செய்திகள் :

பெருந்துறை: நிர்வாணமாக காட்டுக்குள் கிடந்த செவிலியரின் உடல் - போலீஸ் விசாரணை!

post image

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார், பூங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் இவரின் மனைவி உத்திரா. திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டன்பாளையத்தில் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். ரஞ்சித் குமார் கட்டட வேலை செய்து வந்திருக்கிறார். உத்திரா பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக அண்மையில் பணியில் சேர்ந்து வேலை செய்து வந்திருக்கிறார்.

செவிலியர் உத்திரா

இந்த நிலையில், கடந்த 14- ம் மாலை மனைவியை வீட்டிற்கு அழைத்துச் செல்ல மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார் ரஞ்சித். அவர் ஏற்கனவே வீட்டிற்கு கிளம்பி விட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறியுள்ளனர். ஆனால், உத்திரா வீட்டிலும் இல்லை. செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், அதிர்ச்சியடைந்த ரஞ்சித் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில்,‌ பெருந்துறை விஜயமங்கலம் டோல்கேட் அருகில் உள்ள பொன் கைலாஷ் நகர் செல்லும் வழியில் ஒரு காட்டில், இளம்பெண் சடலம் நிர்வாண நிலையில் கிடப்பதாக, பெருந்துறை காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்ற காவல்துறையினர் அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றியுள்ளனர். அருகில் கிடந்த உடைகள் மற்றும் காலணிகளை வைத்து உத்திராவின் உடல் என்பதை உறுதி செய்துள்ளனர்.

செவிலியர் உத்திரா

பின்னணி குறித்து தெரிவித்த பெருந்துறை காவல்துறையினர், " வழக்கமாக கணவர் தான் மாலையில் வீட்டிற்கு பைக்கில் அழைத்துச் சென்றிருக்கிறார். அன்றைய தினம் அவர் முன்கூட்டியே கிளம்பியதாக சொல்கிறார்கள். வழியில் அவரை கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் உண்மை தெரியவரும்" என்றனர்.

ஏ.டி.எம் கார்டு, ஓ.டி.பி நம்பரைப் பயன்படுத்தி மோசடி - ரூ.10.96 லட்சத்தை இழந்த கரூர் முதியவர்!

கரூர் மாவட்டம், குளித்தலை, காவேரி நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது: 71). இவருடைய மொபைல் எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், இந்தியன் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, ``உங்கள் ஏ.டி.எம் கார்டு லாக் ஆகி விட்ட... மேலும் பார்க்க

அஸ்ஸாம் நபரின் ஆவணம் மூலம் போலி வங்கிக் கணக்கு; ரூ.2.28 லட்சம் லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம், வைக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் டிப்பர், டாரஸ் லாரிகள், சட்டவிரோத மண் கடத்தல் கும்பல்கள் மற்றும் பல்வேறு வழக்குகளின் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க... மேலும் பார்க்க

"ஒன்றுமில்லாதவரை அமைச்சராக்கினேன்"- ரூ.210 கோடிக்கு ஊழல் செய்ததாக BJP பெண் அமைச்சர்மீது கணவர் புகார்

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் ரேகா ஆர்யா, தனது கணவர் பப்பு கிர்தாரி என்று அழைக்கப்படும் கிர்தாரி லால் சாஹு தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், கொலை செய்ய முயன்றதாகவும், தனது மைனர் குழந்த... மேலும் பார்க்க

நாகப்பட்டினம்: ரூ.270 கோடி மதிப்பிலான 135 கிலோ மெத் கடத்தல்; சிக்கிய தவெக நிர்வாகி; 4 பேர் கைது

நாடப்பட்டினம் சிந்தாமணி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன்(42) தவெக-வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர். இவரது மனைவி பிரேமியா இலங்கையைச் சேர்ந்தவர். வழக்கறிஞரான பூபாலன் தவெகவின் நாகை மாவட்டச் செயலா... மேலும் பார்க்க

ஈரோடு: பள்ளி மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்பனையா? 420 மாத்திரைகள் பறிமுதல்; 6 பேர் கைது

ஈரோடு மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதை மாத்திரை புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பிட்ட சில பகுதிகளில் விற்பனை நடைபெறுவதாக மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் ஈர... மேலும் பார்க்க

"Drishyam 3 படத்தைப் பார்த்து செய்தோம்" - நண்பனைக் கொன்ற மைனர் நண்பர்கள் சிக்கியது எப்படி?

மும்பை அருகில் உள்ள தானேயைச் சேர்ந்த 17 வயது நண்பர்கள் மூன்று வெவ்வேறு கல்லூரிகளில் படித்து வந்தனர். அவர்களில் ஒருவர் தங்க செயின் அணிந்து இருந்தார். மூன்று பேரும் 10வது வகுப்பு படித்து வந்த நிலையில் த... மேலும் பார்க்க