செய்திகள் :

இந்திய கப்பலை மோதிய பாகிஸ்தான் கப்பல்: "இஸ்லாமாபாத்திடம் 'இதை' சொல்லுங்க" - இந்திய அரசு எச்சரிக்கை

post image

நேற்று (செப்டம்பர் 15) மாலை, வழக்கம் போல, வடக்கு அரபிக்கடலில் இந்தியக் கடற்படையின் முன்னணிப் போர்க்கப்பல் ஒன்று ரோந்துப் பணியில் இருந்திருக்கிறது.

விபத்து

அப்போது அந்தக் கப்பலை நோக்கி வேகமாக பாகிஸ்தான் கப்பற்படைக் கப்பல் ஒன்று வந்துள்ளது. பாகிஸ்தான் கப்பலின் வேகத்தால் இரண்டு கப்பல்களும் மோதிக்கொண்டுள்ளன.

ஆனால், இந்த விபத்தில் இரு கப்பல்களுக்கும் எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தான் கப்பல் தொழில்முறையை ஒத்து இயக்கப்படாததாலும், பாதுகாப்பற்ற முறையில் இயக்கப்பட்டதாலும்தான் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தான்

இந்திய வெளியுறவுத் துறையின் எதிர்ப்பு

தகவல்களின் படி, இந்த மோதலில் சம்பந்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கப்பல் ‘பிஎன்எஸ் ஹுனைன்’. இது பாகிஸ்தான் கடற்படையின் ‘யார்மூக்’ வகையைச் சேர்ந்த ஒரு ரோந்துப் போர்க்கப்பல் ஆகும்.

இந்தச் சம்பவத்திற்கு பாகிஸ்தானிடம் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளது இந்திய வெளியுறவுத் துறை.

இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...

“டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையத்தின் இடைக்காலத் தூதர் இன்று இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு அழைக்கப்பட்டார்.

அவரிடம் இந்தியக் கடற்படைக் கப்பலுடன் மோதலுக்கு வழிவகுத்த பாகிஸ்தான் கடற்படையினரின் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் தொழில்முறையற்ற செயல்பாடு குறித்து கடுமையான கண்டனம் பதிவு செய்யப்பட்டது.

சர்வதேசக் கடல்பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தால் பெரிய அளவில் எவ்விதச் சேதமும் ஏற்படவில்லை என்றாலும், பாகிஸ்தான் கடற்படைக் கப்பலின் இந்தச் செயல்பாடு, 1991 ஏப்ரலில் கையெழுத்தான ‘இராணுவப் பயிற்சிகள், நகர்வுகள் மற்றும் படைகளின் இடப்பெயர்வு குறித்த முன்அறிவிப்புக்கான இந்தியா-பாகிஸ்தான் ஒப்பந்தத்தின்’ பிரிவு 10-க்கு முற்றிலும் எதிரானதாகும்.

இந்தியா
இந்தியா

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக, அனைத்து இராணுவப் பிரிவுகளும் தகுந்த கவனத்துடனும், இருதரப்பு ஒப்பந்த விதிகளுக்கு மதிப்பளித்தும் செயல்பட வேண்டியதன் அவசியத்தை சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு பாகிஸ்தான் இடைக்காலத் தூதருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதேபோன்ற கண்டனப் பதிவை இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் வெளியுறவு அமைச்சகத்திடமும் பதிவு செய்யுமாறு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய இடைக்காலத் தூதருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது”. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லை; இதோடு விட்டால் நன்றாக இருக்கும்" - கனிமொழி சந்தோஷ்

கோவை செரையம்பாளையம் பகுதியில் கொரானா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து சேவையை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் மீண்டும் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் ப... மேலும் பார்க்க

ஆவின் விற்பனையைக் குறைத்த நிர்வாகம்; தட்டுப்பாடு ஏற்படும் நிலையா? பாதிக்கப்படும் பால் முகவர்கள்

"நிதி இழப்பைக் காரணம் காட்டி மீண்டும் 10 சதவிகித பால் விநியோகத்தைக் குறைத்த ஆவின் நிர்வாகத்தின் உத்தரவால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலையும், பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழலும் ஏற்பட... மேலும் பார்க்க

கேரளம்: தொலைக்காட்சி அலுவலகத்துக்குள் புகுந்து நேரலையை முடக்கிய போலீஸ்; பினராயி விஜயன் கண்டனம்

கேரள மாநிலம் கொச்சியில் இயங்கி வரும் ‘ரிப்போர்ட்டர் டிவி’ தலைமை அலுவலகத்தில் ​இன்று அதிகாலை சுமார் 5:50 மணியளவில், திருக்காக்கரை உதவி ஆணையர் பினோய் சந்திரன் தலைமையில் லத்திகள் மற்றும் கேமராக்களுடன் போ... மேலும் பார்க்க

ரெய்டு: "'ஹிட்லர்' முதல்வர், 'கோயபல்ஸ்' அமைச்சர்கள்; எல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி"- அன்பில் மகேஸ்

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கின் தொடர்ச்சியாகவே அன்பில் மகேஸ் வீட... மேலும் பார்க்க

``காசு வாங்கிக்கொண்டு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிறார்" - விஜய் சேதுபதியைச் சாடும் கனிமொழி சந்தோஷ்

பிக்பாஸ் 10-வது சீசனின் தொகுப்பாளராக இருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. கடந்த வார நிகழ்ச்சியில், பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த நிகழ்வுகளை விமர்சிக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்திருந்தார். ஆனால், அது ஆ... மேலும் பார்க்க

புதிய தலைமை செயலகம்: `ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட மிகப்பெரிய போராட்டத்தை..!'- கொதிக்கும் மீனவர்கள்

நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, 110-வது விதியின் கீழ் ரூ.1,200 கோடி மதிப்பில் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என தமிழக முதல்வர் விஜய் அறிவித்தார். இதைத் தொடர்ந்து,... மேலும் பார்க்க