செய்திகள் :

தீராத டாடா சன்ஸ் பிரச்னை: 'இது கேள்விக்குறியாக்கும்!' - பிரதமர் மோடிக்கு பார்சி சங்கம் கடிதம்

post image

டாடா சன்ஸ் தலைவராக என்.சந்திரசேகரன் தொடரக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார், டாடா அறக்கட்டளையின் தலைவர் நோயல் டாடா.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களோ என்.சந்திரசேகரன்தான் மூன்றாவது முறையாகவும் டாடா சன்ஸ் தலைவராகத் தொடர வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம், டாடா சன்ஸ் நிறுவனம் பட்டியலிடுவதிலும் இந்த இரு தரப்பிற்கும் பிரச்னை நீடித்து வருகிறது.

இதனால், டாடா குழுமத்தில் தலைமைப் பிரச்னை நீடித்து வருகிறது. இது நிர்வாகத்தைப் பாதிக்கிறது.

டாடா
டாடா
இதனால், மும்பை பார்சி பஞ்சாயத்து மற்றும் பிற ஜொராஸ்ட்ரிய அமைப்புகள் கடந்த அக்டோபர் 7-ம் தேதி, இந்தியப் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளன.

அந்தக் கடிதத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கியத் தகவல்கள்...

“இந்தியாவின் வளர்ச்சியில் பார்சி மற்றும் இரானி சமூகங்கள் மிக முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளன.

ஜாம்ஷெட்ஜி டாடா, ஜே.ஆர்.டி.டாடா, ஹோமி பாபா, ஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக்ஷா மற்றும் நானி பால்கிவாலா போன்றோர் இதில் அடங்குவர்.

டாடா அறக்கட்டளை மற்றும் டாடா சன்ஸ் அமைப்புகளுக்குள் தற்போது நடக்கும் நிகழ்வுகள் குறித்து மிகுந்த கவலை எழுந்துள்ளது.

எதிர்காலம் கேள்விக்குறியாகிறது!

தற்போதைய சூழலானது ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் அல்லது அதன் பங்குதாரர்களின் பிணக்கையும் தாண்டிய பல தாக்கங்களைக் கொண்டுள்ளது.

இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் ஒரு பொது நிறுவனத்தின் எதிர்காலத் தன்மையும் நோக்கமுமே இங்கு கேள்விக்குறியாகியுள்ளது.

டாடா குழுமம் தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்புத் துறை, செமிகண்டக்டர், தூய்மையான ஆற்றல் மற்றும் மின்சார வாகனங்கள் ஆகிய துறைகளில் கணிசமாக முதலீடு செய்து வருகிறது.

தேசத்தின் உத்தி சார்ந்த நலன்கள் இருக்கும் இடங்களில் இந்தக் குழுமம் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது.

டாடா சன்ஸ்
டாடா சன்ஸ்

டாடா அறக்கட்டளை வசம்...

டாடா சன்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகள் டாடா அறக்கட்டளை வசம் இருக்கும் என்கிற கட்டமைப்புதான், இந்தக் குழுமத்தை நீண்டகால இலக்குகளை நோக்கிப் பயணிக்க வைத்துள்ளது.

அதே நேரத்தில், அறநெறி, அறக்கட்டளை உதவிகள் மற்றும் சமூகப் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் தங்களது அர்ப்பணிப்பையும் அது தொடர்ந்து தக்கவைத்துள்ளது.

தங்களது வணிக ரீதியிலான வெற்றி சமூகத்தின் பொது நலனோடு இணைந்திருப்பதை இந்தக் கட்டமைப்பு உறுதி செய்துள்ளது.

டாடா சன்ஸ் நிறுவனம் பட்டியலிடப்படுவது..

டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவது குறித்த விவாதம், வெறும் ஒரு சட்ட விதிமுறையாகவோ அல்லது தொழில்நுட்பம் சார்ந்த விஷயமாகவோ மட்டுமே பார்க்கப்படக் கூடாது.

இதன் தாக்கங்கள் அதைவிடவும் மிகவும் ஆழமானவை” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தையடுத்து மோடியோ, மத்திய அரசோ டாடா குழுமத்தின் விஷயத்தில் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

உலக வங்கியின் முதல் டிஜிட்டல் திட்டம்: நான்கு முக்கிய தூண்கள் ; இந்தியாவுக்கு என்ன பலன்?

உலக நாடுகளின் டிஜிட்டல் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், தனது முதலாவது ஒருங்கிணைந்த டிஜிட்டல் வியூகத்தை உலக வங்கி குழுமம் அறிவித்துள்ளது.வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் 60 கோடி ம... மேலும் பார்க்க

ஆயுதபூஜை: 'அரிசி விலை உயர்வால், உயர்ந்த பொரி விலை!' - கரூரில் பொரி வியாபாரம் மும்முரம்

நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஆயுதபூஜையின்போது, தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை சுத்தம் செய்து, அவற்றுக்க... மேலும் பார்க்க

மதுரையில் நடைபெற்ற 'CEDOI Awards 2026': 2500-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் பங்கேற்பு!

CEDOI – Consummate Entrepreneurs Development Organisation of India என்ற அமைப்பு, கடந்த 2022-ஆம் ஆண்டு மதுரையில் வெறும் 8 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்டது. இன்று, தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட மண... மேலும் பார்க்க

வேல்ஸ் குழுமம்: முதல்வர் விஜயை பூங்கொடுத்துடன் வரவேற்ற ஐசரி கணேஷ்

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவரும் வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தருமான டாக்டர் ஐசரி கே கணேஷ் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவர், வேல்... மேலும் பார்க்க

``தேசிய அளவிலான அங்கீகாரம்; பெருமை கொள்கிறோம்" - தங்கமயில் ஜுவல்லரி

தேசிய அளவிலான அங்கீகாரத்தை பெற்றிருக்கும் நமது தங்கமயில் ஜுவல்லரி. சில சாதனைகள் மட்டுமே ஒரு நிறுவனத்தின் பயணத்தில் சிறப்புமிக்க அத்தியாயங்களாக பெயர் பெறுகின்றன. இன்று தங்கமயில் ஜுவல்லரி அத்தகைய தருணத்... மேலும் பார்க்க

இலையைக் கலையாக்கி வருமானம்... ₹500 முதலீட்டில் வெற்றிபெற்ற காஞ்சிபுரம் இளைஞர்!

அதிகாலை 6 மணி… கையில் ஒரு பை… இயற்கை கொடுக்கும் இலைகளைத் தேடி ஒரு பயணம்! குப்பையாகக் கருதப்படும் இலைகளுக்கு உயிரூட்டி, அவற்றைக் கலைப்படைப்புகளாக மாற்றி வருமானம் ஈட்டுகிறார் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சே... மேலும் பார்க்க