செய்திகள் :

கேரள லோக்பவனில் இனி சைவ சமையல் மட்டுமே! - புதிய கவர்னர் பதவியேற்றதும் உத்தரவு

post image

சிக்கிம் மாநில ஆளுநராகப் பணியாற்றி வந்த ஓம் பிரகாஷ் மாத்துர், கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டு நேற்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் கேரளத்தின் 29-வது கவர்னர் ஆவார். முன்னதாக, கேரளா மற்றும் தமிழகத்தின் கூடுதல் ஆளுநர் பொறுப்பை கவனித்து வந்த ராஜேந்திர அர்லேக்கர் முழுநேரத் தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த எதிர்கட்சி தலைவர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் புறக்கணித்தனர். முதல்வர் வி.டி.சதீசன் பூங்கொத்து வழங்கி கவர்னரை வரவேற்றார். புதிய ஆளுநர் மாத்துர் தீவிர சைவ உணவுப் பழக்கம் கொண்டவர் என்பதால், லோக்பவன் சமையலறையில் மாமிசமோ, மீன் உணவுகளோ சமைக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ​இந்த உத்தரவு குறித்து லோக்பவன் வட்டாரங்கள் விளக்கம் அளிக்கையில், ஆளுநர் மாளிகை சமையலறையானது ஆளுநர் மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் சிலருக்கு மட்டுமே உணவு தயாரிக்கப் பயன்படுகிறது என்றும், மற்ற அரசுப் பணியாளர்கள் தங்களது வீடுகளிலிருந்தே உணவைக் கொண்டு வருகிறார்கள் அல்லது வெளியே உணவருந்துகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளன. எனவே, ஊழியர்களின் தனிப்பட்ட உணவுக் கட்டுப்பாடுகளில் எந்தவிதத் தடையும் விதிக்கப்படவில்லை என்றும், வழக்கமாக லோக்பவனுக்கு வரும் விருந்தினர்களுக்கு நடத்தப்படும் அரசு விருந்துகளில் எப்போதும்போல சைவ உணவுகளே தொடர்ந்து பரிமாறப்படும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கேரள கவர்னராக பதவியேற்ற ஓம் பிரகாஷ் மாத்துர்

முன்னாள் ஆளுநர் ஆரிப் முகமது கான் காலத்தில் அசைவ உணவுகளும், அவரைத் தொடர்ந்து வந்த ராஜேந்திர அர்லேக்கர் காலத்தில் மீன் உணவுகளும் லோக்பவனில் பயன்பாட்டில் இருந்தன. தற்போது ஓம் பிரகாஷ் மாத்துர் வருகையால், லோக்பவன் சமையலறை முழுமையான சைவ முறையாக மாறுகிறது. ​பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவரான ஓம் பிரகாஷ் மாத்துர், பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவர் ஆவார். நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த காலகட்டத்தில், அம்மாநில பா.ஜ.க. பொறுப்பாளராக மாத்துர் செயல்பட்டார்.

கேரள கவர்னராக பதவியேற்ற ஓம் பிர்காஷ் மாத்துரை வரவேற்ற முதல்வர் வி.டி.சதீசன்

ராஜஸ்தானைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவரான இவர், பா.ஜ.க-வில் இணைவதற்கு முன்பே நீண்ட காலம் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராகப் பணியாற்றியவர். திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் ஓம் பிரகாஷ் மாத்துருக்கு சமையல் செய்வதற்காக அவரது சொந்த ஊரான ராஜஸ்தானில் இருந்து இரண்டு சமையல் ஊழியர்கள் வரவழைக்கப்பட உள்ளதாகவும், கடுகு எண்ணெயில் சமைக்கும் உணவுகள் அவருக்கு விருப்பமானது எனவும் கூறப்படுகிறது.

``தவெக-வின் கடைசித் தொண்டன் இருக்கும் வரை பாஜக-வோடு ஒட்டுமில்லை, உறவுமில்லை" - அமைச்சர் ராஜ் மோகன்

ஐ.யூ.எம்.எல் கட்சியின் இளைஞரணி அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ராஜ் மோகன், ``இந்தியாவில் இஸ்லாமியனாகப் பிறந்தவர்கள் நான் தேசப்பற்று... மேலும் பார்க்க

``புதிய நடிகர்கள் டெல்லியில் அமர்ந்திருக்கிறார்கள்: யார் வந்தாலும்..." - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஐ.யூ.எம்.எல் கட்சியின் இளைஞரணி அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ``2029-ல் எல்லோரும் இணைந்து வென்றாக வேண்டும். இந்தியாவ... மேலும் பார்க்க

`விஷமிகளுக்கு ஏமாற்றமே; ரஜினியின் அஸ்திவாரத்தை கலைப்பது எளிதல்ல’ - சோளிங்கர் ரவி பதிலடி

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான `ஜெயிலர் 2’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூல் செய்து `ஹிட்’ அடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் வன்மத்துடன் கமெண்ட்ஸுகளை பதிவிட்டுவந்த நபர்களுக்கு பதிலடி தரும்விதமாக... மேலும் பார்க்க

"பெண்களே, சிறுமிகளே... உதவி செய்வதாக தவெகவினர் வந்தால் காவல்துறையை அணுகுங்கள்!"- எடப்பாடி பழனிசாமி

கன்னியாகுமரியில் கல்லூரி மாணவி ஒருவருக்கு தவெக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.“கன்னிய... மேலும் பார்க்க

"வனவிலங்குகள், தெருநாய்கள், பூனைகளை பிடித்து ஆய்வக சோதனைகள்.!"- மத்திய அரசுக்கு தயாநிதி மாறன் கடிதம்

மத்திய அரசு புதிய விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தை அறிமுகப்ப்படுத்தியுள்ளது. இந்தச் சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் மத்திய அமைச்சர் ராஜீவ... மேலும் பார்க்க