செய்திகள் :

"பெண்களே, சிறுமிகளே... உதவி செய்வதாக தவெகவினர் வந்தால் காவல்துறையை அணுகுங்கள்!"- எடப்பாடி பழனிசாமி

post image

கன்னியாகுமரியில் கல்லூரி மாணவி ஒருவருக்கு தவெக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே பேருந்துக்காகக் காத்திருந்த கல்லூரி மாணவிக்கு உதவுவது போல நடித்து ஆளுங்கட்சி தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

‘பெண்களைக் காப்பதில் நம்பர் 1 ஆட்சியாக இருக்கும்’ என்று சொல்லியபோது தனது கட்சிக்காரர்கள் இருப்பதை இன்றைய முதல்வர் மறந்துவிட்டாரோ என்னவோ,

இப்படி ஆளுங்கட்சி தவெகவின் காமுக SIR-களால் பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

ஆட்சிதான் மாறியதே தவிர, காட்சி மாறவில்லை என்பதைப் போல், தற்போது பாலியல் SIR-களுக்கான Address-ஆக தவெக மாறி நிற்கிறது.

இவ்வளவு கொடுமைகளுக்கும் நடுவே ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ எங்கே போனது என்றும் தெரியவில்லை? Hibernation Mode?

மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி கிறிஸ்டோபர் மீது எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழகப் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் – உங்களுக்கு உதவி செய்வதாக முகம் தெரியாத நபர்கள், குறிப்பாக தவெகவினர் என்றால், உடனடியாகக் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுங்கள்.

உங்களை யாரேனும் தவறாக நெருங்க வருவதாக நினைத்தால், உடனே உங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான அனைத்து உபகரணங்களையும் உங்கள் கைப்பையில் வைத்துக்கொள்ளுங்கள்.

‘நமக்கு நாமே பாதுகாப்பு’ என்பதே இந்த ஆட்சியின் அவல நிலை!”

"வனவிலங்குகள், தெருநாய்கள், பூனைகளை பிடித்து ஆய்வக சோதனைகள்.!"- மத்திய அரசுக்கு தயாநிதி மாறன் கடிதம்

மத்திய அரசு புதிய விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தை அறிமுகப்ப்படுத்தியுள்ளது. இந்தச் சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் மத்திய அமைச்சர் ராஜீவ... மேலும் பார்க்க

‘அண்ணாமலை தன் அறிவுஜீவித்தனத்தை அமித் ஷா மோடியிடம் காட்டுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்’ - காங்கிரஸ்

"பா.ஜ.க தலைவர்களிடம் பம்மாத்து காட்ட மட்டும் பயன்படுத்துங்கள். பா.ஜ.க-வின் பின் ஒளிந்து கொண்டு அறிவுஜீவியாக காட்டிக்கொண்ட அண்ணாமலையின், உங்கள் அறிவுஜீவி சாயம் வெளுத்துக்கொண்டிருக்கிறது" எனச் சாடியிருக... மேலும் பார்க்க

ஒன்றிய - மாநில உறவு குறித்து திமுக அரசு அமைத்த கமிட்டி; கிடப்பில் போடும் தவெக அரசு? - பின்னணி என்ன?

ஒன்றிய - மாநில அரசுகளின் உறவு குறித்த சிக்கல்களை ஆராய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் திமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட கமிட்டியை தவெக அரசு கிடப்பில் போடுவதாகவும், கமிட்டிய... மேலும் பார்க்க

"வாக்களித்த பெண்களுக்கு வேட்டு வைப்பதுதான் தவெக அரசு அவர்களுக்குத் தரும் பரிசா?"- கனிமொழி காட்டம்

சாத்தான்குளத்தில் வீடு புகுந்து தாயை வெட்டிக் கொன்று இரண்டு பெண் குழந்தைகளை கடத்திய சம்பவம், தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை அடுத்த முத... மேலும் பார்க்க

`விஜய்க்கு தனுஷ் போட்டியே கிடையாது; ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா என்பதை..!' - மரியவில்சன் சொல்வதென்ன?

நிதியமைச்சர் மரியவில்சன் இன்று (அக்.23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், "தனுஷ் அரசி... மேலும் பார்க்க

`செங்கோட்டையன் அழுத்தத்தால்தான் இந்தக் கைது நடவடிக்கை நடந்துச்சு..!' - நாதக கார்த்திகா பேட்டி

தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளரான கார்த்திகா மீது தேர்தல் பரப்புரையின்போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதல்வர் சென்ற பாதையில் பரப்புரை மேற்கொண்டது உள்ளிட்ட சம்பவங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டி... மேலும் பார்க்க