செய்திகள் :

Haiku Review: இரண்டு காதல்கள் கற்றுத்தரும் பாடம் - தலைப்பைப் போலவே வசீகரிக்கிறதா இந்தக் காதல் கதை?

post image

சென்னையில் ஆட்டோமொபைல் வரைகலை நிறுவனம் ஒன்றில் பணியிலிருக்கிறார் மனோகர் (ஏகன்). அங்கே பயிற்சிக்காக இணையும் நிவேதாவுடன் (ஃபெனிமா ஜார்ஜ்) நட்பு ஏற்படுகிறது. இதனிடையே மனோகரின் கல்லூரிக்கால வாழ்க்கையும் நமக்குக் காட்டப்படுகிறது. கல்லூரியில் செய்த சேட்டையினால் மனோகரை (ஏகன்) அங்கிருந்து டிஸ்மிஸ் செய்துவிடுகிறார்கள். இறுதியாண்டில் டிஸ்மிஸ் செய்யப்பட்டதால், அவருக்கு வேறொரு கல்லூரியில் சீட் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

ஹைக்கூ விமர்சனம் | Haiku Review
ஹைக்கூ விமர்சனம் | Haiku Review

இறுதியில், பெண்கள் மட்டுமே படிக்கும் ஒரு கல்லூரியை இருபாலருக்குமானதாக மாற்றிய பிறகு அங்கு முதல் மாணவனாகப் போய்ச் சேர்கிறார் மனோ. அங்கு பவளக்கொடிக்கும் (ஸ்ரீதேவி அபல்லா) மனோவுக்கும் காதல் சடுகுடு! அந்தக் காதல் என்னவானது, நிவேதாவுடனான நட்பு அடுத்த கட்டத்துக்குச் சென்றதா... இந்த இரண்டு உறவிலும் மனோகர் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் என்னென்ன என்பதுதான் அறிமுக இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இயக்கியிருக்கும் 'ஹைக்கூ'.

துள்ளலான கல்லூரி இளைஞன் கதாபாத்திரத்திற்குக் காதல், கோபம், அமைதியுடன் கூடிய நிதானம் ஆகியவற்றைத் தேவைக்கேற்ப தர முயன்றிருக்கிறார் ஏகன். ஆனால், அவை பல இடங்களில் சம்பிரதாய ரியாக்ஷன்களாக மட்டும் சுருங்கிப்போவது துருத்தல். எமோஷனல் வகுப்புகளில் கதாநாயகிகள் ஸ்ரீதேவி அபல்லா, ஃபெமினா ஜார்ஜ் இருவரும் நல்ல ரேங்க் வாங்குகிறார்கள்.

ஹைக்கூ விமர்சனம் | Haiku Review
ஹைக்கூ விமர்சனம் | Haiku Review

தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் படத்தின் கலகல மீட்டரைச் சீராகக் கொண்டு சென்றிருக்கிறார் 'அதிர்ச்சி' அருண். இவர்களைத் தாண்டி சுப்ரமணியம் சேது, சபரீஷ் உள்ளிட்ட பலர் ஆங்காங்கே எட்டிப் பார்த்துவிட்டு மட்டும் செல்கிறார்கள்.

காதல் மொழி பேசும் கதைக்கும், இறுக்கமான எமோஷனல் கதைக்கும் வெவ்வேறு 'டச்'களைத் தந்து கவனம் பெறுகிறார் ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமி. சுவாரஸ்யம் தடுமாறும் இடங்களையும், சொன்ன விஷயத்தையே மீண்டும் மீண்டும் சுற்றும் இடங்களையும் படத்தொகுப்பாளர் சக்தி பிரனேஷ் கருணையோடு டீல் செய்திருப்பது ஏனோ!

ஹைக்கூ விமர்சனம் | Haiku Review
ஹைக்கூ விமர்சனம் | Haiku Review

இசையமைப்பாளர் சித்துகுமார் இசையில் பாடல்களில் பெரிய குறையில்லை என்றாலும், அவை படத்தின் வேகத்திற்கு பேரிகேட்தான். பின்னணி இசையும் காட்சிகளோடு இணையாமல் ஆங்காங்கே ஒருதலையாகவே சுற்றுகிறது.

இரண்டு காதல்கள், அதில் நாயகன் உணரும் பாடங்கள் என்ன என்பதைச் சுவாரஸ்யமான ஐடியாவோடு சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் யுவராஜ் சின்னசாமி. இருபாலருக்குமான கல்லூரியாக மாற்றப்பட்ட பிறகு அங்கு முதல் மாணவனாகச் சேரும் நாயகன், அங்கு அவர் எப்படி இருக்கப்போகிறார் என்கிற தொடக்கக் கதை சுறுசுறுப்போடு பார்க்க வைக்கிறது. பிறகு, நாயகனின் முதல் காதலை வழக்கமான காதல் சினிமா இலக்கணங்களோடு கொண்டு செல்கிறார் இயக்குநர்.

