செய்திகள் :

``காசு வாங்கிக்கொண்டு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிறார்" - விஜய் சேதுபதியைச் சாடும் கனிமொழி சந்தோஷ்

post image

பிக்பாஸ் 10-வது சீசனின் தொகுப்பாளராக இருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. கடந்த வார நிகழ்ச்சியில், பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த நிகழ்வுகளை விமர்சிக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்திருந்தார். ஆனால், அது ஆளும் அரசை விமர்சிப்பதாக இருக்கிறது என்று சமூக ஊடகங்களில் தவெக-வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, விஜய் டிவி, `தனிப்பட்ட முறையில் யாரையும் குறிப்பிடவில்லை. நிகழ்ச்சியில் நடந்த நிகழ்வு குறித்தே பேசப்பட்டது' என்ற ரீதியில் விளக்கமளித்திருந்தது. இந்த நிலையில், கோவையில் எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``பிக்பாஸ் ஒரு கேளிக்கை நிகழ்ச்சி மட்டுமே. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'மகாராஜா' படத்தில் அவர் நடிப்பதற்கு முன்னால் அவர் எப்படி இருந்தார் என்பதை கட்டங்களைப் பார்த்து சொல்லியிருந்தேன். ரூ.20 கோடியில் எடுக்கப்பட்ட மகாராஜா திரைப்படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தார் விஜய சேதுபதி.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

படம் வெளியானப் பிறகு அதிலிருந்து ஒரு பங்கை ஊதியமாகப் பெற்றுக்கொண்டார். இப்போது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஜாக்பாட் அடித்திருக்கிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரூ.75 - ரூ80 கோடிவரை சம்பளம் வாங்கும் அவர், அதைவிடக் கூடுதலாக மாற்றுக்கட்சியினர் பணம் கொடுக்கும்போது, அவர் நடிகர் தானே... அவருக்கு வருமானம் வேண்டுமல்லவா? அதனால் கொடுத்ததற்காக அவர் பேசியிருக்கிறார். நிறையவே பேசிவிட்டார். இதற்கு விஜய் டிவி மறுப்பு தெரிவித்திருக்கிறது. ஆனால், விஜய் சேதுபதி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் வேலையை செய்திருக்கிறார்.

யார் வேண்டுமானாலும் அரசியல் விமர்சனம் செய்யலாம். அது அவர்களின் அரசியல், கருத்துரிமை. ஆனால் கொஞ்சம் பார்த்து பேசினால் நன்றாக இருக்கும். ஏனெனில் எங்கள் அரசு வெளிப்படைத் தன்மையுடன் இயங்குகிறது. அவர் சொல்வதால் எதுவும் மாறப்போவதில்லை. அவர் விமர்சிக்கும்போது எங்கள் தலைவரின் பெயரைச் சொல்லி பேசச் சொல்லுங்கள் பார்க்கலாம். அவருக்கு மக்களே பதில் சொல்வார்கள். எனவே, இந்த விமர்சனங்களை ஒரு பெரிய விஷயமாக பார்க்கவில்லை. அவர் தன் பிழைப்புக்காக செய்கிறார். பிக்பாஸ் பார்ப்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த இப்படியெல்லாம் செய்கிறார்கள். இத்துடன் நிறுத்தினால் நல்லது" என்றார்.

இடைத்தேர்தல்: "இடதுசாரிகள் தனித்துப்போட்டி என முன்பே சொல்லியிருந்தால்..." - சீமானின் திட்டம் என்ன?

சுதந்திரப் போராட்ட தியாகி ராமசாமி படையாட்சியாரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் அவரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர... மேலும் பார்க்க

"விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லை; இதோடு விட்டால் நன்றாக இருக்கும்" - கனிமொழி சந்தோஷ்

கோவை செரையம்பாளையம் பகுதியில் கொரானா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து சேவையை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் மீண்டும் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் ப... மேலும் பார்க்க

ஆவின் விற்பனையைக் குறைத்த நிர்வாகம்; தட்டுப்பாடு ஏற்படும் நிலையா? பாதிக்கப்படும் பால் முகவர்கள்

"நிதி இழப்பைக் காரணம் காட்டி மீண்டும் 10 சதவிகித பால் விநியோகத்தைக் குறைத்த ஆவின் நிர்வாகத்தின் உத்தரவால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலையும், பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழலும் ஏற்பட... மேலும் பார்க்க

கேரளம்: தொலைக்காட்சி அலுவலகத்துக்குள் புகுந்து நேரலையை முடக்கிய போலீஸ்; பினராயி விஜயன் கண்டனம்

கேரள மாநிலம் கொச்சியில் இயங்கி வரும் ‘ரிப்போர்ட்டர் டிவி’ தலைமை அலுவலகத்தில் ​இன்று அதிகாலை சுமார் 5:50 மணியளவில், திருக்காக்கரை உதவி ஆணையர் பினோய் சந்திரன் தலைமையில் லத்திகள் மற்றும் கேமராக்களுடன் போ... மேலும் பார்க்க

ரெய்டு: "'ஹிட்லர்' முதல்வர், 'கோயபல்ஸ்' அமைச்சர்கள்; எல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி"- அன்பில் மகேஸ்

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கின் தொடர்ச்சியாகவே அன்பில் மகேஸ் வீட... மேலும் பார்க்க

இந்திய கப்பலை மோதிய பாகிஸ்தான் கப்பல்: "இஸ்லாமாபாத்திடம் 'இதை' சொல்லுங்க" - இந்திய அரசு எச்சரிக்கை

நேற்று (செப்டம்பர் 15) மாலை, வழக்கம் போல, வடக்கு அரபிக்கடலில் இந்தியக் கடற்படையின் முன்னணிப் போர்க்கப்பல் ஒன்று ரோந்துப் பணியில் இருந்திருக்கிறது.விபத்துஅப்போது அந்தக் கப்பலை நோக்கி வேகமாக பாகிஸ்தான் ... மேலும் பார்க்க