செய்திகள் :

INDIA BLOC: ``நாங்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை" - ராகுல் காந்தி

post image

டெல்லியில் இன்று (30-ம் தேதி) நடைபெற்ற 'இந்தியா கூட்டணி' தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சமாஜ்வாதி, சிபிஐ, சிபிஐ(எம்), என்சிபி (சரத் பவார்), சிவசேனா (யுபிடி) உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

INDIA alliance
INDIA alliance

அப்போது பேசிய ராகுல் காந்தி, ``இந்தியா கூட்டணியின் இக்கூட்டத்தில் மிகச்சிறப்பான விவாதங்கள் நடைபெற்றன. இதில் 'வாக்குத் திருட்டு' என்பதே முதன்மைப் பிரச்னையாக இருந்தது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோரால் இந்தியாவின் ஜனநாயக அமைப்புத் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒரே மாதிரியான கருத்துடையவையாக இருக்கின்றன.

நாங்கள் இதை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை. அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்க வழிசெய்வோம். எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் இந்திய அரசியலமைப்பின் கூட்டுப் பாதுகாவலர்கள் என்பதை நான் அவர்களிடம் நினைவூட்டினேன். நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுவது நமக்குக் கிடைத்த பெருமையாகும். வரும் சில மாதங்களில் நாட்டின் சூழலில் கடுமையான மாற்றங்களை நாம் கொண்டு வருவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" என்றார்.

INDIA BLOC: ``மீண்டும் வாக்குச்சீட்டு தேர்தல் முறையைக் கொண்டுவர வேண்டும்!" - மல்லிகார்ஜுன கார்கே

டெல்லியில் இன்று (30-ம் தேதி) நடைபெற்ற 'இந்தியா கூட்டணி' தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சமாஜ்வாதி, சிபிஐ, சிபிஐ(எம்), என்சிபி (சரத் பவார்), சிவசேனா (யுபிடி) உள்ளிட்ட கூட்டணி கட்சிக... மேலும் பார்க்க

CM Vijay : 'திமுக மாதிரி வேடம் போட்டு பம்ம மாட்டோம்!' - சாடித் தள்ளிய முதல்வர் விஜய்

தாராபுரம் இடைத்தேர்தலுக்காக தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், திமுகவை கடுமையாக சாடியிருந்தார்.CM Vijay'முதல்வர் விஜய் பேசியதாவது, 'ஆட்சியமைத்த 100 நாள்களில் மா... மேலும் பார்க்க

'மேடையில் உணர்ச்சிவசப்பட்டு அழுத சத்யபாமா; ஆறுதல் கூறிய முதல்வர் விஜய்!' - என்ன நடந்தது?

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக முதல்வர் விஜய் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். இந்தக் கூட்டத்தில் பேசிய தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமா திடீரென கண்கலங்கி எமோஷனலாக பேசினார். சத்யபாம... மேலும் பார்க்க

``நான் அமைச்சராகப் போகிறேனா?" - சௌமியா அன்புமணி கொடுத்த ரியாக்ஷன் என்ன?

தவெக அரசின் அமைச்சரவையில் பாமக இணையப்போவதாகவும், சௌமியா அன்புமணிக்கு முக்கியமான துறை ஒதுக்கப்படவிருப்பதாகவும் தகவல் வெளியானது. குறிப்பாக, மதுராந்தகத்தில் கணிசமான அளவில் வன்னிய சமுதாய மக்கள் இருக்கின்ற... மேலும் பார்க்க

`அறிவிருக்கா தெரியலை...' - சாடிக் கொள்ளும் முன்னாள் - இன்னாள் அறநிலையத்துறை அமைச்சர்கள்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் விஜபி தரிசனம் செய்த அமைச்சர்கள், எம்.பி-கள் குறித்து முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விமர்சித்திருந்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ், ... மேலும் பார்க்க