செய்திகள் :

கில் : ‘வந்தான்’ ‘அடிச்சான்’ `ரெக்கார்டு’ - வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

post image

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், சுப்மன் கில் இரட்டைச் சதம் விளாசி புதிய சாதனை படைத்ததுடன், 406 ரன்கள் என்ற பிரமாண்ட இலக்கையும் இந்தியா அசால்ட்டாக சேஸ் செய்திருக்கிறது. கில்லின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டம், ரோஹித் சர்மாவின் சதம் என இந்தியாவின் அதிரடி ஆட்டத்தால் கவுகாத்தியில் ஒரே போட்டியில் பல சாதனைகள் அரங்கேறியுள்ளன.

முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 405 ரன்கள் குவித்தது. அந்த அணியில் ஜான் கேம்ப்பெல் 101, ஷாய் ஹோப் 104, அமீர் ஜாங்கூ 114 ரன்கள் எடுத்தனர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிகபட்ச ODI ஸ்கோராகவும் இது அமைந்தது.

ரோஹித் சர்மா

406 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய இந்தியாவுக்கு சுப்மன் கில் – ரோஹித் சர்மா ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. இருவரும் இணைந்து 255 ரன்கள் சேர்த்தனர். ரோஹித் சர்மா 101 ரன்களில் ஆட்டமிழந்தாலும், கில் தனது அதிரடியை தொடர்ந்து கொண்டே சென்றார்.

இந்த இன்னிங்ஸில் கில் 117 பந்துகளில் இரட்டைச் சதத்தை எட்டினார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டைச் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும், ரோஹித் சர்மாவுக்குப் பிறகு ODI-யில் இரண்டு இரட்டைச் சதங்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

கில்

இறுதியில் கில் 133 பந்துகளில் 223 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 43.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 406 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, இன்னும் 39 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-0 என கைப்பற்றியது.

`400+ எனும் ப்ரஷரை போக்க நானும் ரோஹித்தும் ஒரு முடிவு செஞ்சோம்!' - மெகா சேஸிங் ரகசியம் பகிரும் கில்

நேற்றைய வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ODI போட்டியில் இந்தியா ஒரு" Historical" நிகழ்வை நிகழ்த்தியது. இதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது கேப்டன் 'சுப்மன் கில்' அடித்த இரட்டைசதம். போட்டியின் பிறகு சுப்மன் க... மேலும் பார்க்க

Asian games: ஒரே நாளில் 4 தங்கப் பதக்கங்கள்; ஹாக்கியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம் - Ind Round up

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் இறுதிச்சுற்று நெருங்கிவரும் நிலையில், செப்டம்பர் 30-ம் தேதி நடைபெற்ற போட்டிகளில் வில்வித்தையில் (Compound Archery) மூன்று தங்கம் மற்றும் துப்பாக்கிச் சுடுதலில் (Shooting)... மேலும் பார்க்க

Asian Games: "ஆட்டோ ஓட்டுநரின் மகள்தானே...” - வெள்ளிப் பதக்கத்துடன் பதிலடி கொடுத்த ஆன்சி!

ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் நீளம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவுக்கும் கேரளாவுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் ஆன்‌சி சோஜன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். கனமழை உள்ளிட்ட சாதகமற்ற வானிலையையும் பொ... மேலும் பார்க்க

Asian Games: வரலாற்றுச் சாதனை; ஒரே நாளில் 2 தங்கம் வென்று பதக்கப் பட்டியலில் முன்னேறியது இந்தியா!

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், இந்தியாவின் பதக்க வேட்டை வேகம் எடுத்துள்ளது. செப்டம்பர் 29ஆம் தேதியன்று தடகளப் பிரிவில் பெண்களுக்கான 4x400 மீ தொடர் ஓட்டம் மற்றும் ... மேலும் பார்க்க

Asian Games 2026: 48 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த நீரு தண்டா - யார் இவர்?

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறார் நீரு தண்டா. ஹரியானா மாநிலம், ஜிந்த் மாவட்டத்தில் பிறந்த இவர், தனிநபர் டிராப் பிரிவில் தங்... மேலும் பார்க்க

Asian Games: இந்திய அணிக்கு தங்கப்பதக்கம்; வெள்ளி, வெண்கலம், தங்கம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா!

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் 400 மீட்டர் தடை தாண்டி ஓடும் போட்டிகளில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் 54.75 வினாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.1... மேலும் பார்க்க