செய்திகள் :

"கூட்டணியில் இருந்துக்கொண்டே தவெக அரசை விமர்சிக்கிறார்கள்!" - வைகோ குற்றச்சாட்டு; பெ.சண்முகம் பதிலடி

post image

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்று கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகிவிட்டன.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மை பெறவில்லை. அந்தக் கட்சிக்கு 108 இடங்களை மட்டுமே வழங்கியிருந்தனர் தமிழ்நாடு மக்கள்.

ஆனால், ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களோ 118. இதனால், தவெக காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, முஸ்லீம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் உதவியை நாடியது.

விஜய்
விஜய்

அந்தக் கட்சிகளின் ஆதரவு கிடைக்க ஆட்சியை அமைத்தது தவெக.

அவர்கள் முன்பே கூறியிருந்தது போல, கூட்டணி ஆட்சியையும் அமைத்தது அந்தக் கட்சி. தமிழ்நாடு கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டணி ஆட்சியைக் கண்டுள்ளது.

கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ், விசிக, முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் அங்கம் வகித்துள்ளன. இந்தக் கட்சிகள் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியிலும் இடம்பெற்றிருக்கின்றன.

ஆனால், தவெக ஆட்சிக்கு ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆட்சியிலும் பங்கேற்கவில்லை... கூட்டணியிலும் முழுமையாகப் பங்கேற்கவில்லை.

நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் தேர்தலிலும் கூட, இரு கட்சிகளும் எந்தக் கூட்டணியிலும் இல்லாமல் தனித்துக் களம் கண்டன.

என்னதான் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவில் தவெக ஆட்சி அமைந்திருந்தாலும், இந்த மூன்று கட்சிகளுக்கும் இணக்கம் ஏற்படவில்லை. அடிக்கடி இவை முட்டிமோதிக்கொள்கின்றன.

வைகோ
வைகோ

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தவெகவுடன் கூட்டணி என்று அறிவித்தும் கூட, தவெக தலைமையிடமிருந்து விசிக தலைமைக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. இது விசிகவினருக்குப் பிடிக்கவில்லை. அவ்வப்போது தவெக செய்யும் தவறுகளை விசிக சுட்டிக்காட்டி வருகிறது.

இதையெல்லாம் சாடி, நேற்று நிகழ்ச்சி ஒன்றில் மதிமுக நிறுவனர் வைகோ, “சூரியன் கிழக்கே உதித்த உடனே, அதாவது பொழுது விடிந்ததுமே ஆளுங்கட்சிக் கூட்டணியில் இருக்கக்கூடிய இரு கட்சித் தலைவர்கள் ஜோசப் விஜய்யின் ஆட்சியைத் தாக்கிப் பேசத் தொடங்கிவிடுகிறார்கள்.

அன்றைய தினம் காலை உணவை உண்கிறார்களோ இல்லையோ, இந்த ஆட்சியை விமர்சிப்பதையே முதன்மையான வேலையாகக் கொண்டுள்ளனர். அதில் ஒரு கட்சி அமைச்சரவையிலேயே இடம்பெற்றுக்கொண்டு, அதே அரசை எதிர்த்து விமர்சித்து வருகிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) ஆகிய இரு கட்சிகள் மட்டுமே இந்த அரசை விமர்சனம் செய்யாத கட்சிகளாக இருந்து வருகின்றன” என்று பேசியிருக்கிறார்.

இதில் என்ன வேடிக்கை என்றால், தவெக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றிருக்கிறது. ஆனால், அவர்களுடைய இரண்டு எம்.எல்.ஏக்களும் மதிமுக தலைமையின் நிலைப்பாட்டிற்கு உடன்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வைகோவின் இந்தப் பேச்சு குறித்து , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், “தவெக அரசைச் சாடாமல் இருப்பது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் அணுகுமுறையாக இருக்கலாம்.

