செய்திகள் :

Amala Paul: ``ஆடை படம்போல இன்னொரு படம் நடிக்க மாட்டேன்" - நடிகை அமலா பால் ஓபன் டாக்!

post image

2019-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்திய திரைப்படம் 'ஆடை'. இந்தப் படத்தில் நடிகை அமலா பால் நிர்வாணமாக நடித்திருப்பார். வி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ரத்னா குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில், அனன்யா ராமபிரசாத், விவேக் பிரசன்னா, ரம்யா சுப்பிரமணியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சுதந்திரமான சிந்தனை கொண்ட காமினி என்ற செய்தி ஊடகப் பெண், பார்ட்டி கொண்டாட்டத்திற்குப் பிறகு ஒரு பாழடைந்த கட்டடத்தில் ஆடைகளின்றி விழித்தெழும் சூழலையும், அதிலிருந்து தப்பிக்க போராடும் அவளது வாழ்வியல் போராட்டத்தையும் ஒரு த்ரில்லர் கதையாக இப்படம் விவரித்தது. விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படத்தில் நடித்தது குறித்து நடிகை அமலா பால் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

நடிகை அமலா பால்
நடிகை அமலா பால்

அவர் அளித்திருக்கும் பேட்டியில், ``ஆடை படத்தில் நடித்தபோது என் இமேஜ் குறித்து பயம் இருந்தது. ஆனால் தற்போது மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் அதில் நிச்சயம் நடிக்க மாட்டேன். இந்தப் படத்தின் கதை என்னிடம் கூறி, நான் நடிப்பது உறுதியானதிலிருந்து, இயக்குநர் ரத்னா குமார் இந்த கதையை எவ்வாறு கையாளப் போகிறார், ஆடையில்லாத காட்சிகள் படத்தின் கதைக்கு அவசியமானதாக இருக்குமா அல்லது விளம்பரத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுமா என யோசித்துக்கொண்டே இருந்தேன்.

படக்குழுவின் அணுகுமுறையைப் புரிந்துகொள்ள எனக்கு இரண்டு மாதங்கள் தேவைப்பட்டது. முற்றிலும் நம்பிக்கை ஏற்பட்ட பிறகே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஏனென்றால், இயக்குநர், ஒளிப்பதிவாளர் மீது எனக்கு முழு நம்பிக்கை தேவைப்பட்டது. இது ஓர் உணர்வுப்பூர்வமான, கலைநயமிக்க படமாக இருக்குமா அல்லது நிர்வணத்தை மட்டுமே முதன்மைப்படுத்தும் படமாக இருக்குமா என்பதே என் சந்தேகம்.

நடிகை அமலா பால்
நடிகை அமலா பால்

படைப்பு ரீதியாக இது சிறப்பாக உருவாக்கப்படும் என்ற நம்பிக்கை வந்த பிறகு, அது ஓர் அழகான அனுபவமாக மாறியது. மிகக் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் படப்பிடிப்பு நடத்தி என்னை சௌகரியமாக உணர வைத்தார்கள். இப்போது அதே மாதிரியான கதாபாத்திரம் வந்தால் நடிக்க மாட்டேன். ஏனென்றால் அப்படியே நம்மை முத்திரைக் குத்திவிடுவார்கள்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Meesaya Murukku 2: "நானே அவரை 'ஆதி அண்ணா'ன்னுதான் கூப்பிடணும் போல" - சுந்தர்.சி கலகல

'ஹிப் ஹாப்' தமிழா ஆதி, எழுதி, இசையமைத்து, இயக்கி, நடித்திருக்கும் 'மீசைய முறுக்கு 2' படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கேதிகா சர்மா, ரம்யா ரங்கநாதன், சைத்ரா பி அச்சார், ஹர்ஷத் கான் ஆ... மேலும் பார்க்க

Meesaya Murukku 2: "'என்னை அப்பானு கூப்பிடுற உரிமை உனக்கு இருக்கு'னு தேவா சார் சொன்னார்"- HipHop ஆதி

ஹிப் ஹாப் தமிழா ஆதி, எழுதி, இசையமைத்து, இயக்கி, நடித்திருக்கும் 'மீசைய முறுக்கு 2' படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கேதிகா சர்மா, ரம்யா ரங்கநாதன், சைத்ரா பி அச்சார், ஹர்ஷத் கான் ஆகி... மேலும் பார்க்க

"பாட்டுல ஒரு இடம் மட்டும் ஏன் ஹிட் ஆகணும்?" - 'பத்தா', 'ராமாயணா' குறித்து கார்த்தி நேத்தா பேட்டி

தன் வரிகளில், நம் உணர்வுகளோடு உரையாடுபவர் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா. சமீபத்தில் வெளியான 'பத்தா' படத்தின் 'மகளே' பாடலின் வரிகளும் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அத்தோடு, ஏ.ஆர். ரஹ்மான், ஹான்ஸ்... மேலும் பார்க்க

'டோரதி' ஏன் தமிழின் முக்கியமான சினிமா? - திரைக்கலைஞர்கள் அடுக்கும் காரணங்கள் என்னென்ன?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் 'டோரதி'க்கு நல்ல விமர்சனங்களும், பாராட்டுகளும் கிடைத்து வருகின்றன. கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோரின் நடிப்பு பாராட்டைப் பெற, இளையராஜாவின் இசையும் கொண... மேலும் பார்க்க

8 years of Pariyerum Perumal: "சில பயணங்கள் நம்மை விட்டு என்றென்றுமே பிரிவதில்லை" - கதிர் நெகிழ்ச்சி

2018 ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர், ஆனந்தி நடிப்பில், பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'பரியேறும் பெருமாள்'. இப்படம் வெளியாகி நேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலைய... மேலும் பார்க்க

மீசைய முறுக்கு 2: இசையமைப்பாளர் தேவா வாழ்த்து; ``இது போதும் எனக்கு இது போதுமே!” - ஹிப்ஹாப் ஆதி

ராப் பாடகராக அறிமுகமாகி பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்தவர் ஹிப்ஹாப் ஆதி. பின்னர் நடிகர், இயக்குநர் எனத் தனக்கென திரைத்துறையில் ஒரு இடத்தைத் தக்கவைத்துக்கொண்டார். இ... மேலும் பார்க்க