செய்திகள் :

``ஒருதலைபட்சமான தீர்ப்புகள்; நாட்டின் அமைதி சீர்குலையும் அபாயம்"- விசிக எழில் கரோலின் பேட்டி

post image

திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் தூணில் தீபமேற்ற வேண்டும் என கடந்த ஆண்டு முதல் சர்ச்சை தொடங்கியது. இந்துத்துவ அமைப்புகள் தமிழ்நாட்டின் நல்லிணக்கத்தை குலைக்க திட்டமிடுவதாக விசிக, சிபிஐ உள்ளிட்ட தவெக கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து பேசி வருகின்றன. இந்த நிலையில், இந்த வருடம் திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபமேற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது. நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு, 'அது தீபத் தூண் அல்ல; நில அளவைக் கல்' என திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது. மேலும், தொல்லியல் துறை ஆய்வாளர்களும் அது தீபத்தூண் இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

இந்தச் சூழலில் கார்த்திகை தீபத்திருநாளில் திருப்பரங்குன்றத்தில் பதற்றம் நிலவக்கூடும் என்பதால் திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை நீக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ``உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கடுமையாக இருக்கும்.

பக்தர்களின் மத உரிமையைப் பாதுகாக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மலை உச்சித் தூணில் விளக்கு ஏற்றப்பட வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தக் கூடாது என்பதற்காக சீராய்வு மனு தாக்கல் செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகப் பல உத்தரவுகளில் கூறியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு முரணான ஆலோசனைகளை வேறு எந்த அதிகாரியிடம் இருந்து வழங்கப்பட்டாலும் மாவட்ட ஆட்சியர் அவற்றை புறக்கணிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை காரணமாகக் கூறி நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் இருக்க முடியாது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

திருமாவளவன்
திருமாவளவன்

இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் தன் எக்ஸ் பக்கத்தில், ``உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது மாவட்ட ஆட்சியரின் கடமைதான். ஆனால், நீதிபதிகளைப்போல மாவட்ட ஆட்சியர்கள் செயல்படமுடியாது. நீதிபதிகள் ஆவணங்களையும் ஆதாரங்களையும் சான்றுகளையும் சாட்சியங்களையும் அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றவர்கள் ஆவர். ஆனால், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அவ்வாறு செயல்பட இயலாது. மாநில அரசின் நிலைபாட்டினையும் கருத்தில் கொண்டே செயல்பட வேண்டியிருக்கும்.

உயர் அதிகாரிகளுக்கு ஆணையிடும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு. எனவே, மாநில அரசு நீதித்துறை பயங்கரவாதத்துக்கு அஞ்சாமல் துணிந்து இதனை எதிர்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் தமிழ்நாட்டு மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு திருப்பரங்குன்றத்தில் நீதியை நிலைநாட்ட உறுதிகுலையாமல் செயல்பட வேண்டும்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதன் தொடராக சி.பி.எம் கட்சியின் பொதுச் செயலாளர் சண்முகம், ``மாண்புமிகு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் லட்சுமண ரேகையை தாண்டி விட்டார். மாண்புமிகு‌ தலைமை நீதிபதி அவர்கள் உடனடியாக தலையிட வேண்டும்." என தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

சிபிஎம் சண்முகம்
சிபிஎம் சண்முகம்

அதைத் தொடர்ந்து தற்போது அவரின் எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``அது எப்படி ஜி.ஆர்.சுவாமிநாதன் மட்டும்தான் நீதிபதியா? திரும்பத் திரும்ப கோயில் சம்பந்தமான விவகாரங்கள் அல்லது தீபம் தொடர்பான வழக்குகள் அவரிடமே செல்வது எப்படி? ஏற்கெனவே அவரால் விசாரிக்கப்பட்டு இரு நீதிபதிகள் அமர்வுக்குப் போய், அந்தத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிற நிலையில், அதே வழக்கை, அதே நீதிபதி மீண்டும் விசாரிப்பது எப்படி என்பதெல்லாம் மக்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை." எனவும் விமர்சித்திருந்தார்.

இந்தச் சம்பவத்தின் தொடராக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் செய்தியாளர்கள் சந்திப்பில், ``மாவட்ட ஆட்சியரை சேம்பரில் தனியே சந்தித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனிடம் தலைமை நீதிபதி விளக்கம் கேட்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

இப்படி நீதிமன்ற நடவடிக்கைகள் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், விசிக-வின் துணைப் பொதுச் செயலாளரும் வழக்கறிஞருமான எழில் கரோலினிடம் பேசினோம். அவர், ``நீதிபதிகளும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான். இந்தியா என்பது அனைத்துச் சமூகத்தினரும், மதத்தினரும் வாழும் ஜனநாயக, சுதந்திர நாடு. எனவே, நீதிபதிகள் மற்றவர்களின் உணர்வுகளையும், மத நம்பிக்கைகளையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

வாஞ்சிநாதன்

சாதாரண எளிய மக்களைப் பாதிக்கும் வகையில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படக் கூடாது என்ற கருத்தின் அடிப்படையில்தான் 'நீதித்துறை பயங்கரவாதம்' என்ற சொல் முன்வைக்கப்படுகிறது. சில நீதியரசர்கள் 'இது கடவுளின் சித்தத்தால் நடந்தது' எனக் கூறுவதும், பழங்காலச் சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் அல்லது மனுஸ்மிருதி போன்றவற்றின் அடிப்படையில் தற்காலத்தில் தீர்ப்புகள் வழங்குவதும் கூடாது. அது நீதித்துறையின் இயல்புக்கு மாறானது. இந்த நாட்டில் நீதி என்பது புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில்தான் வழங்கப்பட வேண்டும்.

