செய்திகள் :

சுஷாந்த் சிங் மேலாளர் திஷா சாலியன் மரண வழக்கு: "அவரை எனக்கு தெரியாது" - ஆதித்ய தாக்கரே திட்டவட்டம்

post image

மும்பையில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரஜபுத் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவரிடம் மேலாளராக இருந்த திஷா சாலியன் அதே ஆண்டு ஜூன் 8ம் தேதி மும்பை புறநகரான மலாடில் 14 மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.

அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கீழே தள்ளிவிட்டு கொலை செய்தார்களா என்ற மர்மம் இன்னும் நீடித்துக்கொண்டிருக்கிறது. போலீஸார் இது குறித்து விபத்து மரணமாகவே பதிவு செய்துள்ளனர். ஆனால் தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் என்று திஷா சாலியனின் தந்தை தொடர்ந்து கூறி வருகிறார்.

இது குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் திஷா சாலியன் தந்தை மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் இது குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் திஷா சாலியன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சி.பி.ஐ. இம்மரணம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது.

தாக்கரே, திஷா
தாக்கரே, திஷா

அதில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

தனது பெயரைக் களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தனது பெயர் இவ்வழக்கில் திட்டமிட்டு சேர்க்கப்பட்டு இருப்பதாக ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''திஷா சாலியனைத் தான் ஒருபோதும் சந்தித்ததோ அல்லது அவரைப் பற்றி அறிந்ததோ இல்லை. அரசியல் மற்றும் தனிப்பட்ட உள்நோக்கம் கொண்டவர்கள், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடனேயே தன்னை இந்த வழக்கோடு தொடர்புபடுத்துகின்றனர்.

மீண்டும் ஒருமுறை, தேவையற்ற சத்தங்களைக் கடந்து உண்மைகளைப் பற்றிப் பேசுவோம். நான் திஷா சாலியனைச் சந்தித்ததோ அல்லது அறிந்ததோ இல்லை.

கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக, தெளிவான அரசியல் மற்றும் தனிப்பட்ட நோக்கங்களைக் கொண்ட சிலரால், இந்தத் துயரமான வழக்கோடு என் பெயரைத் தொடர்ந்து தொடர்புபடுத்துவது, ஆதாரமற்ற, திட்டமிட்ட அவதூறுப் பிரசாரமாகும். ஒரு துளி ஆதாரமும் உண்மையும் இல்லாமல், சுயநல சக்திகளால் நடத்தப்படும் இந்த இடைவிடாத அவதூறுப் பிரசாரம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

ஆரவாரமான தொலைக்காட்சி விவாதங்களும் ஊடக விசாரணைகளும் உண்மைகளை மாற்றிவிடாது. உண்மைக்காகவும் சக குடிமக்களுக்காகவும் நாங்கள் போராடுவதைத் தடுக்க, இத்தகைய தீய முயற்சிகள் அரசியல் ரீதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது ஒரு தோல்வியடைந்த உத்தியாகும். நாங்கள் எப்போதும் உண்மையின் பக்கம் நின்று அதற்காகப் போராடுவோம்," என்று அவர் கூறினார்.

திஷாவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் திங்கள்கிழமை பதிவு செய்யப்பட்ட சிபிஐ-யின் முதல் தகவல் அறிக்கையில் எந்தவொரு சந்தேக நபரின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், ஆதித்ய தாக்கரே மற்றும் நடிகர்கள் டினோ மோரியா, ரியா சக்ரவர்த்தி உள்ளிட்ட பலரின் பங்களிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்ரீனா கைஃப்: பிரசவத்திற்குப் பின் எதிர்கொண்ட உருவக் கேலி; ₹350 கோடி பிராண்ட் மூலம் பதிலடி!

ஒரு பெண்ணின் அடையாளம் என்பது அவரது உழைப்பு, தொழில் முனைவுத் திறன், சாதனைகள் ஆகியவற்றில் அடங்கியுள்ளதா அல்லது அவர் காட்டும் உடல் எடையிலும் தோற்றத்திலும் அடங்கியுள்ளதா? பாலிவுட் திரையுலகில் இருபது ஆண்டு... மேலும் பார்க்க

அமிதாப் பச்சன் காட்டம்: வலைப்பதிவைத் திரித்து, போலிச் செய்திகளாகக் கூறும் ஊடகங்களுக்கு ஆவேசப் பதில்

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை அமிதாப் பச்சன். சமூக வலைத்தளங்கள் பிரபலமாவதற்கு முன்பிருந்தே கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடையின்றித் தினமும் நள்ளிரவில் தனது தனிப்பட்ட வலைப்பதிவில் (Blog) ... மேலும் பார்க்க

சுஷாந்த் சிங் மேலாளர் திஷா மரணம்: FIR-ல் உத்தவ் தாக்கரே மகன், நடிகை ரியா பெயர் சேர்ப்பு

மும்பையில் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரஜபுத்தின் முன்னாள் மேலாளர் திஷா சாலியன் மர்மமான முறையில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து இறந்துப் போனார். சுஷாந்த் சிங் தற... மேலும் பார்க்க

பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல் வீட்டில் ரூ.5 லட்சம் தங்க நகை திருட்டு; வீட்டுப் பணிப்பெண் கைது

பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல் மும்பை சர்ச்கேட் பகுதியில் தனது தாயாரோடு வசித்து வருகிறார். அமீஷா படேலின் வீட்டில் சமீபத்தில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் காணாமல் போனது. வைரம் பதித்த தங்க வளை... மேலும் பார்க்க

Hanuman Ansh: 'சின்ன கல்லு, பெத்த லாபம்' - பாலிவுட்டில் கவனம் ஈர்க்கும் ஹனுமான் அன்ஷ்!

பெரிய நட்சத்திரங்கள் இல்லை. பல கோடி ரூபாய் பட்ஜெட்டும் இல்லை; பெரிய விளம்பரங்களும் இல்லை. ஆனால், பாக்ஸ் ஆபீஸில் எதிர்பாராத வசூலைக் குவித்து பாலிவுட்டில் கவனம் ஈர்த்திருக்கிறது ‘ஹனுமான் அன்ஷ்’. நீம் கர... மேலும் பார்க்க

`நான் பள்ளி படிப்பைகூட முடிக்காததை சிலர் கிண்டல் செய்யலாம்; ஆனால் அன்று.!" - நடிகை கரீனா கபூர்

பாலிவுட் திரை நடத்திரத்தில் கூடுதல் கவனம் பெற்றவர் நடிகை கரீனா கபூர். கடந்த 2000-ம் ஆண்டு ஜே.பி. தத்தா இயக்கத்தில் வெளியான 'ரெஃப்யூஜி' (Refugee) திரைப்படம் மூலம் அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாகத் தனது 19-வ... மேலும் பார்க்க