சூலூர்: தவெக எம்.எல்.ஏ-வை நோக்கி பொதுமக்கள் கல்வீச்சு; தடியடி நடத்திய போலீஸ் - எ...
`அசிங்கமா ஆபாசமா பேசுறாங்க... ஏன் இந்த விஜய் ஆட்சிக்கு வரக் கூடாதா?'- மதுராந்தகத்தில் காட்டமான விஜய்
அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டிருக்கிறார்.
மேடையில் பேசிய முதல்வர் விஜய், "நான் இன்றைக்கு முதல்வராக இங்கு வரவில்லை. இடைத்தேர்தலுக்காக ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன். உங்கள் வீட்டுப் பிள்ளையாக, மகனாக வந்திருக்கிறேன். உங்களிடம் ஒரே ஒரு கேள்விதான் கேட்க வேண்டும். ஏன் உங்கள் விஜய் ஆட்சிக்கு வரக் கூடாதா?

உங்கள் தவெக ஆட்சிக்கு வரக் கூடாதா? ஒரு தனிக்கட்சியாக, சாமானியர்களின் கட்சியாக, ஊழலை ஒழிக்கும் ஒரு கட்சியாக, உங்கள் விஜய் வரக் கூடாதா? இந்த தீயசக்தி திமுக நம்மை பார்த்து அவதூறாக, அசிங்கமாக, ஆபாசமாகப் பேசுகிறார்கள். இன்று நான் சினிமாவில் வென்றதற்கும், அரசியலில் வென்றதற்கும் தமிழ்நாட்டு மக்கள்தான் காரணம்" என்று பேசியிருக்கிறார்.
முதல்வர் விஜய்யின் உரை தொடர்ந்து அப்டேட் செய்யப்படும்.














