செய்திகள் :

Rain Alert: சென்னைக்கு இன்று ரெட் அலர்ட்... நாளை ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

post image

வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. கடந்த இரண்டு தினங்களாக தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று மழைக் கொட்டித்தீர்த்தது.

இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (அக்டோபர் 18) அதீத கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. நாளை மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

மழை பாதிப்பு
மழை பாதிப்பு

20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும் என்பதால் இந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

அதேசமயம் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, தேனி ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மழை பாதிப்பு
மழை பாதிப்பு

அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என்றும், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், வடகிழக்குப் பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னை: 'நோட் பண்ணிகோங்க மக்களே' - மழைக்காலப் பாதிப்புகளைத் தெரிவிக்க மொபைல் எண்கள் அறிவிப்பு!

வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. கடந்த இரண்டு தினங்களாக தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று மழைக் கொட்டித் தீர்த்திருக்கிறது. மழை பாதிப்புஇந்நிலையில் ச... மேலும் பார்க்க

Rain Alert: தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று (அக். 18) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.மழைஇந்நிலையில் இன்று (அக்.18) "நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம்,... மேலும் பார்க்க

Rain Alert: தமிழகம் முழுவதும் மழை... உங்க மாவட்டத்தில் கனமழையா, அதிகனமழையா? தெரிந்துகொள்ளுங்கள்!

அக்டோபர் மாதம் வரை கொளுத்திய வெயில் சென்றுவிட, இப்போதுதான் தமிழ்நாட்டில் மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது.நேற்று முன்தினம் (அக்டோபர் 15), தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சி... மேலும் பார்க்க

தொடங்கியது வடகிழக்கு பருவமழை; தமிழகத்தில் இந்த ஆண்டு மழைப் பொழிவு எப்படி இருக்கும்?

தென்மேற்கு பருவமழை விடைபெற்றதைத் தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை முறைப்படி தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இதனையொட்டி... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது! 21-ம் தேதி வரை கனமழை; உங்க ஊரில் மழை உண்டா?

அக்டோபர் மாதம் வரை சுட்டெரித்துவிட்டு, இப்போதுதான் நமக்கு ‘டாடா’ காட்டியிருக்கிறது வெயில்.இந்திய வானிலை மையத்தின் தினசரி அறிக்கையின்படி,இன்று (அக்டோபர் 15) முதல் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடல... மேலும் பார்க்க