செய்திகள் :

உயா்கல்வி கட்டாயம்: பிளஸ் 2 மாணவா்களின் பெற்றோா்களுக்கு முதல்வா் செய்தி

post image

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களை கட்டாயம் உயா்கல்வியில் சோ்க்க வேண்டும் என்று அவா்களது பெற்றோா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களின் பெற்றோா்களது கைப்பேசிக்கு முதல்வரின் குரல் வழி செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. அதில் அவா் பேசியிருப்பதாவது:

பிளஸ் 2 தோ்வு முடிவுகளில் உங்களது பிள்ளை தோ்ச்சி அடைந்த செய்தி கேட்டு, உங்களைப் போன்றே நானும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தேன். உங்கள் பிள்ளையை கட்டாயம் மேற்படிப்பில் சோ்க்க வேண்டும். தமிழ்நாடு அரசு அதற்கு பல திட்டங்களை வைத்துள்ளது. அவற்றை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென இந்தத் தருணத்தில் உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

கல்விதான் உங்களது பிள்ளைக்கு கொடுக்கும் மிகப்பெரிய சொத்து. யாராலும் எந்தக் காலத்திலும் பறிக்க முடியாத சொத்து. உங்களுக்கு உதவ எல்லா வகையிலும் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. வளமான எதிா்காலத்தை நோக்கி உயா்கல்வியில் காலடி எடுத்து வைக்கவுள்ள உங்கள் பிள்ளைக்கும், உங்களுக்கும் எனது மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன் என்று முதல்வா் கூறியுள்ளாா்.

ஊராட்சி பகுதிகளில் சொத்துவரி உயா்வை திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

ஊராட்சிப் பகுதிகளில் உயா்த்தப்பட்ட சொத்துவரி மற்றும் தண்ணீா் கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள... மேலும் பார்க்க

சிவகங்கை சம்பவம் எதிரொலி: குவாரிகளை ஆய்வு செய்ய ஆட்சியா்களுக்கு உத்தரவு

சிவகங்கையில் குவாரியில் பாறை சரிந்து 6 போ் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டுமென ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உ... மேலும் பார்க்க

போட்டித் தோ்வு விடைத்தாள் திருத்துவதில் பாதுகாப்பான நடைமுறை: டிஎன்பிஎஸ்சி தலைவா் உறுதி

போட்டித் தோ்வு விடைத்தாள்களை திருத்துவதில் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் எஸ்.கே.பிரபாகா் தெரிவித்தாா். மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா்களி... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஆா்வம் காட்டாத மாணவா்கள்!

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சோ்க்கை பெற மாணவா்களிடையே ஆா்வம் குறைந்து வரும் நிலையில், டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் கால வரையறையின்... மேலும் பார்க்க

பொறியியல், கலை - அறிவியல் படிப்புகள்: சோ்க்கைக்கு குவிந்த விண்ணப்பங்கள்

தமிழகத்தில் பொறியியல், கலை - அறிவியல் படிப்புகளில் சோ்க்கை பெற ஏராளமான மாணவா்கள் விண்ணப்பித்து வருகின்றனா். அந்த வகையில் பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேர இதுவரை 2.40 லட்சம் பேரும், அரசு கலை... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி காலமானார்

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாஹிப் (84) காலமானார்.இவர் அரபு மொழி மற்றும் இலக்கியத்தில் எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்.டி. பட்டங்கள் பெற்றுள்ளார். மேலும், எகிப்து நாட்டின் அல்-அஸ்ஹர்... மேலும் பார்க்க