செய்திகள் :

கேரளம்: பேக்கரியில் ஹார்ட்டி ஒயின் விற்பனை சர்ச்சை; கிளம்பிய எதிர்ப்பு... மாற்றப்பட்ட கலால் அதிகாரி!

post image

கேரள மாநிலம் சாலக்குடியில் உள்ள எம்.ஆர்.சி என்ற பிரபல பேக்கரியில் 15 சதவீதம் வரை ஆல்கஹால் அடங்கிய வீரியமிக்க ஹார்ட்டி ஒயின் விற்பனை தொடங்கப்பட்டது. இது குறித்த செய்திகள் நேற்று வெளியானதும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆல்கஹால் கலந்த வீரியமிக்க ஹார்ட்டி ஒயின் எளிதில் பேக்கரிகளில் கிடைப்பது இளம் தலைமுறையினரை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் என எதிர்ப்பு கிளம்பியது. இது ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. பேக்கரிகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் வழியாக 15% வீரியமுள்ள ஒயின் விற்பனை செய்ய கலால் துறை பிறப்பித்த உத்தரவுக்கு அமைச்சர் எம்.லிஜு உடனடியாகத் தடை விதித்துள்ளார். அரசு விடுமுறை நாளாக இருந்தபோதிலும், இவ்விவகாரத்தில் நேற்று அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விற்பனையை முடக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த உரிமத்தை அனுமதித்த கலால் துறை துணை ஆணையர் சி.கே.அனில்குமார் அப்பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக பெவ்கோ தலைமையக துணை ஆணையர் வி.சுபாஷிடம் கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் எம்.லிஜு

இச்சம்பவம் தொடர்பாக ஆலப்புழாவில் செய்தியாளர்களைச் சந்தித்த கலால் துறை அமைச்சர் எம். லிஜு, கூறுகையில், "பேக்கரி மூலம் வீரியமிக்க ஹார்ட்டி ஒயின் விற்பனை செய்யப்படுவது அரசின் ஒப்புதலுடன் நடந்ததல்ல. முந்தைய இடதுசாரி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டு, கலால் துறை ஆணையர் இந்த முடிவை தன்னிச்சையாக எடுத்துள்ளார். துறை அமைச்சரான எனக்கே தெரியாமல், இதுபோன்ற ஒரு சர்ச்சை உத்தரவைப் பிறப்பித்ததை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ​இந்த உத்தரவைப் பிறப்பித்த கலால்துறை துணை ஆணையர் மாற்றப்பட்டுள்ளார். ஒயின் விற்பனை உரிமத்தை உடனடியாக ரத்து செய்யவும் நான் உத்தரவிட்டுள்ளேன். பேக்கரிகள் மற்றும் பொதுக் கடைகள் வழியாக எளிதாக ஒயின் விற்பனை செய்வது நமது சமூகத்தில் மிக மோசமான எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும்.

மாதிரி படம்
ஒயின்

தற்போது மாநில அரசின் புதிய மதுபானக் கொள்கை தொடர்பான தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. முந்தைய அரசின் சட்டத் திருத்தங்களை மாற்றியமைக்க வேண்டுமா என்பது குறித்து இந்த புதிய மதுபானக் கொள்கையில்தான் முடிவெடுக்கப்படும். ஆனால், எங்களது அரசின் மதுபானக் கொள்கையில் பேக்கரிகள் மூலம் ஒயின் விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட வாய்ப்பே இல்லை. இதுபோன்று அத்தியாவசிய கடைகளில் எளிதாக மது விற்பனைக்கு வழிவகுப்பது யு.டி.எஃப் கூட்டணியின் கொள்கையே கிடையாது. முந்தைய எல்.டி.எஃப் அரசு சட்ட விதிகளில் திருத்தங்கள் கொண்டு வந்திருந்ததன் அடிப்படையில் தான் அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால், எங்களது அரசு தனது கொள்கை முடிவை இன்னும் இறுதி செய்யவில்லை. பழைய அரசின் கொள்கைகளை அதிகாரிகள் தன்னிச்சையாக நடைமுறைப்படுத்தக் கூடாது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை முடிவுகளை எடுக்கும் போது, துறை அமைச்சரிடம் விரிவாக விவாதித்து தகவல் தெரிவித்த பிறகே முடிவெடுத்திருக்க வேண்டும்" என்றார்.

`இடைத்தேர்தலில் அது நடக்காமல் போயிருந்தால் திமுக டெபாசிட்கூட வாங்கியிருக்காது!' - துரை வைகோ

திருச்சி, மன்னார்புரம் பகுதியில் புதிய பேருந்து நிறுத்தத்தை திருச்சி எம்.பி துரை வைகோ திறந்து வைத்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர்,"திருச்சி மெயின் கார்டு கேட் அருகே ரயில்வே மேம்பால பணிகள் ... மேலும் பார்க்க

அதிபர் தேர்தல் அரசியலா?: `பிரான்ஸ் எரிகிறது; கடுமையான நடவடிக்கை உண்டு' - இம்மானுவேல் மக்ரோன்!

விலைவாசி உயர்வு, மோசமான கல்விச் சூழல் போன்றவற்றைக் கண்டித்து பிரான்ஸ் நாடு முழுவதும் மக்கள் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் போது ஆங்காங்கே கலவரமும், கடைகளில் சூறையாடலு... மேலும் பார்க்க

’போதைப்பொருள் புழக்கம் குறித்து பேச மு.க.ஸ்டாலினுக்கு அருகதை இல்லை’ – காங்கிரஸ் காட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகையில் போதை பொருள் விவகாரத்தில் த.வெ.க நிர்வாகி கைதானதற்கு தான் ஒரு முன்னாள் முதலமைச்சர் என்பதை மறந... மேலும் பார்க்க

‘15 அதிமுக எம்எல்ஏ-க்கள் தவெக-விற்கு வருவார்கள் என சொன்னேனா? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

கோவை விமான நிலையத்தில் வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, “வடகிழக்கு பருவ மழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவையான அளவு செய்யப்... மேலும் பார்க்க

’உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி’ – திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மமக?

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்... மேலும் பார்க்க