செய்திகள் :

'வியந்து பார்த்த ஹீரோவுடன், இப்போது இணைந்து நடிப்பதென்பது..!' - ஹிருத்திக் ரோஷன் குறித்து மிர்னா

post image

'ஜெயிலர் -1' படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக 'சுவேதா' என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றவர் மிர்னா. கடந்த வாரம் வெளியான 'ஜெயிலர் -2'-விலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் 'ஜெயிலர் -2' படத்தின்போது ஹிருத்திக் ரோஷனுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பதிவிட்டிருக்கிறார் மிர்னா.

மிர்னா மேனன்
மிர்னா மேனன்

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "சிறுவயது முதலே வியந்து பார்த்த ஹீரோவுடன், இப்போது ஒரே திரையில் இணைந்து நடிப்பது நம்ப முடியாத உணர்வாக இருக்கிறது!

'ஜெயிலர் 2' படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் சிறப்பான அனுபவம். அவருக்குப் பின்னால் இருக்கும் மனிதரை அறிந்துகொண்டது இன்னும் அழகான அனுபவமாக இருந்தது.

மிகவும் இனிமையானவர், எளிமையானவர், பணிவானவர். அவர் மீதான என் மதிப்பும் மரியாதையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. சில தருணங்கள் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். இது அப்படிப்பட்ட தருணம்" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

விக்ரம் வேதா : `இருவரும் நமக்கு உணர்த்திச் செல்வது என்ன?' | புதிர்களின் பின்னல்! | `சினி'ஸ்கோப் 35

`சினி'ஸ்கோப் 35விக்ரம் வேதா : புதிர்களின் பின்னல்!விக்ரம், நுணுக்கமான உணர்வுகளைப் புரிந்து கொள்கிறவனாகவும், புத்திசாலியாகவும் இருக்கிறான். அவன் ஒரு பைக் ஆர்வலனும் கூட! அவனிடமிருக்கும் பழைய பைக் ஒன்றின... மேலும் பார்க்க

Haiku: "ஹிப் ஹாப் ஆதி அண்ணா எங்களை பாட வச்ச அந்த மொமன்ட்..!" - அதிர்ச்சி அருண் பேட்டி

ஏகன், ஃபெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண் என இளம் பட்டாளங்கள் நடித்திருக்கும் 'ஹைக்கூ' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்திற்காக நடிகர் அதிர்ச்சி அருணைப் பேட்டி கண்டோம். Haiku Movie'ஹைக்... மேலும் பார்க்க

``'பாட்ஷா படத்துல ஆட்டோக்காரன் பாடலை முதல்ல பாடியது கிருஷ்ணராஜ் தான்!" - இயக்குநர் நாஞ்சில் அன்பழகன்

இசையமைப்பாளர் தேவா மறைந்த அடுத்த சில தினங்களிலேயே அவரது இசையில் அதிக பாடல்களைப் பாடிய பாடகர் கிருஷ்ணராஜும் மரணமடைந்திருப்பது, தமிழ்த் திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இன்று காலை மரணமடைந்த ... மேலும் பார்க்க

’தஞ்சாவூரு மண்ணெடுத்து’ புகழ் பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்... தமிழ்த் திரையிசைக்கு மேலும் ஒரு சோகம்

பிரபல தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் இன்று காலமானார், அவருக்கு வயது 75.சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே வேம்படிதாளம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ்.சிறு வயதிலேயே இசை மீது ஆர்வம்... மேலும் பார்க்க

Jailer 2: "100% எல்லோரும் ஏற்கும்படி படம் எடுக்க முடியாது" - எதிர்மறை விமர்சனங்களுக்கு சரவணன் பதில்

சரவணன் முதன்மைக் கதாபாத்தித்தில் நடித்திருக்கும் 'சட்டமும் நீதியும்' வெப் தொடரின் இரண்டாவது சீசன் அக்டோபர் 23-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த வெப் தொடரின் செய்தியாளர் ச... மேலும் பார்க்க

"சினிமாவை AI அழித்துவிடாது" - சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஏஐ குறும்படம்; சாதனை படைத்த சென்னை இளைஞர்கள்

சென்னையில் இயங்கி வரும் அனிமேஷன் மற்றும் விஎப்எக்ஸ் நிறுவனமான ஹைபிரிட் ஸ்டுடியோ சமீபத்தில் 'விங்ஸ் ஆஃப் ஃபையர்' என்கிற குறும்படத்தை வெளியிட்டிருந்தது. Hybrid Studio Teamஅது முழுக்க முழுக்க ஏ.ஐ-யால் உர... மேலும் பார்க்க