செய்திகள் :

`இடைத்தேர்தலில் அது நடக்காமல் போயிருந்தால் திமுக டெபாசிட்கூட வாங்கியிருக்காது!' - துரை வைகோ

post image

திருச்சி, மன்னார்புரம் பகுதியில் புதிய பேருந்து நிறுத்தத்தை திருச்சி எம்.பி துரை வைகோ திறந்து வைத்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர்,

"திருச்சி மெயின் கார்டு கேட் அருகே ரயில்வே மேம்பால பணிகள் தாமதமாக நடைபெற்று வருகின்றன. ரயில்வே துறையிலும் சில பிரச்னைகள் உள்ளன. மாநகராட்சியிலும் பிரச்னைகள் உள்ளன. அவற்றை சரி செய்து விரைந்து அந்த பாலப் பணியை முடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன். இது தொடர்பாக அனைத்து தரப்பையும் வைத்து ஒரு கூட்டத்தை நடத்த உள்ளோம். இசைமைப்பாளர் தேவா மூலம் கானா பாடல்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது. அவருடைய இறப்பு தமிழ் திரையுலகுக்கு பேரிழப்பு. அவர் மறைவிற்கு ம.தி.மு.க சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க-வின் தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக இருந்த பொழுது இந்தியா முழுவதும் எஸ்.ஐ.ஆர் மூலம் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.

durai vaiko

ஆனால், தமிழ்நாட்டில் அது நடைபெறவில்லை. அதற்கு காரணம் தி.மு.க. அந்த முறைகேட்டை நடக்கவிடவில்லை. இந்த சூழலில் எஸ்.ஐ.ஆர்-தான் தி.மு.க தோல்விக்கு காரணம் என ஒரு கருத்தை பரப்பி வருகிறார்கள். தி.மு.க-வினர் தோல்வியை முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும். பெருந்தலைவர் காமராஜர், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உள்ளிட்டோர் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார்கள். அதுபோல, தி.மு.க-வும் தோல்வி அடைந்துள்ளது. அதை அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். SIR-ஆல் தான் நாங்கள் தோற்றோம் என கூறுவது ஜனநாயகத்திற்கு எதிரானது. மக்கள் தீர்ப்புக்கு எதிரானது.

விஜய் வெற்றியை கொச்சைப்படுத்துவது தவறான அணுகுமுறை. மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தி.மு.க-வினர் கூட்டணி இல்லாமல் போட்டியிட்டு 30 சதவிகித வாக்குகளை பெற்றதாக கூறுகிறார்கள். ஆனால், பிரேமலதா விஜயகாந்த், ஈஸ்வரன், ஜவாஹிருல்லா, தமீமுன் அன்சாரி உடைய கட்சிகள் தி.மு.க கூட்டணியில் உள்ளன. அவர்கள் தேர்தல் பிரசாரம் செய்தார்கள். அவர்களால் தான் கூடுதலாக 15 ஆயிரம் வாக்குகள் தி.மு.க-விற்கு கிடைத்துள்ளது. இல்லையென்றால் இடைத்தேர்தலில் தி.மு.க-விற்கு டெபாசிட்கூட கிடைத்திருக்காது. இந்த தேர்தலில் தோற்றாலும், நாங்கள் வெற்றி பெற்றோம் எனக் கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள். தி.மு.க கூட்டணியில் நாங்கள் ஏமாந்தது போல் தற்போது கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏமாற வேண்டாம். தி.மு.க மக்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்றாலும் நல்லது, கெட்டதற்கு என ரூ. 100 கோடிக்கு மேல் இரண்டு தொகுதிகளிலும் செலவு செய்துள்ளார்கள். ஆனால், ஒரு காசு கூட செலவு செய்யாமல் த.வெ.க இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 5 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் ம.தி.மு.க போட்டியிடுவது குறித்து எங்கள் கட்சி தலைமையும், கூட்டணி கட்சி தலைவர் விஜயின் முடிவு எடுப்பார்கள்" என்றார்.

ஆயுத பூஜை: ``உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும்" - முதல்வர் விஜய் வாழ்த்து

நவ​ராத்​திரி நிறை​வாக கொண்​டாடப்​படும் சரஸ்​வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி பண்​டிகைகளை முன்​னிட்டு தமிழக மக்​களுக்கு தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். முதல்வர் விஜய் தன் அதிகாரப்பூர்வ பக்கத்தில... மேலும் பார்க்க

பினராயி விஜயனை கைதுசெய்ய தீவிரம் காட்டும் அமலாக்கத்துறை - கொந்தளிக்கும் சி.பி.எம்!

கொச்சி சி.எம்.ஆர்.எல் என்ற தனியார் தாதுமணல் கம்பெனியிடம் இருந்து மகள் வீணாவின் எக்ஸாலாஜிக் நிறுவனம் மூலம் ​முதல்வராக இருந்த சமயத்தில் பினராயி விஜயன் ரூ.3.28 கோடி லஞ்சம் பெற்றதாகவும், அதை ஹவாலா பணமாக ம... மேலும் பார்க்க

``தொடரும் கொலைகள்: நான் அப்போதே சொன்னேன்" - ஸ்டாலின் சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் காவல்துறை தள்ளாடுவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``அலட்சியத்தால் தொடர... மேலும் பார்க்க

அதிபர் தேர்தல் அரசியலா?: `பிரான்ஸ் எரிகிறது; கடுமையான நடவடிக்கை உண்டு' - இம்மானுவேல் மக்ரோன்!

விலைவாசி உயர்வு, மோசமான கல்விச் சூழல் போன்றவற்றைக் கண்டித்து பிரான்ஸ் நாடு முழுவதும் மக்கள் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் போது ஆங்காங்கே கலவரமும், கடைகளில் சூறையாடலு... மேலும் பார்க்க

கேரளம்: பேக்கரியில் ஹார்ட்டி ஒயின் விற்பனை சர்ச்சை; கிளம்பிய எதிர்ப்பு... மாற்றப்பட்ட கலால் அதிகாரி!

கேரள மாநிலம் சாலக்குடியில் உள்ள எம்.ஆர்.சி என்ற பிரபல பேக்கரியில் 15 சதவீதம் வரை ஆல்கஹால் அடங்கிய வீரியமிக்க ஹார்ட்டி ஒயின் விற்பனை தொடங்கப்பட்டது. இது குறித்த செய்திகள் நேற்று வெளியானதும் சமூக ஆர்வலர... மேலும் பார்க்க