செய்திகள் :

கார் மோதியதில் சாலையோரம் நின்ற 8 பேர் பலி: ஆம்புலன்ஸ்க்கு காத்திருந்து உயிரிழந்த தொழிலாளர்கள்

post image

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தின் லெஹ்ராககா பகுதியில் சோடியன் கிராமத்திற்கு அருகில் உள்ள ஜக்கல் சாலையில் சாலை கட்டுமானத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீது மோதியது. காரின் டிரைவர் விபத்தை ஏற்படுத்தியவுடன் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து ஓடிவிட்டார். இதையடுத்து பக்கத்து தொழிற்சாலையில் இருந்து தொழிலாளர்கள் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில் சம்பவ இடத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் 3 பேர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார்கள். இறந்தவர்களில் 6 பேர் பெண்கள் ஆவர். சாலை கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த அனைவரும் ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில் பணியாற்றியவர்கள் என்று கூறப்படுகிறது. இறந்தவர்களில் 7 பேர் அலிஷெர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

விபத்தை நேரில் பார்த்தவர்கள்

விபத்து ஏற்பட்டவுடன் மீட்பு பணிக்காக வந்த பக்கத்து தொழிற்சாலை ஊழியர் ஹர்விந்தர் சிங் இது குறித்து கூறுகையில்,''நான் தொழிற்சாலையிலிருந்து வந்தபோது, ​​அங்கு கிராம மக்கள் யாரும் இல்லை. அந்த இடத்தில் ஐந்து முதல் ஆறு உடல்கள் மட்டுமே கிடந்தன. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏழைத் தொழிலாளர்கள்''என்று தெரிவித்தார்.

பணியில் இருந்த போலீஸார் மருத்துவ வாகனத்திற்கு அழைப்பு விடுத்தும், ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வர கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆனதாக அவர் தெரிவித்தார். மற்றொருவர் இது குறித்து கூறுகையில், ''அதிகாரிகள் காயம் அடைந்தவர்களை மருத்துமனைக்கு கொண்டு செல்லாமல் நடைமுறைச் சடங்குகளை முடிப்பதில் பிடிவாதமாக இருந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் சாலையோரத்தில் வலியால் துடித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸுக்காகக் காத்திருந்தபடியே உயிரிழந்தனர். அவர்களில் பலர் அதிக இரத்தப்போக்கினால் உயிரிழந்தனர்" என்று அவர் கூறினார். போலீஸ் வந்த பிறகுதான் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் தப்பிச்சென்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Kolkata Stampede: ``என் அம்மா என் கண்முன்பே உயிரை விட்டார்..!" - தாயை பறிகொடுத்த இளைஞரின் துயரம்!

மேற்கு வங்க மாநிலம், வடக்கு கொல்கத்தாவில் உள்ள சோா்பாகன் பகுதியில் நேற்று துா்கா பூஜை பந்தல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பந்தலைப் பாா்வையிட நுழைவாயில் பகுதியில் ஏராளமான மக்கள் காத்திருக்கின்றனர். த... மேலும் பார்க்க

நள்ளிரவில் பக்தர்கள் மீது ஏறிய லாரி; 15 பேர் பலி... நவராத்திரி விழாவில் சோகம்!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ளது புகழ்பெற்ற சீத்லா மாதா கோயில். நேற்று நவராத்திரியை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டுக்காக திரண்டிருந்தனர். இந்த நிலையில், நள்ளிரவு சுமார் 1:30 ம... மேலும் பார்க்க

சாலையோரம் மீன் விற்ற பெண்... கான்க்ரீட் இயந்திரம் மோதி பலி - தொட்டியத்தில் அரங்கேறிய சோகம்!

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள சீலைப்பிள்ளையார் புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராணி (வயது: 47). இவர், திருச்சி - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக மீன்கடை நடத்தி வந்தார். இந்நிலையி... மேலும் பார்க்க

பீகார்: கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து; சிறார் உட்பட 11 பேர் நீரில் மூழ்கி பலியான சோகம்

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேர் பக்கத்து கிராமத்தில் நடக்கும் விருந்து ஒன்றில் பங்கேற்பதற்காக படகு ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ரகோபூர் என்ற இடத்தில் கங்கை ஆற்றில் ஒரு கரை... மேலும் பார்க்க

'எல்லாம் எங்க அப்பா பார்த்துப்பார் ' போதையில் கார் ஓட்டி 3 உயிரைப் பறித்த தொழிலதிபர் மகன்!

கேரளத்தைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனமான ‘இஹா டிசைன்ஸ்’ சேர்மன் சஜீவ் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் நூஹா ஆகியோரின் மகனான சுஹைல் சஜீவ்(19). இவர் காக்கநாடு ராஜகிரி கல்லூரியில் பி.காம் பயின்று ... மேலும் பார்க்க

சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்; அலையில் அடித்துச் செல்லப்பட்ட 8 மாணவர்களுக்குச் நேர்ந்த சோகம்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்த வின்னர்ஸ் அகாடமி என்ற கோச்சிங் மையத்தில் படிக்கும் மாணவர்கள் அடங்கிய 48 பேர் கொண்ட குழு மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான திவேகர்... மேலும் பார்க்க