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், அதன் முடிவு விரைவில் தெரியவரும். குறிப்பிட்ட நீதிபதி குறித்துப் பேசுவதைவிட, எந்த மதத்தைச் சேர்ந்தவர் நீதிபதி பதவிக்கு வந்தாலும் அரசியலமைப்புச் சட்டம்தான் அடிப்படை. தங்களது மத நம்பிக்கைகளை முன்னிறுத்தி மக்களின் மீது திணிக்கக் கூடாது. 'கடந்த காலத்தில் செய்த பாவங்களால்தான் இது நடந்தது' என்று கூறுவதற்கு நீதித்துறை தேவையில்லை. நீதித்துறையில் இது போன்ற ஒருதலைபட்சமான போக்குகள் சிலரிடம் தென்படுகின்றன. ஒருவேளை மதம் சார்ந்த அல்லது ஒருதலைபட்சமான தீர்ப்புகள் தொடர்ந்தால், நாட்டின் ஜனநாயகமும் அமைதியும் சீர்குலையும் அபாயம் உள்ளது.

எழில் கரோலின்
எழில் கரோலின்

நீதியரசர்கள் வழங்கும் தீர்ப்புகள் அன்றைய நிகழ்வுகளோடு முடிந்துவிடுவதில்லை. அவை ஆவணங்களாகப் பாதுகாக்கப்பட்டு, எதிர்காலத் தலைமுறைகளுக்கு வழிகாட்டிகளாகவும் மேற்கோள்களாகவும் மாறுகின்றன. எனவே, எந்த மதத்தினரையும் மனரீதியாகவோ உடல்ரீதியாகவோ பாதிக்காத வகையில் நீதிபதிகள் மிகுந்த கவனத்துடன் தீர்ப்புகளை வழங்க வேண்டும். ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு மதத்தின் மீது ஈர்ப்பு இருக்கலாம். ஆனால் எந்த மனிதருக்கும் 'மதம் பிடிக்கக்' கூடாது" எனக் குறிப்பிட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

ஓடிய அமைச்சர்; கள்ளக்குறிச்சியை அடுத்து பல்லடம்? டு கனிமொழி Vs உதயநிதி வரை... கழுகார் அப்டேட்ஸ்

சுழன்றடிக்கும் சர்ச்சையில் பல்லடம் த‌.வெ.க எம்.எல்.ஏ ராம்குமார்!அ.தி.மு.க-வின் 25 ஆண்டுகாலக் கோட்டையான பல்லடத்தில், அக்கட்சி வேட்பாளர் பரமசிவத்தை 37 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திக் கவனம் ஈ... மேலும் பார்க்க

`கலெக்டர் சிறைக்குச் செல்வது உறுதி!' - திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் வெடிக்கும் இந்து முன்னணி!

திருப்பரங்குன்றத்தில் ஆகம முறைப்படி தீபம் ஏற்றப்பட்டதன் பின்னணியில் சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு, நீதிமன்ற அவமதிப்பு என எதிரெதிர் வாதங்கள் அனல் பறக்கத் தொடங்கியிருக்கின்றன!மதுரையை அடுத்துள்ள அறுபடை வீட... மேலும் பார்க்க

புகையால் சூழப்பட்டிருக்கும் சிவகங்கை அரசு மருத்துவமனை; முட்டி மோதும் நிர்வாகங்கள்.. தீர்வுதான் என்ன?

ஊரு தூங்கும் நேரம் ஊருக்கு நடுவே...உசுர கொல்லும் புகை கொழுந்துட்டு எரிய.. என்ற வரிகளை ஒருவர் பாடுவதுபோல காண்போர் மனதை பதைபதைக்க வைக்கும் காணொளிகள்,`seemai vibes' என்ற வலைதளப் பக்கத்தில் வெளியாகின. காண... மேலும் பார்க்க

"சிலந்தி வலைக்குள் சிக்கிக்கொண்ட உங்களுக்கு இனி சிக்கல் தான் விஜய் அவர்களே.!" - நயினார்

"சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையே ‘Accused’ ஆக்கி வைத்துள்ள திரு. ஜோசப் விஜய் அவர்கள் எவ்வளவு ஆபத்தானவர்? இப்படிப்பட்ட ஒருவர் இனியும் தமிழகத்தின் முதல்வராகத் தொடரலாமா?" எ... மேலும் பார்க்க

அமித் ஷா புதுப்பித்த பழைய கூட்டணி; ஆம் ஆத்மியின் ரகசிய வாக்கு ஆயுதம்! - தகிக்கும் பஞ்சாப் களம்!

பாஜக–அகாலி தளம், ஆறு வருடங்களுக்கு முன் பிரிந்தவர்கள், இன்று மேடையில் கைகோர்த்து நிற்கிறார்கள். 2022-ல் 117 தொகுதிகளில் இவர்கள் இருவரும் சேர்ந்து வென்றது வெறும் 5 இடங்கள். இது தோல்வியை மறைக்கும் கூட்ட... மேலும் பார்க்க