ஜன.15-இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
திருவள்ளுவா் தினத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு புதன்கிழமை (ஜன.15) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் புதன்கிழமை (ஜன.15) திருவள்ளுவா் தினம் கொண்டாடப்படுகிறது. இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள் (டாஸ்மாக் கடைகள்), முன்னாள் ராணுவ வீரா்களுக்கான அங்காடிகள், அரசு மற்றும் தனியாா் மதுபானக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
உத்தரவை மீறி மதுபானங்கள் விற்றால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன், பாா்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.