பெ.சண்முகம்
பெ.சண்முகம்

எங்களைப் பொறுத்தவரை, அரசு மக்களுக்குச் சாதகமான நல் திட்டங்களைச் செயல்படுத்தினால் அதை வரவேற்போம். மாறாக, மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் எங்களது கடுமையான விமர்சனங்களை வெளிப்படையாகப் பதிவு செய்வோம்.

நாங்கள் எழுப்பும் நியாயமான கேள்விகளைச் சுட்டிக்காட்டிப் பேசும்போது, ‘ஆளுங்கட்சியை எப்படிக் குறை சொல்லலாம்?’ என்று வைகோ போன்ற மூத்த தலைவர்கள் கேள்வி எழுப்புவது பொருத்தமான ஒன்றாக இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

'சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கு டாஸ்மாக் மதுக்கடைகளே காரணம்!' - அமைச்சர் ஷாஜகான் பேட்டி

த.வெ.க அரசு பொறுப்பேற்று 6 மாதங்களே முடிவடைந்திருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் தொடர்து நடப்பதற்கு மது மற்றும் போதை பழக்கமே முக்கிய காரணியாக உள்ளது என அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்... மேலும் பார்க்க

"ஓ, ஏதோ கொலைப் பந்தயம் நடக்கிறது போல..!" - ராஜ்மோகன் பதிலுக்கு சுப.வீரபாண்டியன் காட்டம்

தீபாவளி (நவம்பர் 8) அன்று, தமிழ்நாட்டில் 17 கொலைகள் நடந்துள்ளன. இது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களையும், கேள்விகளையும் எழுப்பி வருகின்றன.இந்தக் கொலைச் சம்பவங்கள் குறித்து அமைச்சர் ராஜ்மோக... மேலும் பார்க்க

'நம்பிக்கையில்லா தீர்மானம்! - முன்னெச்சரிக்கையாக ரெசார்ட்டில் எம்.எல்.ஏக்களை திரட்டும் CM விஜய்?

சென்னை தனியார் விடுதியில் இன்று காலை 11 மணிக்கு தவெகவின் 109 எம்.எல்.ஏக்களையும் நேரில் அழைத்து முக்கிய ஆலோசனையில் ஈடுபடவிருக்கிறார் முதல்வர் விஜய். நவம்பர் 13 ஆம் தேதிக்குப் பிறகு ஆட்சியின் மீது எதிர்... மேலும் பார்க்க

அஜித் தோவல் மீது குற்றச்சாட்டு! அமெரிக்க நீதிமன்றம் அனுப்பிய சம்மன் - இந்தியா என்ன சொல்கிறது?

கடந்த மாதம், அமெரிக்க வெளியுறவுத் துறை வழங்கிய நீதிமன்றச் சம்மன் தற்போது இந்திய அரசுக்குக் கிடைத்துள்ளது. இது இந்திய உள்துறை அமைச்சகத்தால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட குர்பத்வந்த் சிங் பண்ணூன் தொடர்ந... மேலும் பார்க்க

'அட்டாக் பரந்தாமன்' லைப்ரரி மேட்டரை விட்றாதீங்க! - தவெக செய்தித் தொடர்பாளர்களுக்கு புது அசைன்மெண்ட்!

சென்னை தி.நகரில் உள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் 'வாய்ஸ் ஆப் காமன்' அலுவலகத்தில் தவெகவின் செய்தித் தொடர்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்திருக்கிறது. அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் ... மேலும் பார்க்க

`ரெஸ்டோ பார்களில் கவர்ச்சி நடனம்... 5 மாதங்களில் 24 கொலைகள்..! - புதுச்சேரி அரசைச் சாடும் திமுக

`2025-ல் ஆண்டில் 25 கொலைகள், 2026-ல் 24 கொலைகள்!’புதுச்சேரி திமு.க அமைப்பாளர் சிவா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `ஆன்மிகத்திற்கும், சுற்றுலாவிற்கும் புகழ்பெற்ற புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில மாதங்... மேலும் பார்க்க