செய்திகள் :

ஆந்திர சிறுமிக்கு கேரள ஸ்பாக்களில் நடந்த கொடூரம்; பாலியல் தொழில் கும்பலிடம் விற்ற சித்தி கைது!

post image

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, தாய்-தந்தை இருவரும் உயிரிழந்ததைத் தொடர்ந்து தனது சித்தியின் பாதுகாப்பில் இருந்து வந்துள்ளார். ஆனால், பணத்திற்கு ஆசைப்பட்டு ஆதரவற்ற அச்சிறுமியை பாலியல் நெட்வொர்க் கும்பலிடம் ஒப்படைத்துள்ளனர் அவரது சித்தியும் சித்தப்பாவும். முதலில் சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள ஸ்பா மையங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். பின்னர் கேரளாவுக்குக் கொண்டு சென்று பல்வேறு இடங்களில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். ​கேரள மாநிலம் கோவளத்தில் உள்ள ஸ்பா ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது, அங்கு வாடிக்கையாளராக வந்த ஒரு இளைஞருடன் அச்சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு நடக்கும் சித்ரவதைகளில் இருந்து தப்பிக்க எண்ணிய சிறுமி, அந்த இளைஞரின் உதவியுடன் அங்கிருந்து ரகசியமாக வெளியேறினார். தங்களுக்கு வருமானம் தரும் சிறுமி தப்பிச் சென்றதால் ஆத்திரமடைந்த சித்தி, அச்சிறுமியைக் காணவில்லை என போலீஸில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பதிவு செய்து தேடுதல் வேட்டையில் இறங்கிய கோவளம் போலீஸார், விரைந்து செயல்பட்டு சிறுமியைக் கண்டுபிடித்து மீட்டனர். பின்னர் சிறுமியை சித்தியிடம் ஒப்படைக்க முற்பட்டபோது அந்த சிறுமியிடம் இரண்டு வெவ்வேறு ஆதார் அட்டைகள் இருந்ததும், அதில் வயதுகள் மாற்றி மாற்றிக் குறிப்பிடப்பட்டிருந்ததும் போலீஸாரின் கவனத்திற்கு வந்தது.

​இதையடுத்து, அச்சிறுமியைத் தனியாக அழைத்துச் சென்று மகளிர் போலீஸார் விசாரணை நடத்தியபோது, சித்தியும், சித்தப்பாவும் சிறுமியை பாலியல் கும்பலிடம் விட்டு பணம் சம்பாதித்துவந்த கொடுமை அம்பலமானது. உடனே, கோவளம் காவல் நிலைய ஆய்வாளர் வி.எம்.ஸ்ரீகுமார் மற்றும் நிலையப் பொறுப்பு அதிகாரி ஷீனா தலைமையிலான தனிப்படை போலீஸார் அதிரடி நடவடிக்கையைத் தொடங்கினர். தொழிச்சல் மற்றும் சப்பாத்து ஆகிய பகுதிகளில் ‘ஆயுர்கேரளா ஸ்பா’ நடத்தி வந்த ஆலப்புழா நடுவேல்முறி பகுதியைச் சேர்ந்த சஜித் குமார் (47), கோவளம் அவாடுதுறையில் ‘ட்ரீம்ஸ் ஸ்பா’ நடத்தி வந்த பூவார் பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் (46) ஆகிய இருவரை போலீஸார் உடனடியாகக் கைது செய்தனர்.

சஜித் குமார் மற்றும் நிஷாந்த்

மேலும், தலைமறைவாக இருந்த சிறுமியின் சித்தி மற்றும் அவரது கணவரை ஆந்திராவிற்குச் சென்று தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இந்தக் கொடூரச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கேரளாவில் உள்ள மசாஜ் மற்றும் ஸ்பா மையங்கள் மீது ஒட்டுமொத்தமாகக் காவல்துறை தனது பிடியை இறுக்கியுள்ளது. சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி பி.விஜயனின் அதிரடி உத்தரவின்பேரில் மாநிலம் தழுவிய அளவில் 'ஆபரேஷன் ஸ்பா' என்ற பெயரில் நேற்று ஒரே நேரத்தில் தீவிர சோதனை வேட்டை முடுக்கிவிடப்பட்டது.

