செய்திகள் :

Deva: "கள்ளம், கபடம், வஞ்சகம் இல்லாத 'சொக்கத்தங்கம்' தேவா!" - ரஜினி இரங்கல்

post image

இசையமைப்பாளர் 'தேனிசைத் தென்றல்' தேவா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார்.

அவருடைய மறைவுக்குத் திரைத்துறையினர், அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்தும், தேவாவுக்கு இரங்கல் தெரிவித்துக் காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

Deva
Deva

அதில் அவர், "என் அருமை நண்பர், இசையமைப்பாளர் தேவாவின் திடீர் மறைவு எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. என்னுடைய திரையுலகப் பயணத்தில் 'அண்ணாமலை', 'பாட்ஷா', 'அருணாச்சலம்' ஆகிய மூன்று முக்கியத் திரைப்படங்களுக்கு அவர்தான் இசையமைத்தார்.

அந்த மூன்று திரைப்படங்களுமே பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றன. அதன்பிறகு 'படையப்பா' திரைப்படத்தை எடுக்கும்போது, எனது நண்பர்கள் அனைவரும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானை இசையமைக்க அழைக்கலாம் என்றார்கள்.

நான் அரைமனதோடு தேவா அவர்களிடம் சென்று, 'இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானிடம் உதவி கேட்கலாம் என நினைக்கிறேன்' என்று தயங்கியபடியே கூறினேன். உடனே அவர் எவ்வித தயக்கமும் இன்றி எழுந்து நின்று, என் கைகளைப் பிடித்துக்கொண்டு மிகுந்த சந்தோஷத்தோடு, 'தாராளமாகப் பண்ணுங்கள் சார்!

ஏ.ஆர். ரஹ்மான் மிக நல்ல தம்பி, புதிதாக வந்து சாதித்துக் கொண்டிருக்கிறார். அதைப்பற்றி நீ தவறாக நினைக்கவே கூடாது. எனக்குக் கொடுத்த இந்த மூன்று படங்களே நான் செய்த பெரிய பாக்கியம்' என்று மனப்பூர்வமாக வாழ்த்தினார். இப்படி ஒரு கள்ளம் கபடம், பொய், வஞ்சகம் இல்லாத ஒரு அருமையான மனிதர்; உண்மையான 'சொக்கத்தங்கம்' தேவா.

தேவா வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு மேலே வந்தவர். ஐந்து சகோதரர்களில் இவர்தான் மூத்தவர். ஆரம்பகாலத்தில் தெருத் தெருவாகக் கச்சேரி செய்து, கல்யாண வீடுகளில் வாசித்துத் தன் தம்பிகளையும் அவர்களின் குடும்பங்களையும் காப்பாற்றினார்.

திரையுலகில் உச்சத்தைத் தொட்ட பிறகும் கூட, அவர் தன் தம்பிகளைக் கைவிடாமல் எப்போதும் கூடவே வைத்து அரவணைத்து வந்த ஒரு சிறந்த குடும்பஸ்தர்; நல்ல மனிதர்.

இசையுலகில் இசைஞானி இளையராஜா கொடிகட்டிப் பறந்த காலக்கட்டத்திலேயே, தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி மாபெரும் வெற்றி கண்டவர் தேவா. சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு என்னைச் சந்தித்த தேவா, 'எல்லாரும் இசை கச்சேரி செய்கிறார்கள், நானும் சிங்கப்பூரில் தொடங்கலாம் என இருக்கிறேன்.

நீங்கள் தான் அதைத் தொடங்கி வைக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். நானும் மிகுந்த மகிழ்ச்சியோடு சென்று கலந்து கொண்டேன். அதன்பிறகு உலகளவில் பல நாடுகளுக்குச் சென்று அவர் நடத்திய இசை கச்சேரிகள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றன.

