செய்திகள் :

Doctor Vikatan: மழைக்காலம் வந்தாலே வயிறு பிரச்னை பண்ணுதா... உணவு விஷயத்துல தப்பு பண்ணாதீங்க!

post image

Doctor Vikatan: மழைக்காலம் வந்தாலே,வயிறு தொடர்பான பிரச்னைகள் வருகின்றன. அஜீரணம், வயிற்றுப்போக்கு, பசியின்மை... இப்படி ஏதேனும் ஒன்று மாற்றி மாற்றிப் படுத்துகிறது. மழைக்காலத்துக்கும் செரிமான பிரச்னைக்கும் என்ன தொடர்பு...  உணவுப்பழக்கத்தில் எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவர் பாசுமணி.

குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவர் பாசுமணி

மழைக்காலம் என்றாலே சூடாக மசால் வடை, பஜ்ஜி போன்ற ஏதோ ஒன்றுடன் ஒரு கப் டீ அல்லது காபியை ருசிக்க வேண்டும் என்ற உணர்வு பலருக்கும் இருக்கும். அப்படி ரசித்துச் சாப்பிடலாம், தவறில்லை. ஆனால், சூடு, சுவை ஆகியவற்றுடன் நாம் கூடுதலாக கவனிக்க வேண்டியது சுத்தம் மற்றும் சுகாதாரம்.

மழைக்காலத்தில் நமது உணவிலும் நீரிலும் ஏற்படும் கிருமிக்கலப்புதான் உணவு வழியே பரவும் பலவகையான  தொற்றுகளுக்கு வழி திறக்கிறது. நோயைத் தடுக்கும் உணவு என்று  பிரத்யேகமாக  எதுவும் கிடையாது. போதுமான புரதம், அளவான மாவுப் பொருள்கள் (சாதம், சப்பாத்தி போன்றவை), தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்ந்த சமைத்த சரிவிகித உணவுதான் உடலுக்கு இயல்பான நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். எனவே, சாதாரண சரிவிகித சாப்பாட்டோடு சேர்த்து, எக்ஸ்ட்ராவாக வைட்டமின் சி இருக்கும்படியான கொய்யா, நெல்லிக்காய், ஆரஞ்சு போன்ற பழங்களைச் சேர்த்துக்கொண்டால், நமது நோய் எதிர்ப்பு சக்திக்கு கூடுதல் பலன் கிடைக்கும்.

மழைக்காலத்தில் நமது உணவிலும் நீரிலும் ஏற்படும் கிருமிக்கலப்புதான் உணவு வழியே பரவும் பலவகையான தொற்றுகளுக்கு வழி திறக்கிறது.

பழங்கள், காய்கறிகளை எல்லாம் சுத்தமான நீரில் கழுவி, அதன் பிறகே நறுக்கிச் சமைத்துச் சாப்பிட வேண்டும். கீரைகளை ஒன்றுக்கு இருமுறை நன்றாகக் கழுவ வேண்டும். குடிநீரைப் பொறுத்தவரை  தண்ணீரைக் கொதிக்க வைத்து,  ஆற வைத்துப் பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது.

உணவுகளைப் பொறுத்தவரை, அதன் பிராண்ட், தயாரித்த நிறுவனம், உணவின் சூடு, நிறம் மற்றும் தோற்றப் பொலிவு ஆகியவற்றை மட்டும் பார்த்துத் தேர்வு செய்யக்கூடாது. அது எப்படித் தயாரிக்கப்பட்டது, எப்படிப் பாதுகாக்கப்பட்டது மற்றும் நம்மை அடையும் வரை சுத்தமாக இருந்திருக்குமா போன்ற விஷயங்களையும் கவனித்தே வாங்க வேண்டும்.

வேகவைக்காத முட்டை, காய்ச்சாத பால், ஆறவைத்துச் சரியாகக் குளிரூட்டப்படாமல் மீண்டும் சூடுபடுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றில் கவனம் தேவை. அதைவிட முக்கியமாக, உணவு சமைக்கும் மற்றும் தயாரிக்கும் இடங்களில் அதிகபட்ச சுகாதாரம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். 

கழிவறையைப் பயன்படுத்திய பின்பு  சுத்தமான நீரில் சோப்பு போட்டு கைகளை நன்றைக்  கழுவிய பிறகே உணவைக் கையாள வேண்டும்.  சுகாதாரக் குறைபாடு உள்ள இடங்களில் சமைக்கப்படும் உணவுகளின் மூலமாகவோ அல்லது நீரின் மூலமாகவோதான் நமக்கு அதிகமான கிருமித் தொற்றுகள் ஏற்படுகின்றன.  வீட்டிலும் சமைத்த உணவு, சமைக்காத உணவு, காய்கறி அல்லது இறைச்சி வெட்டும் பலகைகள் போன்ற ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பிரித்துச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

கழிவறையைப் பயன்படுத்திய பின்பு சுத்தமான நீரில் சோப்பு போட்டு கைகளை நன்றைக் கழுவிய பிறகே உணவைக் கையாள வேண்டும்.

