செய்திகள் :

'என் ஹார்மோனியப் பெட்டி பத்தி கவிதை சொல்ல முடியுமான்னு தேவா சார் கேட்டாரு.!'- பா.விஜய் ஷேரிங்

post image

இசையமைப்பாளர் தேவா மாரடைப்பால் நேற்று ( அக்.17) காலமானார். அவருக்கு வயது 75.

தேவா மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தேவா
தேவா

தற்போது இசையமைப்பாளர் தேவாவின் உடல், சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகில் உள்ள மாங்காடு கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் தேவாவின் ஹார்மோனியப் பெட்டி குறித்து பாடலாசிரியர் பா.விஜய் பகிர்ந்திருக்கிறார். "நான் நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, என்னை பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். அதற்கு காரணம் இந்த ஹார்மோனியப் பெட்டிதான். கடந்த 35 ஆண்டுகளாக இது என்னுடன் இருக்கிறது.

இதைப் பற்றி நான் யாரிடமும் பேசியதில்லை. இந்த ஹார்மோனியப் பெட்டியைப் பற்றி நான்கு வரிகளில் கவிதை சொல்ல முடியுமா?" என்று தேவா சார் கேட்டார்.

அதற்கு நான், “பட்டித்தொட்டியெங்கும் பேர் வாங்கித் தந்த பெட்டி... ஆயிரம் படப்பெட்டி, ஆயிரம் பணப்பெட்டி என் அருகில் இருந்தாலும், ஆறுதலும் தேடுதலும் தருகின்ற ஒரே பெட்டி இந்த ஹார்மோனியப் பெட்டி” என்று வாய்ஸ் நோட் அனுப்பினேன்.

தேவா
தேவா

அதற்குப் பதிலாக, "Love you மா" என்று அவர் பதிலளித்தார். இன்று அந்த ஹார்மோனியப் பெட்டி ஐஸ் பெட்டியில் இருப்பதைப் பார்க்கும்போது மனம் கலங்குகிறது.

கானாவின் காதலன் காற்றில் கலந்துவிட்டார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.

தேவா: `ஏற்றுக்கொள்ளவோ, கடந்து போகவோ கடினமாக உள்ளது' - கலங்கிய சீமான்!

இசையமைப்பாளர் தேவா உடல் நலக்குறைவால் நேற்று ( அக்.17) காலமானார். அவருக்கு வயது 75.அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்ந... மேலும் பார்க்க

தேவா: 'ரொம்ப கஷ்டமா இருக்கு; இப்படி திடீர்னு...' - கலங்கிய வடிவேலு

இசையமைப்பாளர் தேவா உடல் நலக்குறைவால் நேற்று ( அக்.17) காலமானார். அவருக்கு வயது 75.தேவா மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தேவாஇ... மேலும் பார்க்க

"என் வாழ்க்கையே தேவா சார் இசையில்தான் தொடங்கியது"- எஸ்.ஜே.சூர்யா எமோஷனல்

இசையமைப்பாளர் தேவா உடல் நலக்குறைவால் நேற்று ( அக்.17) காலமானார். அவருக்கு வயது 75.அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தேவா... மேலும் பார்க்க

Jailer 2: "திரையில் அவருடைய காட்சிகள் குறைக்கப்பட்டதைக் கண்டு..." - மோகன்லாலின் ஆடை வடிவமைப்பாளர்

ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லாலின் காட்சிகள் குறைக்கப்பட்டது குறித்து ஆவேசமாகப் பதிவிட்டிருந்த ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் சம்சுதீன், தற்போது தனது கருத்துக்கு விளக்கமளித்த... மேலும் பார்க்க