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்

சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு உலகப் பயணத்தை முடித்துவிட்டு என்னைச் சந்திக்க வந்திருந்தார். 'எப்படி போய்க்கொண்டிருக்கிறது?' என்று கேட்டேன். அதற்கு அவர் மிகவும் மகிழ்ச்சியோடு, 'இன்றைய தலைமுறை இளைஞர்கள் என்னை இந்தளவுக்குக் கொண்டாடுவது எனக்குப் பெருத்த ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது சார்.

இதே சந்தோஷத்தோடு இன்னும் 10, 15 வருடங்கள் நான் நிம்மதியாக வாழ்ந்துவிடுவேன்' என்று நெகிழ்ச்சியோடு கூறினார். ஆனால் ஆண்டவன், 'நீ ரொம்ப நல்லவன்ப்பா... இந்த சந்தோஷமான மனநிலையிலேயே என் நிலைக்கு வந்துவிடு' என்று சொல்லி அழைத்துக் கொண்டார் போல.

அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." எனத் தெரிவித்திருக்கிறார்.

Deva: "‘மீசைய முறுக்கு-2’-வுக்காக அவருடன் உரையாடிய அனுபவங்கள் மறக்க முடியாதவை!"- ஹிப் ஹாப் தமிழா ஆதி

இசையமைப்பாளர் 'தேனிசைத் தென்றல்' தேவா இன்று திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். அவருடைய மறைவுக்குத் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவர் கடைசியாக 'மீசைய முறுக்கு 2' படத்தின் வெற... மேலும் பார்க்க

சூப்பர் ஸ்டார் Title Card முதல் சிங்கப்பூர் கௌரவம் வரை: தேனிசை தென்றல் தேவா 'Not an Easy Job'!

வொயிட் அன்ட் வொயிட் ஜிப்பா - பேண்ட் இவருடைய நிரந்தர உடை. கானா, குத்து, மெல்லிசை எனத் திரையிசையில் ஆல்-ரவுண்டர் இவர். கரகரக் கட்டைக் குரல் இவருடைய ப்ளஸ். எப்போதுமே மெல்லிய புன்னகையை இவரது முகத்தில் காண... மேலும் பார்க்க

'ஃப்ளோர் அசிஸ்டண்ட் டூ தேனிசைத் தென்றல்' - தேவாவின் தூர்தர்ஷன் நாள்களை நினைவுகூரும் எம்.எஸ்.பெருமாள்

சினிமாவுக்கு வரும் முன் சுமார் எட்டு ஆண்டுகள் தூர்தர்ஷனில் ஃப்ளோர் அசிஸ்டண்டாக வேலை செய்தவர் மறைந்த இசையமைப்பாளர் தேவா.தேவா தூர்தர்ஷன் வந்த காலத்தை நினைவு கூர்கிறார் தூர்தர்ஷனின் முன்னாள் இயக்குநர் எம... மேலும் பார்க்க

"அந்தப் பாடல் இல்லாத சித்திரைத் திருவிழாவை நினைத்துப் பார்க்க முடியாது" - தேவாவிற்கு ஸ்டாலின் அஞ்சலி

இசையமைப்பாளர் தேவாவின் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். "தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன்.பொறாமை, வஞ்சக... மேலும் பார்க்க

Deva: "'கவலைப்படாதே சகோதரா' என்று பாடியவனே! இன்று நான் கவலைப்படாமல் என்ன செய்ய?" - வைரமுத்து இரங்கல்

இன்று (அக்டோபர் 17) உடல்நலக் குறைவால் இசையமைப்பாளர் தேவா காலமாகியுள்ளார். இவரது மறைவிற்கு பாடலாசிரியர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். "சாவாப் பாடல்கள் தந்த தேவா மறை... மேலும் பார்க்க

'தேனிசைத் தென்றல்' தேவா: தலைமுறைகள் கடந்தும் மனதில் ஒலிக்கும் மெட்டுகள்!

சாதாரணப் பின்னணியில் தொடங்கி, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவாவின் இசைப் பயணம் திரையுலகில் இன்றியமையாத ஒன்று!தமிழ் சினிமாவில் அவரின் சில பாடல்கள் ஒலிக்கும்போதே,... மேலும் பார்க்க