செய்திகள் :

'மக்கள் என் பக்கம்; 234 தொகுதிகளுக்கும் ஒரு திட்டம்' - தனுஷ் சூசகம்!

post image

சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் நடிகர் தனுஷின் 'ஓம்' பட ஆடியோ வெளியீட்டு விழா நடந்திருந்தது. இதில் பேசிய தனுஷ் தன்னை யாரும் பின்னாலிருந்து இயக்கவில்லை எனப் பேசியிருக்கிறார்.

தனுஷ்

கடந்த சில மாதங்களாக நடிகர் தனுஷ் தன்னுடைய ரசிகர் மன்ற கட்டமைப்பை வலுப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறார். திருவள்ளூரில் பிரமாண்டமாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை நடத்தியிருந்தார்.

கோவையில் ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியிருந்தார். சில நாட்களுக்கு முன்பு சென்னையில் மகளிரணி நிர்வாகிகள் கூட்டத்தையும் நடத்தியிருந்தார். இதைத்தொடர்ந்து தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா எனும் பேச்சு எழுந்தது. தனுஷூடன் சில கட்சியினர் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. நேற்று நடந்திருந்த ஓம் படத்தின் ஆடியோ விழாவில் தனுஷ் இது குறித்து மறைமுகமாக பேசியிருந்தார்.

தனுஷ்

அவர் பேசியதாவது, 'என்னைப் பார்த்து இவரை அவங்க இயக்குறாங்க, இவங்க இயக்குறாங்க. இவர் பின்னாடி அவங்க இருக்காங்க, இவங்க இருக்காங்கனு சொல்றாங்க. அப்படியெல்லாம் யாரும் இல்லை. என்னை இயக்குவது இறைவன். என் பின்னால் இருப்பது ரசிகர்கள். மக்கள் என் பக்கம். எண்ணம் போல் வாழ்க்கை. எண்ணம் போல்தான் வாழ்க்கை' என்றார்.

பின்னர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர், '234 தொகுதிகளிலும் மாணவர்களுக்கு இலவச AC கோச்சிங் சென்டர் ஆரம்பிக்கிறீர்கள் என கேள்விப்பட்டோம்' எனக் கேட்க, அதற்கு தனுஷ், 'அப்படி மொத்தமாக எங்களால் தொடங்க முடியுமா என தெரியவில்லை. இப்போதைக்கும் இன்னும் 10-15 நாட்களில் சென்னையில் மூன்று இடங்களிலும் கன்னியாகுமரியில் ஒரு இடத்திலும் தொடங்குகிறோம். அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழகம் முழுக்க கொண்டு செல்ல திட்டமிடுவோம்' என்றார்.

"பிரதமர்-உள்துறை அமைச்சர் கையும் களவுமாக பிடிபட்டுவிட்டார்கள்! மறைக்க என்னென்னவோ..!" - காங்கிரஸ்

சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கான நடைமுறைகளைத் தேர்தல் ஆணையம் அடிக்கடி மாற்றுவதைச் சாடி, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்புப் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “... மேலும் பார்க்க

பெரியார் அறிவுலகம் விவகாரம்: "நூலகத் துறையிலும் Party Fund! மாபெரும் அறிவுத் துரோகம்!" - அருண்ராஜ்

கோவையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொண்ட நூல்கள் இடம்பெற்றிருப்பதை எழுத்தாளர் பெருமாள் முருகன் சுட்டிக்காட்டியிருப்பது இப்போது தமிழ்நாடு முழுவது... மேலும் பார்க்க

`முஸ்தபா ஒன்றும் அரிச்சந்திரன் கிடையாது; கவுன்சிலர் சீட்டுக்குப் பணம் கேட்டவர்!' - செல்லூர் ராஜூ

மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபாவிடம் குதிரை பேர முயற்சியில் ஈடுபட்டதாக அதிமுக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளரும், மதுரை முன்னாள் துணை மேயருமான P.M. மன்னன் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரா... மேலும் பார்க்க

டெல்லி காற்று மாசு பிரச்னை: `பயிர்கள் மட்டுமல்ல, ஆடம்பர கார்களும் காரணம்..!'- உச்ச நீதிமன்றம்

தீபாவளி வந்துவிட்டாலே, இந்தியாவின் தலைநகரான டெல்லியில் மாசு மிகப்பெரிய தலைவலியாக மாறிவிடுகிறது. இது தீபாவளியையொட்டி வெடிக்கப்படும் பட்டாசுகளால் மட்டுமல்ல. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர் மாதங்களில்,... மேலும் பார்க்க