செய்திகள் :

கல் குவாரிகளால் கூடங்குளம் அணு உலைக்கு ஆபத்து! -வெடிகளின் அதிர்வுகளை ஆய்வு செய்ய விவசாயிகள் கோரிக்கை

post image

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகாவட்டும் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 4 அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

ஆனாலும், அணு உலை அமைந்துள்ள வளாகத்துக்கு அருகிலேயே கல் குவாரிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. குவாரிகளுக்கு வைக்கப்படும் வெடிகள் வெடிக்கும் போது ஏற்படும் நில அதிர்வுகளால் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் வாழ்கின்றனர்.

இந்த நிலையில், ராதாபுரம் கால்வாய் கடைமடை விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகனிடம் மனு அளித்தனர். அதில்,"​கூடங்குளம் அணுமின் நிலையம் நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்பு அமைப்பாக இருப்பதால், அதன் அருகில் நடைபெறும் வெடிப்பு பணிகள் மற்றும் அவற்றால் ஏற்படும் நில அதிர்வுகள் குறித்து முழுமையான அறிவியல் ஆய்வு மேற்கொள்வது மிகவும் அவசியம்.

கூடங்குளம் அணு உலை

மக்கள் பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். எனவே,, கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் குவாரி வெடிப்புகளின் தாக்கம் குறித்து உரிய நிபுணர் குழுவின் மூலம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அந்த ஆய்வு நிறைவடையும் வரை புதிய குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து ராதாபுரம் கால்வாய் கடைமடை விவசாயிகள் சங்கத்தி செயலாளர் டோனி கூறுகையில், "ராதாபுரம் தொகுதிக்கு உள்பட்ட இருக்கன்துறை கிராமத்தில் தற்போது 17 குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர புதிதாக 10 குவாரிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட உள்ளது. இந்த குவாரிகள் அனைத்தும் கூடங்குளம் அணு உலையிலிருந்து 5முதல் 7 கி.மீ தூரத்திலேயே இருக்கின்றன.

விவசாயிகள் கோரிக்கை

இந்தப் பகுதியில் ஏற்கெனவே இரண்டு முறை பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள குவாரிகளில் வைக்கப்படும் வெடிகள் சக்தி வாய்ந்தவையாக இருப்பதால் கடுமையான நில அதிர்வு ஏற்படுகிறது.

குவாரிகளில் வைக்கப்படும் வெடிகளால் கூடங்குளம் அணு உலைக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இருக்கன்துறை கிராம பஞ்சாயத்து சார்பாக புதிய குவாரிகள் மற்றும் கிரஷர்களுக்கு அனுமதி கொடுக்கக்கூடாது என கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், புதிய கல் குவாரிகளுக்கு அனுமதி கொடுக்கக்கூடாது என்பதை வலியுறுத்தினோம்" என்றார்.

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள்; அரசின் ஈடு இணையற்ற சாதனை"- சீமான் கண்டனம்

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதுதான் தவெக கொடுங்கோன்மை அரசின் ஈடு இணையற்ற சாதனை" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அ... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம் குறித்த சுற்றறிக்கை: "பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்ததா தவெக அரசு?"- கனிமொழி

காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சில நிமிடங்களிலேயே இந்த ... மேலும் பார்க்க

`ஆளுங்கட்சி ஆகிவிட்டோம்' தவெக கூட்டணியை உறுதி செய்த திருமா; பாமக-வுக்கு வைத்த செக்! - பின்னணி என்ன?

தவெக அமைச்சரவையில் அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்றிருந்தாலும் எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வந்தார். 'திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது' என்று திமுகவிற... மேலும் பார்க்க

மேகமலை: `துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், இலவம் பஞ்சு தோட்டங்களையும் முழுமையாக அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான உத்... மேலும் பார்க்க

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?'- திமுக கேள்வி

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?' என திமுக கேள்வி எழுப்பியிருக்கிறது.இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், `நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க

`மூன்று தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆணவத்தோடு டி.கே.சிவக்குமார் பேசுவதா?' - சீமான் கண்டனம்

`கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித்தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது, உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்... மேலும் பார்க்க