றி! 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற தலைப்பில் ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் நாளை கல்லூரிகளில் நடத்தத் திட்டமிட்டிருந்த இளைஞர் நாடாளுமன்ற நிகழ்வுகள் நாடாளுமன்ற விதிகளுக்குப் புறம்பானது எனச் சபாநாயகர், அமைச்சர் மற்றும் கூட்டு நாடாளுமன்றக் குழுவின் தலைவருக்குக் கடிதம் எழுதியிருந்தேன்.

இந்நிலையில் நாளை நடக்கவிருந்த இளைஞர் நாடாளுமன்ற நிகழ்வுகளை ரத்து செய்து கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


















