செய்திகள் :

`கிராமப்புற இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்' - பங்கர் ராய் காலமானார்

post image

பங்கர் ராய், கிராமப்புற மக்களின் தன்னிறைவுக்காக உருவாக்கப்பட்ட 'பேர்ஃபுட் காலேஜ்' (Barefoot College) நிறுவனத்தின் நிறுவனர்.

முறையான பள்ளிப் படிப்பு இல்லாத கிராமப்புற மக்களை சூரிய ஒளி பொறியாளர்கள் (Solar Engineers), மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கைவினைஞர்களாக மாற்றியதன் மூலம் உலகளவில் கவனம் பெற்றவர்.

ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக கிராமப்புற மேம்பாட்டிற்காக உழைத்த பங்கர் ராய், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக 2026 நவம்பர் 10-ஆம் தேதி ராஜஸ்தானின் திலோனியாவில் உள்ள தனது இல்லத்தில் தனது 81-வது வயதில் காலமானார்.

1945 ஆம் ஆண்டு வங்காள மாகாணத்தில் உள்ள பர்ன்பூரில் பிறந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பயின்ற பள்ளியான தி டூன் பள்ளியில் பயின்றார். தொடர்ந்து, 1962 முதல் 1967 வரை டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் (St. Stephen's College) உயர்கல்வி பயின்றார். அவர் முன்னாள் ஆட்சிப்பணியாளரான அருணா ராய் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

பங்கர் ராய்

1972-ஆம் ஆண்டில், குடிநீர் மற்றும் சூரிய ஒளி மின்மயமாக்கல் திட்டங்கள், பெண்கள் மேம்பாடு, திறன் மேம்பாடு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்லும் தன்னார்வ கிராமப்புற மேம்பாட்டு அமைப்பான 'சமூகப் பணி மற்றும் ஆராய்ச்சி மையத்தை' (Social Work and Research Centre) பங்கர் ராய் நிறுவினார். இந்த அமைப்பு தற்போது 'தி பேர்ஃபுட் காலேஜ்' என்று அழைக்கப்படுகிறது.

இவர் தொடங்கிய இந்த நிறுவனத்தின் மூலம் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப்பற இளைஞர்கள், சூரிய ஒளிப் பொறியாளர்களாகவும், ஆசிரியர்களாகவும், மருத்துவர்களாகவும் மருத்துவச்சிகளாகவும், நெசவாளர்களாகவும், கட்டிடக் கலைஞர்களாகவும் பயிற்சி பெற்று உள்ளார்கள்.

தன்னுடைய 81 வது வயதில் நவம்பர் 10ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள திலோனியாவில் அவரது இல்லத்தில் இயற்கை மரணம் அடைந்துள்ளார்.

அவரது மரணம் குறித்து தலைவர்கள் கூறியது

ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட், "மகாத்மா காந்தியின் கொள்கைகளால் வழிநடத்தப்பட்ட அவர், கிராமப்புறத் தற்சார்பு, கல்வி மற்றும் வளர்ச்சியின் பல்வேறு துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார். அவரது முழு வாழ்க்கையும் கிராமங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், பின்தங்கிய சமூகத்தினரின் வாழ்வில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும் அர்பணித்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

"திலோனியாவின் பேர்ஃபுட் காலேஜ் மூலம் கிராமப்புறப் இளைஞர்களை சூரிய ஒளிப் பொறியாளர்களாக மாற்றி, உலகெங்கும் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு ஒளியேற்றியவர் சமூக ஆர்வலரான பங்கர் ராய்" என்று காங்கிரஸ் தலைவர் சசி தரூர் கூறினார்.

சஞ்சித் 'பங்கர்' ராய் ஒரு மாபெரும் ஆளுமை, பேர்ஃபுட் இயக்கத்தின் ஜாம்பவான், தனது சிந்தனையில் புரட்சிகரமானவர்; தனது வளர்ப்பின் சலுகைகளைத் துறந்து ஏழைகளிடையே பணியாற்றுவதைத் தேர்ந்தெடுத்தவர். அவர் எண்ணற்ற வாழ்க்கையை மாற்றினார், திலோனியாவில் பேர்ஃபுட் காலேஜை நிறுவினார், மேலும் கிராமங்களுக்கு நிலையான குடிநீர் விநியோகத்தைக் கொண்டுவருவதில் முன்னோடிப் பணிகளைச் செய்தார். சமூகத்திற்கும் புதிய தலைமுறையினருக்கும் ஒரு உத்வேகமாகத் திகழ்ந்தார்" என்று மாநிலங்களவை உறுப்பினர் சாகரிகா கோஷ் தெரிவித்தார்.