நாயகனுக்கும் - நாயகிக்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள், எட்டிப் பார்க்கும் பிரச்னைகள், ஆணாதிக்க மனோபாவம் என எல்லாவற்றிலும் புதுமை என்பதே மிஸ்ஸிங்! நாயகிக்கு டாக்சிக் நாயகன் தரும் அழுத்தம் பற்றிப் பேசிய ஐடியாவெல்லாம் ஓகே பாஸ்! ஆனால், அந்த காட்சிகளை விவரிக்கும் இடங்களில் நாயகன் மீது பரிதாபப் பார்வையைக் காட்டுவது ஏன்?! இடையிடையே அதிர்ச்சி அருண் போடும் காமெடி கவுன்ட்டர்கள் மட்டும் திரைக்கதையைச் சோர்வாக்கிடாமல் கூட்டிப்போகின்றன.

ஹைக்கூ விமர்சனம் | Haiku Review
ஹைக்கூ விமர்சனம் | Haiku Review

இரண்டாம் பாதியில், வேறொரு காதல் கதைக்கு நகர்கிறது படம். அந்த காதல் படலத்தில் நாயகிக்கு நாயகனின் இறந்தகாலம் தொடர்பான பிரச்னை, அடையாளம் குறித்த உரையாடல் மட்டும் புதுசு! அதிலும் நிவேதாவுக்கு எழும் கோபம், அந்த கோபத்திற்குப் பின்னிருக்கும் காரணம் ஆகியவற்றை அவரின் பார்வையிலிருந்து விளக்கிய விதம் சிறப்பு. ஆனால், ஏற்கனவே விளக்கிவிட்ட இந்த விஷயங்களை இன்னும் தெளிவுபடுத்துகிறேன் என சில காட்சிகள் ரிப்பீட் அடிக்கின்றன. வழக்கமான அந்த க்ளைமாக்ஸுக்கும் வலுவான காரணங்கள் சொல்லப்படவில்லை.

நல்லதொரு ஐடியாவை, இன்னும் அழுத்தமான திரைக்கதையோடு இணைத்துச் சொல்லியிருந்தால் டைட்டிலைப் போலப் படமும் `ஹைக்கூ'வாக ரசிக்க வைத்திருக்கும்.

Jailer 2: "அனிருத் திருமணம்; ரஜினி சாரின் தத்துவம்!" - பியார்ன் சுர்ராவோ ஷேரிங்ஸ்

'ஜெயிலர் 2' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் அள்ளி வருகிறது. ரஜினிகாந்த் நடித்திருக்கும் இந்தப் படத்தை நெல்சன் இயக்கியிருக்கிறார். Jailer 2 - Rajinikanthஇப்படத்திற்கு அனிருத் இசையம... மேலும் பார்க்க

'வியந்து பார்த்த ஹீரோவுடன், இப்போது இணைந்து நடிப்பதென்பது..!' - ஹிருத்திக் ரோஷன் குறித்து மிர்னா

'ஜெயிலர் -1' படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக 'சுவேதா' என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றவர் மிர்னா. கடந்த வாரம் வெளியான 'ஜெயிலர் -2'-விலும் நடித்திருக்கிறார். இந்நிலையி... மேலும் பார்க்க

விக்ரம் வேதா : `இருவரும் நமக்கு உணர்த்திச் செல்வது என்ன?' | புதிர்களின் பின்னல்! | `சினி'ஸ்கோப் 35

`சினி'ஸ்கோப் 35விக்ரம் வேதா : புதிர்களின் பின்னல்!விக்ரம், நுணுக்கமான உணர்வுகளைப் புரிந்து கொள்கிறவனாகவும், புத்திசாலியாகவும் இருக்கிறான். அவன் ஒரு பைக் ஆர்வலனும் கூட! அவனிடமிருக்கும் பழைய பைக் ஒன்றின... மேலும் பார்க்க

Haiku: "ஹிப் ஹாப் ஆதி அண்ணா எங்களை பாட வச்ச அந்த மொமன்ட்..!" - அதிர்ச்சி அருண் பேட்டி

ஏகன், ஃபெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண் என இளம் பட்டாளங்கள் நடித்திருக்கும் 'ஹைக்கூ' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்திற்காக நடிகர் அதிர்ச்சி அருணைப் பேட்டி கண்டோம். Haiku Movie'ஹைக்... மேலும் பார்க்க

``'பாட்ஷா படத்துல ஆட்டோக்காரன் பாடலை முதல்ல பாடியது கிருஷ்ணராஜ் தான்!" - இயக்குநர் நாஞ்சில் அன்பழகன்

இசையமைப்பாளர் தேவா மறைந்த அடுத்த சில தினங்களிலேயே அவரது இசையில் அதிக பாடல்களைப் பாடிய பாடகர் கிருஷ்ணராஜும் மரணமடைந்திருப்பது, தமிழ்த் திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இன்று காலை மரணமடைந்த ... மேலும் பார்க்க

’தஞ்சாவூரு மண்ணெடுத்து’ புகழ் பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்... தமிழ்த் திரையிசைக்கு மேலும் ஒரு சோகம்

பிரபல தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் இன்று காலமானார், அவருக்கு வயது 75.சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே வேம்படிதாளம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ்.சிறு வயதிலேயே இசை மீது ஆர்வம்... மேலும் பார்க்க