செய்திகள் :

உயர்மட்ட குழு கலைப்பு: "தவெக அரசின் சின்ன புத்தி கடும் கண்டனத்திற்குரியது"- திமுக அறிக்கை

post image

கடந்த திமுக ஆட்சியில் மத்திய-மாநில அரசுகளின் உறவு மற்றும் சட்ட வரம்புகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவை தமிழக அரசு கலைத்திருக்கிறது.

இதற்கு திமுக கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், " தி.மு.க. மீதுள்ள வன்மத்தின் காரணமாக மாநில உரிமைகளைக் காவு கொடுக்கும் த.வெ.க. அரசின் சின்ன புத்தி கடும் கண்டனத்திற்குரியது

ஒன்றிய - மாநில உறவுகளைக் குறித்து ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் குரியன் ஜோசப் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவைக் கலைத்து மாநில உரிமைகளுக்கு மாபெரும் துரோகம் இழைத்துள்ளார் முதலமைச்சர் விஜய்.

முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்

எதையும் உருவாக்கும் திறனும் இன்றி, அடுத்தவர் உருவாக்கியதைப் பேணும் முதிர்ச்சியும் இன்றி இழிவான அரசியலில் இறங்கியுள்ளது மூடர்கூடத் த.வெ.க. அரசு!

திராவிட மாடல் அரசில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள் மிக நீண்ட அனுபவமும், ஆராயும் பொருண்மையில் ஆழ்ந்த அறிவும் மிக்க வல்லுநர்கள். அப்பழுக்கற்ற நேர்மையாளர்கள் என்ற பெயரைத் தங்கள் பணிக்காலத்தில் ஈட்டியவர்கள்.

இவர்களால் அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முதல் பாகம் இந்தியா முழுவதும் பாராட்டைப் பெற்றிருக்கிறது. சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான முயற்சி எனப் பல தலைவர்களும் அதனைப் பாராட்டியுள்ளனர். குறிப்பாக, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் திரு. சித்தராமையா முதலியோர் இந்த அறிக்கையைப் பாராட்டி, அன்றைய முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எழுதிய கடிதங்களை மூடர்கூடத் த.வெ.க. அரசு படித்துப் பார்க்க வேண்டும்.

கழக அரசில் அமைத்த குழு உறுப்பினர்களின் நேர்மையிலும், அவர்களது அறிக்கையின் தரத்திலும் என்ன முயன்றாலும் குறைகாணவோ குற்றம் சாட்டவோ முடியாது என்பதால் மிக அற்பமான ஒரு காரணத்தைக் கூறி, குழுவைக் கலைத்திருக்கிறார்கள்.

திரு. குரியன் ஜோசப் அவர்கள் தலைமையிலான குழு சட்டத்தின் வழியே அமைக்கப்பட்ட அமைப்பு (statutory body) அல்ல என்றும், ஏற்கெனவே உள்ள தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பணிகளுடன் இது ஒத்துப் போகிறது என்றும் மொன்னையான காரணத்தைக் கூறியுள்ளது த.வெ.க. அரசு.

ஆனால், இவர்கள் கூறும் சட்ட ஆணையமே ஒரு statutory body அல்ல என்பதை 'தி இந்து' நாளேடு சுட்டிக்காட்டியுள்ளதோடு, குரியன் ஜோசப் அவர்கள் அளித்த அறிக்கை மிகவும் போற்றத்தக்கது எனவும் திராவிட மாடல் அரசின் முயற்சிக்குப் புகழ்மாலை சூட்டியுள்ளது.

அதுமட்டுமின்றி, ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய இதற்கு முன்பு அமைக்கப்பட்ட சர்க்காரியா ஆணையம், பூஞ்சி ஆணையம் ஆகிய அமைப்புகளும் statutory body அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

குரியன் ஜோசப் குழு அறிக்கையின் முதல் பாகம் பெற்ற பாராட்டைப் பொறுத்துக் கொள்ள முடியாத காழ்ப்புணர்ச்சியிலும், அடுத்த பாகம் வெளிவந்தால் மாநில உரிமைகள் குறித்த விவாதம் இந்திய அளவில் தீவிரமடையும் என்ற அச்சத்திலும் குழுவைக் கலைத்துள்ளது த.வெ.க. அரசு.

உதயநிதி
உதயநிதி

மாநில உரிமைகளுக்காகக் கழக அரசில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் முயற்சிக்கு மூடுவிழா நடத்தியுள்ள த.வெ.க. அரசின் சின்ன புத்தி அரசியலை வரலாறு மறக்காது, மன்னிக்காது!" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எதிர்கட்சி தலைவர் உதயநிதி வெளியிட்டிருக்கும் பதிவில், " ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்வதற்காக நம் திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை இந்த சோப்ளாங்கி அரசு கலைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில், நிர்வாக - சட்ட மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இடம்பெற்றிருந்த இக்குழுவை கலைத்து இருப்பதன் மூலம் இந்த Dummy CM தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார்.

தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பணிகளைக் காரணம் காட்டி, இந்தக்குழுவை ரத்து செய்திருக்கும் இவர்கள், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேறென்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்?"என்று தவெக அரசுக்கு கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

பொன்னமராவதி: தேங்கும் கழிவுநீர்; நோய் பரவல் அபாயத்தில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட்! - தீர்வு காணப்படுமா?

வரலாற்றுச் சிறப்புமிக்க புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பழைய பேருந்து நிலையத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தற்கா... மேலும் பார்க்க

பெரியார் நூலக விவகாரம்: 'அந்தப் புத்தகங்கள் திமுக ஆட்சியில் வாங்கப்பட்டது அல்ல!' - சேகர்பாபு

கடந்த திமுக ஆட்சியில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட, ‘பெரியார் அறிவுலகம்’ மற்றும் அறிவியல் மையத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி திறந்து வைத்தார். இந்நி... மேலும் பார்க்க

ஒன்றிய - மாநில உறவுக் குழு கலைப்பு: "அதிகாரச் சமத்துவத்திற்கு பேரிழப்பு" - சு.வெங்கடேசன் கண்டனம்

கடந்த திமுக ஆட்சியில் ஒன்றிய-மாநில உறவுகளை ஆராய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. தற்போது அந்தக் குழுவைக் கலைத்துள்ளது தவெக அரசு. தவெக அரசி... மேலும் பார்க்க

OM: '234 தொகுதிகளிலும் டியூஷன் சென்டர்; என்னை அவர் இயக்குகிறார், இவர் இயக்குகிறார் என..!' - தனுஷ்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'ஓம்'. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார். நவம்பர் 20 ஆம் தே... மேலும் பார்க்க

OM: 'சாய் பல்லவி ரொம்ப இன்னசன்ட்டா இருந்தாங்க, ஆனா இப்போ சந்திரமுகி மாதிரி சினிமாவை.!'- தனுஷ்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'ஓம்'. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார். நவம்பர் 20 ஆம் தே... மேலும் பார்க்க

'ஆட்குறைப்பு, நோ ரெஸ்பான்ஸ், கள்ள மௌனம்!' - ஒன்றிய - மாநில உறவு கமிட்டியை தவெக அரசு எப்படி கலைத்தது?

ஒன்றிய - மாநில அரசுகளின் உறவு குறித்து ஆராய திமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான குழுவை தவெக அரசு கலைத்திருக்கிறது. இந்தக் குழு பார்த்து வந்த வேலைகளை மாநில ... மேலும் பார்க்க