ஸ்பாக்களில் அதிரடி ரெய்டு நடத்திய கேரள போலீஸ்

கேரளாவில் செயல்பட்டு வரும் மொத்தம் 821 ஸ்பா மையங்களில், நேற்று ஒரே நாளில் மட்டும் 586 மையங்களுக்குள் போலீஸார் நேரடியாகப் புகுந்து அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். இதில் விதிகளை மீறி சட்டவிரோதமாகச் செயல்பட்ட 14 ஸ்பாக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவளத்தில் முறையான உரிமமின்றி இயங்கி வந்த 8 ஸ்பா மையங்கள் இழுத்து மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன. அரசு வழிகாட்டுதல்களைச் சரியாகப் பின்பற்றாத 44 ஸ்பாக்களுக்குக் காவல்துறையினர் இறுதி எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

``நூதன முறையில் இந்திய ரகசியங்களை பெற்ற சீனா?'' - ராணுவ அதிகாரி மனைவி கைதின் அதிர்ச்சி பின்னணி!

ஜம்மு - காஷ்மீரில் பணியாற்றி வரும் மூத்த இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மனைவி சீனா உள்ளிட்ட வெளிநாட்டு உளவு அமைப்புகளின் முகவர்களிடம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான தகவல்களைப் பகிர்ந்ததாக ஜம்ம... மேலும் பார்க்க

ஜெம் வீரமணி வழக்கு: மேலும் ஒரு சிறுமி புகார்; வீரமணியின் மேலாளர் கைது!

சென்னை பெருநகர காவல்துறையின் விபச்சார தடுப்பு பிரிவில் Pendrive -ஒன்றை கொடுத்த என்.ஜி.ஓ அமைப்பு ஒன்று, ஜெம் வீரமணி குறித்து பரபரப்பு புகாரைக் கொடுத்தது. அதன்பேரில் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக... மேலும் பார்க்க

பெருந்துறை: நிர்வாணமாக காட்டுக்குள் கிடந்த செவிலியரின் உடல் - போலீஸ் விசாரணை!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார், பூங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் இவரின் மனைவி உத்திரா. திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டன்பாளையத்தில் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். ரஞ்சித் குமார் கட்டட ... மேலும் பார்க்க

ஏ.டி.எம் கார்டு, ஓ.டி.பி நம்பரைப் பயன்படுத்தி மோசடி - ரூ.10.96 லட்சத்தை இழந்த கரூர் முதியவர்!

கரூர் மாவட்டம், குளித்தலை, காவேரி நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது: 71). இவருடைய மொபைல் எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், இந்தியன் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, ``உங்கள் ஏ.டி.எம் கார்டு லாக் ஆகி விட்ட... மேலும் பார்க்க

அஸ்ஸாம் நபரின் ஆவணம் மூலம் போலி வங்கிக் கணக்கு; ரூ.2.28 லட்சம் லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம், வைக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் டிப்பர், டாரஸ் லாரிகள், சட்டவிரோத மண் கடத்தல் கும்பல்கள் மற்றும் பல்வேறு வழக்குகளின் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க... மேலும் பார்க்க

"ஒன்றுமில்லாதவரை அமைச்சராக்கினேன்"- ரூ.210 கோடிக்கு ஊழல் செய்ததாக BJP பெண் அமைச்சர்மீது கணவர் புகார்

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் ரேகா ஆர்யா, தனது கணவர் பப்பு கிர்தாரி என்று அழைக்கப்படும் கிர்தாரி லால் சாஹு தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், கொலை செய்ய முயன்றதாகவும், தனது மைனர் குழந்த... மேலும் பார்க்க