“இந்தியா பெருமிதம் கொள்கிறது”- கத்திக்குத்துப்பட்டும் பயணிகளைக் காப்பாற்றிய விமா...
ஜோக்ஸ்..!

“தலைவர் இன்னும் சினிமா நினைப்புலயே இருக்காருன்னு எப்படிச் சொல்றே?”
“எங்கள் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம்னு பேசுறதுக்கு பதிலா, ‘எங்கள் ஆட்சியை ரீ-ரீலீஸ் செய்வோம்’னு பேசுறாரே!”

“டாக்டர் என் கணவர் நைட்டெல்லாம் தூக்கத்துல ‘உட்காருங்க... உட்காருங்க’ன்னு புலம்பிக்கிட்டே இருக்காரு டாக்டர்..!”
“கொஞ்ச நாளைக்குச் சட்டசபை நேரலையைப் பார்க்காம இருக்கச் சொல்லுங்க!”
- டி.சிவக்குமார்

“இந்த கிளினிக்ல பில் அதிகமா வரும்னு எப்படிச் சொல்றே?”
“இவங்களுக்குச் சொந்தமா ஆபரேஷன் தியேட்டர், மெடிக்கல் ஸ்டோர், ஸ்கேன் லேப் எல்லாம் இருக்கே!”
- எஸ்.முகம்மது யூசுப்

“நம்ம தலைவருக்கு ஒரு அடியில சிலை வெச்சுருக்காங்களே... ஏன்?”
“தன்னோட சிலைன்னுகூடப் பார்க்காம, சிற்பிகிட்ட கமிஷன் வாங்கியிருக்கார். அதான்!”
- மலர்சூர்யா

“நாங்க அமலாக்கத் துறையிலிருந்து வர்றோம்...”
“அடுத்த வாரம் வாங்க சார்... கூட்டணி இன்னும் அமையலை...”
- ஆனந்தி ராமகிருஷ்ணன்

“தியேட்டரில் மார்னிங் ஷோ, மேட்னி ஷோவெல்லாம் எப்படி ஃபுல்லாச்சு?!”
“ ‘படத்துக்கு நடுவில் சட்டமன்ற லைவ் ஷோவும் காட்டப்படும்’னு விளம்பரம் செஞ்சோம் முதலாளி!”
- திருப்பூர் சாரதி

“நம் மன்னர் ஏன் சோகமாக இருக்கிறார்?
“ ‘வாழ்வில் நான் ஒரு முறையாவது போரில் வெற்றிபெறுவேனா’ என்று சாட் ஜிபிடிகிட்ட மன்னர் கேட்டதுக்கு ‘வாய்ப்பு இல்லை ராஜா’ன்னு பதில் சொல்லிடுச்சு..!”
- பெ.பாலசுப்ரமணி

``ஏண்டா ஹோம்வொர்க் பண்ணலைன்னு கேட்டதுக்கு என்னையே எதிர்த்து பேசுறியே... இதுக்கு என்ன தண்டனைன்னு தெரியுமா..?’’
``கிளாஸைவிட்டு வெளிநடப்பு செய்யணும். அதானே டீச்சர்?’’
- சென்னா