சமைத்த உணவை ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்குள் சிறு சிறு பாத்திரங்களில்  நிரப்பி,  குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். ஒருமுறை சாப்பிடுவதற்குத் தேவையான அளவை மட்டும் எடுத்துச் சூடுபடுத்திச் சாப்பிட வேண்டும்.  மாறாக, மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதும், ஆறவைத்து மறுபடியும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்துவதும் கூடாது. இப்படி சுகாதாரமான, ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்து வந்தாலே, மழைக்காலத்தில் ஏற்படும் தொற்றுநோய் அபாயத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.


டாக்டர் பாசுமணி:

சென்னை வடபழனி, காவேரி மருத்துவமனையில் செரிமானத்துறை தலைமை மருத்துவர்.


உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
 

Doctor Vikatan: விந்தணு ஆரோக்கியத்தை மேம்படுத்த... இந்த உணவுகளை அவசியம் சேர்த்துக்கொள்ளுங்கள்!

Doctor Vikatan:ஆண்களின் விந்தணு ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்க திறனை மேம்படுத்துவதற்குத் தேவையான சத்துகள், சாப்பிட வேண்டிய உணவுகள், தவிர்க்க வேண்டியவை என ஏதேனும் உள்ளனவா... விந்தணுக்களின் தரத்தை மேம்ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: கால் ஆணி தெரியும்... கைகளிலும் ஆணி பாதிப்பு வரும், தெரியுமா?

Doctor Vikatan:எனக்கு 45 வயதாகிறது. எனக்கு கை விரல்களில் ஆணி ஏற்பட்டுள்ளது. பொதுவாக பாதங்களில் தான் ஆணி வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால், கைகளில், குறிப்பாக விரல்களில் ஆணி வருமா... இது மற்ற ... மேலும் பார்க்க

Doctor Vikatan: மழை, குளிர் காற்று... சட்டென சளி பிடிக்காமலிருக்க இந்த உணவுகளைச் சாப்பிடுங்கள்!

Doctor Vikatan: எங்கள் வீட்டில்யாருக்குமே மழையும் குளிரும் ஒத்துக்கொள்வதில்லை. லேசான தூறலோ, குளிர் காற்றோ பட்டாலே உடனே தும்மல், மூக்கடைப்பு, சளி என சைனஸ் தொடர்பான பிரச்னைகள் படுத்த ஆரம்பித்து விடும். ... மேலும் பார்க்க

Doctor Vikatan: கிட்னி ஸ்டோன் பிரச்னையா... இந்த உணவுகளை மிஸ் பண்ணாம சாப்பிடுங்க!

Doctor Vikatan: என் வயது 42. எனக்கு கடந்த ஒரு வருடமாக கிட்னி ஸ்டோன் பிரச்னை இருக்கிறது. அவ்வப்போது வலி அதிகரித்தால் மருத்துவரைப் பார்த்து மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறேன். மாத்திரைகள் தவிர்த்து, இந்தப்... மேலும் பார்க்க

Doctor Vikatan: அல்சரால் அவதிப்படுகிறீர்களா.... உணவுப்பழக்கத்தை இப்படி மாற்றுங்கள்!

Doctor Vikatan: என் அப்பா கடந்த சில மாதங்களாக அல்சர் எனப்படும் வயிற்றுப் புண் பாதிப்பால் அவதிப்படுகிறார். அல்சர் பாதித்தவர்களுக்கான உணவுத் திட்டம் எப்படி இருக்க வேண்டும்...அவர்கள் எந்தெந்த உணவுகளைத் த... மேலும் பார்க்க

Doctor Vikatan: தொப்பையைக் கரைக்குமா மேஜிக் உணவுகள்... Fat burning foods என்பவை நிஜமா?

Doctor Vikatan: கொழுப்பைக் குறைக்கும் உணவுகள் என ஏதேனும் உள்ளனவா... குறிப்பாக, தொப்பையைக் கரைக்கும்Fat burning foods என சொல்லப்படுபவை உண்மையிலேயே பலன் தருமா... அவை பற்றி விளக்க முடியுமா?பதில் சொல்கிறா... மேலும் பார்க்க