செய்திகள் :

Jailer 2: "திரையில் அவருடைய காட்சிகள் குறைக்கப்பட்டதைக் கண்டு..." - மோகன்லாலின் ஆடை வடிவமைப்பாளர்

post image

ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லாலின் காட்சிகள் குறைக்கப்பட்டது குறித்து ஆவேசமாகப் பதிவிட்டிருந்த ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் சம்சுதீன், தற்போது தனது கருத்துக்கு விளக்கமளித்துப் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Jailer 2 - Rajinikanth
Jailer 2 - Rajinikanth

முன்னதாக, ஜெயிலர் 2' படத்தில் மோகன்லாலின் சில காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டது குறித்து அவரின் ஆடை வடிவமைப்பாளர் காட்டமாக பேசியிருந்தார். மேலும், மோகன்லால் போன்ற ஒரு மாஸ் நடிகரின் காட்சிகளைக் கத்தரிப்பது தேவையற்றது எனக் குறிப்பிட்டு காட்டமாகப் பதிவிட்டிருந்தார்.

இது பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றொரு அறிக்கையை அவர் பகிர்ந்திருக்கிறார்.

அந்த அறிக்கையில், "நேற்று நான் பதிவிட்ட கருத்துகள் அனைத்துமே ஒரு தீவிரமான மோகன்லால் சார் ரசிகனின் மனதிலிருந்து வெளிவந்தவை மட்டுமே.

அவரை மிக ஆழமாக நேசிக்கும் ஒரு ரசிகனாக, திரையில் அவருடைய காட்சிகள் குறைக்கப்பட்டதைக் கண்டு எனக்கு இயல்பாகவே மனவருத்தம் ஏற்பட்டது.

அதேவேளையில், இந்தத் திரையுலகில் இயங்கும் ஒரு தொழில்நுட்பக் கலைஞனாக, படைப்பாளிகளின் சுதந்திரத்தையும், எடிட்டிங் மேஜையில் அவர்கள் எடுக்கும் முடிவுகளையும் நான் முழுமனதாக மதிக்கிறேன்" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

Deva: "அஜித்தை பாட வைக்க முயற்சி பண்ணினேன்!" - தேனிசை தென்றல் தேவா ஷேரிங்ஸ்

இசையமைப்பாளர் 'தேனிசைத் தென்றல்' தேவா இன்று திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். அவருடைய மறைவுக்குத் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Music Director Devaஆனந்த விகடனுக்கு அவர் வெவ்... மேலும் பார்க்க

Deva: "‘மீசைய முறுக்கு-2’-வுக்காக அவருடன் உரையாடிய அனுபவங்கள் மறக்க முடியாதவை!"- ஹிப் ஹாப் தமிழா ஆதி

இசையமைப்பாளர் 'தேனிசைத் தென்றல்' தேவா இன்று திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். அவருடைய மறைவுக்குத் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவர் கடைசியாக 'மீசைய முறுக்கு 2' படத்தின் வெற... மேலும் பார்க்க

Deva: "கள்ளம், கபடம், வஞ்சகம் இல்லாத 'சொக்கத்தங்கம்' தேவா!" - ரஜினி இரங்கல்

இசையமைப்பாளர் 'தேனிசைத் தென்றல்' தேவா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார். அவருடைய மறைவுக்குத் திரைத்துறையினர், அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினி... மேலும் பார்க்க

சூப்பர் ஸ்டார் Title Card முதல் சிங்கப்பூர் கௌரவம் வரை: தேனிசை தென்றல் தேவா 'Not an Easy Job'!

வொயிட் அன்ட் வொயிட் ஜிப்பா - பேண்ட் இவருடைய நிரந்தர உடை. கானா, குத்து, மெல்லிசை எனத் திரையிசையில் ஆல்-ரவுண்டர் இவர். கரகரக் கட்டைக் குரல் இவருடைய ப்ளஸ். எப்போதுமே மெல்லிய புன்னகையை இவரது முகத்தில் காண... மேலும் பார்க்க