செய்திகள் :

"E20 420 ஆக மாறிவிட்டது; நீங்கள் ஆசையாக வாங்கிய கார் பாழாகிறது" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

post image

இந்தியாவில் எரிபொருள் பிரச்னை ஏற்பட்டதிலிருந்து, பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலந்து விநியோகம் செய்யும் நடைமுறை நம் நாட்டிற்குள் வந்துள்ளது.

ஆனால், பெட்ரோலில் 20 சதவிகிதத்திற்கு அதிகமாக எத்தனால் கலந்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

“E20 இப்போது 420 ஆக மாறிவிட்டது - பொதுமக்கள் காரிலிருந்து பெட்ரோலைத் திருடும் வேலை!

மோடி அரசு சொல்கிறது — பெட்ரோலில் 20% எத்தனால் கலந்துள்ளது என்று. ஆனால், கர்நாடக அரசு 7 மாவட்டங்களிலிருந்து பெட்ரோல் மாதிரிகளை எடுத்து அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் சோதனை செய்து பார்த்தது.

பெட்ரோல் + E20
பெட்ரோல் + E20

ஆய்வு முடிவுகள்...

அதன் முடிவுகளைப் பாருங்கள்: 14 மாதிரிகளில் 11-இல் 20%-க்கு அதிகமான எத்தனால் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

IOCL-இல் 31.2%, HPCL-இல் 30.5% எத்தனால்!

IOCL, HPCL, BPCL, நயாரா (Nayara), ஷெல் (Shell) — அரசு நிறுவனமோ அல்லது தனியார் நிறுவனமோ, எல்லாமே நிர்ணயிக்கப்பட்ட எல்லையைத் தாண்டி கலப்படம் செய்துள்ளன.

இதில் கொடுமை என்னவென்றால், இந்த நிறுவனங்களின் சொந்த ஆய்வகங்கள் பெட்ரோலில் எவ்வளவு எத்தனால் கலந்துள்ளது என்ற விவரத்தையே அறிக்கையில் சொல்லவில்லை!

ஆசையாக வாங்கிய கார்...

அதாவது, நீங்கள் அதிக விலை கொடுத்து பெட்ரோல் வாங்குகிறீர்கள், ஆனால் உங்கள் வண்டியின் டேங்கில் எத்தனால்தான் நிரப்பப்படுகிறது. இதில் நஷ்டம் யாருக்கு? உங்களுக்குத்தான்.

இவ்வளவு அதிக எத்தனாலைத் தாங்கும் வகையில் உங்கள் வாகனம் தயாரிக்கப்படவில்லை — இதனால் மைலேஜ் குறையும், அடிக்கடி மெக்கானிக் கடைக்கு அலைய வேண்டி வரும். நீங்கள் ஆசையாக வாங்கிய காரை இந்த பெட்ரோல் பாழ்படுத்துகிறது.

அதுமட்டுமின்றி, பங்கில் உங்கள் வண்டியில் என்ன ஊற்றுகிறார்கள் என்று சொல்லும் மாதிரி எந்தவொரு லேபிளும் இல்லை. மக்களுக்கு எந்தவொரு தேர்வும் வழங்கப்படவில்லை.

உண்மையில் பயன்பெறுவது யார்?

மோடி அவர்களே, நாட்டு மக்களிடம் சொல்லுங்கள் — இந்த நாட்டின் டேங்கில் என்ன ஊத்தப்படுகிறது? பெட்ரோலில் உண்மையிலேயே எவ்வளவு எத்தனால் கலந்துள்ளது?

20%-க்கு அதிகமாக எத்தனால் கலக்கும் நிறுவனங்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?

எங்களது விவாத சவால் இன்னமும் நிலுவையில்தான் உள்ளது. இந்த விஷயத்தையும் அதில் சேர்த்துக்கொள்வோம் — உங்களது இந்தக் கொள்கைகளால் உண்மையில் பயன்பெறுவது யார்?”

'இந்தியாவின் ராமர்களும்...மோடி காலத்திய வலதுசாரி படங்களும்!' - ஓர் அலசல்!

தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருக்கும் 'ராமாயணம்' திரைப்படத்தின் ஒரு புரோமஷன் நிகழ்ச்சி. அதில் திரைப்படத்தில் ராமராக நடித்திருக்கும் ரன்பீர் கபூர், 'எலான் மஸ்க் இப்போதுதான் பறக்கும் காரை கண்டுபிடித்த... மேலும் பார்க்க

பெரியார் அறிவுலகம் நூல் சர்ச்சை: "பொது நூலகங்களை ஆய்வு செய்ய விசாரணை ஆணையம் வேண்டும்" - திருமாவளவன்

Qகோவை பெரியார் அறிவுலகத்தில் உண்மைக்கு முரணான கருத்துகளைக் கொண்ட புத்தகங்கள் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது தமிழ்நாடு முழுவதும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதை எழுத்தாளர் பெருமாள் முருகன் வெளிச்... மேலும் பார்க்க

ஈரான் போர்: "உண்மை எல்லோருக்கும் தெரியும்; நான் மட்டும் தடுத்திருக்காவிட்டால்..!" - ட்ரம்ப்

ஈரான் போரைத் தொடர்வதில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு வேகத்தடை ஏற்பட்டுள்ளது.என்ன காரணம்?அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி (ட்ரம்ப் கட்சியின் எதிர்க்கட்சி) பெரும்பான்மை பெற்றதே இதற்குக் கார... மேலும் பார்க்க

'மக்கள் என் பக்கம்; 234 தொகுதிகளுக்கும் ஒரு திட்டம்' - தனுஷ் சூசகம்!

சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் நடிகர் தனுஷின் 'ஓம்' பட ஆடியோ வெளியீட்டு விழா நடந்திருந்தது. இதில் பேசிய தனுஷ் தன்னை யாரும் பின்னாலிருந்து இயக்கவில்லை எனப் பேசியிருக்கிறார். தனுஷ்கடந்த சில மாதங்களா... மேலும் பார்க்க

"பிரதமர்-உள்துறை அமைச்சர் கையும் களவுமாக பிடிபட்டுவிட்டார்கள்! மறைக்க என்னென்னவோ..!" - காங்கிரஸ்

சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கான நடைமுறைகளைத் தேர்தல் ஆணையம் அடிக்கடி மாற்றுவதைச் சாடி, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்புப் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “... மேலும் பார்க்க