செய்திகள் :

Chennai Rain: 'தவெக ரொம்ப ஸ்லோ; திமுக செஞ்ச வேலையினாலதான் தண்ணி நிக்கலை!' - மேயர் பிரியா!

post image

நேற்று மாலை முதல் சென்னையில் மிகக் கனமழை பொழிந்திருந்தது. மாநகராட்சி அதிகாரிகளும் பணியாளர்களும் களத்தில் சுற்றி சுழன்று வேலை பார்த்து மழை வெள்ளத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். முதல்வர் விஜய்யும் ரிப்பன் பில்டிங்கின் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், மேயர் பிரியா ஆய்வு கூட்டங்களுக்கு வருவதில்லை, மழை வெள்ளப் பணிகளில் ஈடுபடுவதில்லை என தவெகவினர் இணையத்தில் குற்றஞ்சாட்டி வருகின்றனர். சில கேள்விகளோடு மேயர் பிரியாவையே தொடர்புகொண்டு பேசினோம்.

'

CM Vijay
CM Vijay

'எல்லாரும் ஒரே இடத்தில் ஆய்வு செய்து பணி செய்ய வேண்டுமென்று இல்லை. அவர்கள் ஒரு பக்கம் வேலை செய்கிறார்கள். நாங்கள் ஒரு பக்கம் வேலை செய்கிறோம்' என்றவர் தொடர்ந்து, ''தவெக அரசு மிகவும் மெதுவாக மழை வெள்ள பணிகளை மேற்கொள்கிறது. வடகிழக்குப் பருவமழைக்கான முன்னேற்பாடுகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஜூன் மாதத்திலேயே தொடங்கியிருக்க வேண்டும்.

மாநகராட்சியுடன் மழை குறித்த ஆய்வு கூட்டத்தை ஆகஸ்ட்டிலேயே நடத்தியிருக்க வேண்டும். இவர்கள் அந்த ஆய்வுக் கூட்டத்தையே நான்கு நாட்களுக்கு முன்புதான் நடத்தியிருந்தனர். அதிலும் நாங்கள் மக்களின் பாதுகாப்புக்கு தேவையான அடிப்படை விஷயங்களை பேசுகையில் தவெக எம்.எல்.ஏ போரடிக்குது என்கிறார். அவர்களின் அலட்சியமான அக்கறையற்ற போக்கு அதிலேயே வெளிப்பட்டது. இந்த அரசு மழைக்காக சில அடிப்படையான பணிகளையே தாமதமாகத்தான் தொடங்கியது. அதைக் குறிப்பிட்டு திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டோம். அதிகாரிகளும் அமைச்சர்களும் மேயர், துணை மேயர் போன்றோரிடம் முறையாக கலந்தாலோசிப்பது இல்லை. அவர்களாக பணியை மேற்கொள்கிறார்கள். அதனால் அவர்கள் ஒரு பக்கம் பணிகளை ஆய்வு செய்து கூட்டங்களை நடத்துகின்றனர். நாங்கள் இன்னொரு பக்கம் ஆய்வு செய்து பணிகளை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

மேயர் பிரியா
மேயர் பிரியா

மழைநீர் வடிகால் பணிகளுக்காக திமுக செலவு செய்த 4000 கோடி ரூபாய் வீண் என தவெகவினர் விமர்சனம் செய்கிறார்களே என்றதற்கு, 'நேற்று சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்திருக்கிறது. ஆனால், காலையில் மக்கள் பெரிய இடையூறுகளின்றி தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர். தவெக ஆட்சியமைந்த நான்கு மாதங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டு இதை சாதித்தார்களா? திமுக ஆட்சியில் செய்த பணிகளுக்கான பலன் இப்போது கிடைத்துக் கொண்டிருக்கிறது' என்றார் மேயர் பிரியா.

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தேவா உடல் நல்லடக்கம்; சொந்த ஊர் மக்கள் திரண்டு வந்து அஞ்சலி!

`தேனிசைத் தென்றல்’ என்று கொண்டாடப்பட்ட இசையமைப்பாளர் தேவாவின் திடீர் மரணம் திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையில் நேற்று தேவாவின் உடலுக்கு முதலமைச்சர... மேலும் பார்க்க

Chennai Rain: 95% வெள்ள நீரை அகற்றிவிட்டோம்;நேரில் வந்த முதல்வர் விஜய் -அப்டேட் கொடுத்த அதிகாரிகள்!

நேற்று சென்னையில் பொழிந்த அதி கனமழையை தொடர்ந்து இன்று ரிப்பன் பில்டிங்கின் மழைநேர அவசரக்கால கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் விஜய் ஆய்வு செய்திருந்தார். CM Vijayசென்னையில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை... மேலும் பார்க்க

``மேகவெடிப்பு அதிகரிக்கலாம்... திருப்புகழ் குழுவை அமைக்க வேண்டும்" - அன்புமணி சொல்வது என்ன?

சென்னையில் மேக வெடிப்புகள் அதிகரிக்கலாம் எனத் திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட்டு வெள்ளத்தடுப்பு பணிகளை மேம்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிர... மேலும் பார்க்க

'சபரிமலையில் திருப்பதி மாடல் வசதிகள்' - முதல்வர் வி.டி.சதீசனின் திட்டம் என்ன?

சபரிமலையில் மண்டல - மகரவிளக்கு கால பூஜைகளுக்கான ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக கேரள முதல்வர் வி.டி.சதீசன் தலைமையில் பம்பை மற்றும் நிலக்கல்லில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தேவஸ... மேலும் பார்க்க

Chennai Rain: அப்டேட் கேட்கும் முதல்வர்; மழை இரவில் ஆப்சென்ட் ஆன பொறுப்பு அமைச்சர்கள்- பின்னணி என்ன?

நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை சென்னையில் அதிகனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. உச்சக்கட்டமாக பாரிஸில் 36 செ.மீக்கும் மேல் மழை பெய்திருக்கிறது. பல இடங்களிலும் தேங்கி நிற்கும் மழை வெள்ள நீரை அகற்றும் பண... மேலும் பார்க்க

``இந்து அறநிலையத்துறை அலுவலகத்துக்குள் மழைநீர்; ஆவணங்கள் பாதுகாப்பு என்ன ஆவது?" - சேகர் பாபு கேள்வி

நேற்று மாலை முதல் சென்னையில் அதிகனமழை பொழிந்திருந்தது. குறிப்பாக, வடசென்னை பகுதிகளில் குறுகிய நேரத்தில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அதிக கனமழை பொழிந்திருக்கிறது. இந்நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள ... மேலும் பார்க்க