செய்திகள் :

BB Tamil: 'அந்த ஒருவரை ஜெயிக்க விடாதீங்க!' - வெளியேறும்போது அவினாஷை பார்த்து ஆவேசமான லட்சுமி பிரியா

post image

'மகாநதி' நாடகம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் லட்சுமி பிரியா. தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் சீசன் 10-ல் கலந்துகொண்டிருந்தார்.

இந்நிலையில் அவர் பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறுவது போன்ற புரொமோக்கள் வெளியாகி இருகின்றன.

லட்சுமி பிரியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''சில விஷயங்கள் unfair-ஆ போச்சு. லீடர் எக்சிட் போர்டுல என்னை போட்டாங்க. ஒருவேளை அவங்க யாரையாச்சும் காப்பாத்த அப்படிப் பண்ணியிருக்கலாம்.

லட்சுமி பிரியா
லட்சுமி பிரியா

ஆனா, எனக்குத் தெரியும் நாங்க எங்க பெஸ்டைத்தான் கொடுத்தோம். பார்க்கிற உங்களுக்கும் தெரியும் யாருடைய பர்ஃபார்மன்ஸ் நல்லா இல்லைன்னு'' என்று பகிரப்பட்டிருந்தது.

தற்போது வெளியாகியிருக்கும் இரண்டாவது புரொமோவில், " அந்த ஒரு நபரை (அவினாஷ் அசோக்) ஜெயிக்க விடாதீர்கள். மோசமான லீடர் அவர்தான். இப்போது நான் வெளியே செல்கிறேன். நான் செய்த ஒரு தவறு உனக்காக விளையாடியது மட்டும்தான். இத்தனை பிக் பாஸ் சீசனில் மிகவும் மோசமான ப்ளேயர் நீ தான்" என்று அவினாஷ் அசோக்கைப் பார்த்து ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: "FIR பதிவு செய்ததே பேரம் பேசுவதற்காகத்தான்" - அமைச்சர் நிர்மல் குமார்

மதுரையில் வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து காந்தி அருங்காட்சியகத்தில் இன்று அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு... மேலும் பார்க்க

மின்வாரிய விவகாரம்: "தனியாருக்கு தாரை வார்ப்பதில் முதல்வருக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?" - டிடிவி தினகரன்

மின் கணக்கீட்டாளர் பணிக்கு தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் ஊழியர்களை நியமிக்கும் அரசின் முடிவு குறித்து அமமுக தலைவர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தன் எக்ஸ் பக்கத்தில்,... மேலும் பார்க்க

"விஜய்யின் தாயாரை பாஜக தலைவர்கள் தவறாகப் பேசினார்கள்; ஆனால்."- மதுராந்தகம் திமுக வேட்பாளர் பரந்தாமன்

மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரையில் தமிழ்நாடு முதல்வர் விஜய் ஆற்றிய உரையில் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக மதுராந்தகம் திமுக வேட்பாளர் பரந்த... மேலும் பார்க்க

"இதுதான் தவெக அரசின் சமூக நீதியா?" - தவெக-வின் வாக்குறுதியை மேற்கோள்காட்டி அன்புமணி காட்டம்

மின் கணக்கீட்டு பணியில் தனியார் ஒப்பந்த முறையைக் கைவிட வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாநகரம் உள்பட தமிழ்நாட... மேலும் பார்க்க

‘ஜனநாயகத்தை அச்சுறுத்தாதீர்கள்’ - அமைச்சர் சம்பத் மீதான தாக்குதல் குறித்து கனிமொழி எம்.எல்.ஏ!

தாராபுரத்தில் அமைச்சர் சம்பத் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து, கோவை கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில... மேலும் பார்க்க

'ஜெகத்ரட்சகனின் மகனுக்கு முதல்வர் விஜய் கொடுத்த பொறுப்பு!' - பின்னணி என்ன?

திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் மகனான சந்தீப் ஆனந்துக்கு தவெகவில் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை கொடுத்திருக்கிறார் முதல்வர் விஜய். CM Vijayஇதுதொடர்பாக பனையூர் வட்டாரத்தில் பேச்சுக் கொடுத்தோம், 'திமுகவில்... மேலும் பார்க்க