செய்திகள் :

BB Tamil 10 : `பணப்பெட்டியுடன் வீட்டைவிட்டு வெளியேறிய குமரன்.!'

post image

`பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் குமரன். இவர் பின் வெள்ளித்திரையிலும் தடம் பதித்தார். இவர்  ̀குமார சம்பவம்' என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார். வதந்தி வெப் சீரிஸில் இவருடைய நடிப்புக்கு ஏராளமான பாராட்டுகள் கிடைத்தன. இந்நிலையில் இவர் `பிக்பாஸ் தமிழ் சீசன் 10' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருந்தார். 

குமரன்

 ̀லீடர்ஸ் எக்சிட் லிஸ்ட் (Leader's Exit List)' என்கிற புதிய கான்செப்ட் மூலம் வீட்டின் தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட லட்சுமி பிரியா மற்ற ஹவுஸ்மேட்ஸ்களால் நாமினேஷன் செய்யப்பட்டு கடந்த வாரம் வீட்டிலிருந்து வெளியேறினார்.

இந்த எக்சிட் லிஸ்ட் மூலம் வெளியேறிய மூன்று பேரை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த மூன்று நபர்கள் வீட்டிலுள்ள மூவரை தேர்வு செய்ய வேண்டும். அப்படி தேர்வு செய்யப்படும் மூவரும், வீட்டிலிருந்து வெளியேறி பின் வீட்டிற்குள் சென்ற மூவரும் போட்டியிட்டு இந்த வார இறுதியில் அவர்கள் ஆறு பேரிலிருந்து மூவர் வெளியேற வேண்டும். 

அந்த அடிப்படையில் லட்சுமி பிரியா குமரனை தேர்வு செய்தார். பிக்பாஸ் இறுதியில் வைக்கப்படும் பணப்பெட்டி இப்போது வைக்கப்பட்டு அந்த ஆறு பேரிலிருந்து ஒருவர் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்து ஒருவர் வெளியேறலாம் என தெரிவிக்கப்பட்டது. 5லட்சம் பணப்பெட்டியை குமரன் எடுத்திருக்கிறார். மற்ற போட்டியாளர்கள் வேண்டாம் என தடுத்தும் குமரன் இந்த முடிவை எடுத்து வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பணப்பெட்டி

குமரனுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே இருந்தது. அவர்கள் அனைவருக்கும் குமரனின் இந்த முடிவு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. `எதிர்பாராததை எதிர்பாருங்கள்' என்கிற டேக்கின் படி இந்த வாரம் மூன்று வைல்டு கார்டு போட்டியாளர்கள் வீட்டிற்குள் செல்ல இருக்கிறார்கள்.

பிக்பாஸ் லான்ச் எபிசோடில் ரசிகர்கள் ஓட்டின் அடிப்படையில் வெளியேறிய சின்னத்திரை நடிகர் புவியரசன் வீட்டிற்குள் நுழைய இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.!

BB Tamil 10: தந்தை திடீரென உயிரிழப்பு.. நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் ஆனந்தி!

பிக்பாஸ் சீசன் 10 ல் கலந்து கொண்ட நடிகை ஆனந்தியின் தந்தை சுப்பையா மாரடைப்பு காரணமாக திடீரென இன்று உயிரிழந்தார். தொடர்ந்து ஆனந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருக்கிறார்.முன்னதாக இந்த வார எவி... மேலும் பார்க்க

Bigg Boss tamil 10: வைல்டு கார்டு என்ட்ரியில் களமிறங்கும் புதிய போட்டியாளர்! - யார் இந்த கவி?

பிக்பாஸ் சீசன் 10-ல் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் புதிய போட்டியாளர் உள்ளே செல்ல இருக்கிறார்.விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10 செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கியது. 19 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்... மேலும் பார்க்க

Bigg Boss Tamil: லக்ஷ்மி பிரியாவைத் தொடர்ந்து ஆனந்தியும் அவுட்?! என்ன நடக்கிறது பிக் பாஸில்?

பிக்பாஸ் சீசன் 10 விஜய் டிவியில் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.19 போட்டியாளர்களுடன் செப்டம்பர் முதல் வாரம் தொடங்கிய நிகழ்ச்சியில் பிளாக் பாண்டி, சாவின்யா, ஜாவித், மணிவண்ணன் ஆகியோர் ஷோவிலிருந்... மேலும் பார்க்க

Bigg Boss Tamil: "வேறு யாரையோ காப்பாத்த அப்படிப் பண்ணியிருக்கலாம்!" - வெளியேறினாரா லட்சுமி பிரியா?

`மகாநதி' தொடரின் மூலம் தனக்கென ஓர் ரசிகர்கள் பட்டாளத்தைப் பெற்றவர் லட்சுமி பிரியா.̀காவேரி' என்கிற இவர் கதாபாத்திரத்திற்கு அத்தனை வரவேற்பு கிடைத்தது. தொடர் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக̀பிக் பாஸ் தமிழ்... மேலும் பார்க்க

BB Varshini: `குறும்படம் எடுப்பதாக இளைஞரிடம் பணம் பறித்துத் தாக்கிய புகார்' - பிக்பாஸ் வர்ஷினி கைது!

பிக்பாஸ் பிரபலம் வர்ஷினி வெங்கட் பணமோசடி மற்றும் மிரட்டல் புகார் தொடர்பாக சென்னையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.பிக்பாஸ் 8வது சீசனில் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் சென்றவர் நடிகை வர்ஷினி வெங்கட். சினிமாவில்... மேலும் பார்க்க

``ஒற்றுமையாக இருந்தோம்; பிரச்னைக்கு பணமே காரணம்; தங்கம் அவர் வீக்னஸ்"- ராதா புகார் குறித்து அம்பிகா

பிரபல நடிகை அம்பிகா மீது அவரது சகோதரியும் பிரபல நடிகையுமான ராதா செக் மோசடி புகார் ஒன்றை சில முன்புகளுக்கு முன்பு கொடுத்திருந்தார். அந்தப் புகாரில் 46 கோடி ரூபாய் காசோலை மோசடி செய்ததாக அம்பிகா மீது குற... மேலும் பார்க்க