பங்கர் ராய்

"உள்நாட்டு வளர்ச்சி மாதிரிக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு தனித்துவமான சமூக ஆர்வலராக அவர் திகழ்ந்தார். ராஜஸ்தான் மற்றும் பிற இடங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் அவர் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொண்டு வந்தார்" என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப. சிதம்பரம் அவர்கள் புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.

இவருக்கு 1986 ஆம் ஆண்டு இந்திய அரசால் பத்மஶ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தென்காசி: சாலையில் கிடந்த 30 சவரன் நகை; காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதியவருக்குக் குவியும் பாராட்டு

ஏழை விவசாயியான பாப்பையா என்பவர், சாலையில் நடந்து சென்றபோது, ஒரு பையைக் கண்டெடுத்தார். அதில், நகை மற்றும் பணம் இருந்துள்ளன. அவற்றை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் காவல் நிலையத்துக்கு ந... மேலும் பார்க்க

நெல்லை: `நான் சொல்ற இடத்துக்கு போயிட்டு வாங்க' - ஹெல்மெட் அணியாத SI ; நூதன தண்டனை வழங்கிய டி.ஐ.ஜி!

இரு சக்கர வாகன விபத்துகளில் சிக்குபவர்களில் 90 சதவிகிதம் பேருக்கு தலையில் காயம் ஏற்படுகிறது. இதில், 40 சதவிகிதம் பேர் உயிழப்பதாக தெரியவந்துள்ளது. ஹெல்மெட் அணிந்து பயணித்தால் சிறிய காயங்களுடன் உயிர்தப்... மேலும் பார்க்க

கொண்டாட்டம் நமக்கு… கழிவுகளை அகற்றும் சுமை இவர்களுக்கு! பிரித்துக் கொடுப்போம், பாரம் குறைப்போம்

ததீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்புகள், பட்டாசுகள் எனப் பலருக்கும் கொண்டாட்டம்தான்.ஆனால், அந்தக் கொண்டாட்டம் முடிந்த பிறகு வீதிகளில் தேங்கும் பட்டாசுக் கழிவுகளையும் மற்ற குப்பைகளையும் அகற்ற வேண்டிய பொற... மேலும் பார்க்க

`எங்கள் கொண்டாட்டம் கொஞ்சம் தாமதமாகத்தான்..'- நம் தீபாவளிக்கு பின்னால் இயங்கும் ஓய்வில்லா மனிதர்கள்!

நம் தீபாவளிக்குப் பின்னால்.. ஓய்வில்லாத மனிதர்கள்!தீபாவளி அன்று அதிகாலையில் எழுவது நமக்கு ஒரு கொண்டாட்டம். ஆனால், சிலருக்கு அதுவே வேலை நேரம்! நாம் வெடிக்கும் பட்டாசுகளின் சத்தத்துக்கு நடுவே நாளிதழ் வி... மேலும் பார்க்க

நெல்லை: குடும்பத்தின் வருகை; புத்தாடை, இனிப்பு – காப்பகத்தில் நெகிழ்ச்சியான தீபாவளி!

தீபாவளி என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள், குடும்பத்தினருடன் கொண்டாட்டம் என மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. ஆனால், குடும்பத்தைப் பிரிந்து காப்பகத்தில் வசிப்பவர்களுக்கும் அந்த மகிழ்ச்சியை அனுபவ... மேலும் பார்க்க

`அவங்க முகத்துல வர சந்தோசம்தான்.!' - உடைந்த சிலைக்களுக்கு புத்துயிர் ஊட்டும் கலைஞர்

ஒன்று உடைந்துவிட்டால், தூக்கி எறிந்துவிட்டு இன்னொன்றை தேடிச் செல்லும் காலத்தின் ஓட்டத்தில், உடைந்த சிலைகளுக்கும் புத்துயிர் ஊட்டி வருகிறார் கந்தன் (46). சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் அமைந்துள்ள இவர... மேலும் பார்க்க