செய்திகள் :

மனநலப் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 7,000 கி.மீ பைக் பயணம்; பெண் ரைடரின் முன்னெடுப்பு!

post image

இந்தியாவில் ஏழு பேரில் ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையான மனநலப் பிரச்னை இருப்பதாகக் கூறப்படும் நிலையில், மனநலச் சிகிச்சை பெறுவதில் சமூகத் தயக்கம், பாகுபாடு குறித்த அச்சம் உள்ளிட்டவை பெரும் தடைகளாக உள்ளன. அதேநேரம், மனநலச் சேவைகளுக்கான தேவைக்கும் கிடைக்கும் வசதிகளுக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனநலப் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ‘Beyond the Horizon: A Ride for Resilience’ என்ற பெயரில் 58 நாள் விழிப்புணர்வுப் பயணத்தை மதுரையைச் சேர்ந்த செஹர் ஹஷ்மி என்பவர் மேற்கொண்டு வருகிறார். ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கியுள்ள இந்தப் பயணம், இந்தியாவின் 50-க்கும் மேற்பட்ட நகரங்களைக் கடந்து அக்டோபர் 15-ம் தேதி நிறைவடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், மனநலம் குறித்து பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் வெளிப்படையான உரையாடலை உருவாக்குவதும், தேவைப்படும் நேரத்தில் தகுந்த தொழில்முறை உதவியை நாடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமாகும்.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் 100-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 12,000 முதல் 13,000 இளைஞர்களை சென்றடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மனநலத்துக்கான சிகிச்சை மற்றும் ஆதரவு குறித்த தகவல்கள் மட்டுமல்லாமல், நெருக்கடியான சூழ்நிலைகளை எவ்வாறு எதிர்கொள்வது, உதவி தேவைப்படும்போது எங்கு அணுகுவது போன்ற தகவல்களும் இந்தப் பயணத்தின் மூலம் பகிரப்படுகின்றன. மேலும், விழிப்புணர்வு சார்ந்த தகவல்கள் பல்வேறு இந்திய மொழிகளில் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த சுகாதார பட்ஜெட்டில் 1 சதவிகிதத்துக்கும் குறைவான தொகையே மனநலச் சேவைகளுக்காக ஒதுக்கப்படுவதாக நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.

செஹர் ஹஷ்மி

மேலும், மனநலச் சேவைகள் தேவைப்படுபவர்களில் 70 முதல் 92 சதவிகிதம் பேர் அவற்றைப் பெறுவதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

7,000 கி.மீ சாலையை கடக்கும் இந்தப் பயணம், மனநலம் குறித்த சமூகத்தின் பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்தும் விழிப்புணர்வுப் பயணமாக தொடர்கிறது.

`சாப்பாட்டுக்கே வழியில்லை ஐயா..' கலெக்டர் ஆபீஸ் வாசலில் கலங்கிய முதிய தம்பதி; உதவிய மனிதநேயர்கள்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கையில் ஊன்றுகோலுடன் தள்ளாடியபடி நடந்து வந்த முதிய தம்பதியின் காட்சி, அங்கே நின்ற அனைவரின் நெஞ்சையும் பிழிந்தது.கு... மேலும் பார்க்க

"இலவச கேஸ் சிலிண்டரை 2 மாசமா நிறுத்திட்டாங்க; ஆனாலும்..." - ரூ.1 இட்லி பாட்டியின் அன்பு சேவை!

கோவை மாவட்டம் வடிவேலம்பாளையம் பகுதியில் ஏழை, எளிய தொழிலாளர்களின் பசி தீர்க்கும் வகையில் பல ஆண்டுகளாக வெறும் 1 ரூபாய்க்கு கமலாத்தாள் பாட்டி இட்லி வழங்கி வருகிறார். பாட்டியின் இந்தச் சேவைக்காக தனியார் ந... மேலும் பார்க்க

மகனின் கனவுக்கு `உயிர்' தந்த தந்தை; துப்பாக்கி சுடுதலில் வீரர்களை உருவாக்கும் திருச்சி ரைபிள் கிளப்!

ஒரு வினாடி இலக்கு மாறினாலும் வெற்றிக்கானப் பாதை மாறிவிடும். இந்த வார்த்தைகளுக்குப் பொருத்தமாக விளங்குவது, காஸ்ட்லியான விளையாட்டாக அறியப்படும் துப்பாக்கிச் சுடுதல் போட்டிதான். இந்தப் போட்டியில் பல மாணவ... மேலும் பார்க்க

வெள்ளத்தால் வரமுடியாத இடத்திற்கு சென்ற பெற்றோர் - எதிர்நோக்கி காத்திருக்கும் 12 வயது நேபாள சிறுவன்

நேபாளத்தை புரட்டிப்போட்ட பனிச்சரிவு மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் வெளிநாட்டினர் உட்பட 1300 பேர் இறந்துவிட்டனர். மேலும் பல ஆயிரம் பேரை காணவில்லை. பல கிராமங்கள் வெள்ளத்தில் அடியோடு அடித்துச... மேலும் பார்க்க

கோவை: ’அன்று யாசகம் கேட்டவர், இன்று அரசுப் பேருந்து நடத்துநர்’ – சாதித்த திருநங்கை விநோதினி

கோவை தெலுங்குப்பாளையத்தைச் சேர்ந்தவர் திருநங்கை வினோதினி. பழனியைச் சொந்த ஊராகக் கொண்ட இவருக்கு, 10ஆம் வகுப்பில் நடத்துனராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. பின்னர் பாலின மாறுபாடு காரணமாக படிப்பை கைவிட... மேலும் பார்க்க