செய்திகள் :

அரசு ஓடிடி: நெட்பிளிக்ஸ், அமேசான் நிறுவனங்களுடன் போட்டியிட முடியுமா? சவால்கள் என்னென்ன?- ஒரு பார்வை!

post image

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்​பாளர்​கள் சங்​கத்​தின் 6-வது ஆண்டு பொதுக்​குழுக் கூட்​டம் நடை​பெற்​றது. இந்த நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்​தின​ராகக் கலந்து கொண்​டு பேசியபோது, “சினிமாதுறை மேல் த.வெ.க அரசுக்கு தனி கவனம் உள்ளது. ‎இந்த துறையில் இருந்து வந்தவர்தான் தற்போது முதலமைச்சர் ஆக உள்ளார். ‎சிறு பட்ஜெட் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ‎தமிழ் சினிமாவுக்கான ஓடிடி தளம் அமைப்பது குறித்து வெகு விரைவில் நல்ல செய்தி வரும்.” என்றார். அமைச்சர் கூறியதுபோல் தமிழ் சினிமாவுக்கென தனி ஓடிடி என்பது சாத்தியமாகுமா, அதிலிருக்கும் சவால்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

அரசு ஓடிடி
அரசு ஓடிடி

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத் திரையுலகங்களைச் சேர்ந்த தயாரிப்பாளர் சங்கங்கள் இணைந்து ‘தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற வலுவான கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற சர்வதேச ஓடிடி ஜாம்பவான்களின் ஆதிக்கத்திற்கு மத்தியில், தென்னிந்திய சினிமா தயாரிப்பாளர்களின் வருவாய், உரிமைகளைப் பாதுகாக்க இத்தகைய ஒருங்கிணைப்பு அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இத்தகைய சூழலில், "அரசே ஒரு பிரத்யேக ஓடிடி தளத்தைத் தொடங்கினால் என்ன நடக்கும்?" என்ற விவாதம் மிக முக்கியத்துவம் பெறுகிறது. பெரு நிறுவன ஓடிடி தளங்கள் பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் கமர்சியல் படங்களை மட்டுமே கோடிக்கணக்கில் கொடுத்து வாங்குகின்றன. தரமான கதையம்சம் கொண்ட சிறு பட்ஜெட், மாற்று சினிமாக்கள் விற்க முடியாமல் முடங்குகின்றன. அரசு ஓடிடி வந்தால் இத்தகைய படைப்புகளுக்குக் கைகொடுக்கும்.

அரசு ஓடிடி
அரசு ஓடிடி

வணிக ரீதியான ஓடிடிகளில் இடம்பிடிக்க முடியாத நாட்டுப்புறக் கலைகள், பாரம்பரிய ஆவணப்படங்கள், விருது பெற்ற படங்கள் போன்றவற்றை அரசு தளம் மக்களின் பார்வைக்குக் கொண்டு சேர்க்கும். கார்ப்பரேட் நிறுவனங்கள் திரைப்படங்களின் வாழ்நாள் டிஜிட்டல் உரிமையை மொத்தமாக அடிமாட்டு விலைக்கு வாங்கும் வழக்கத்திற்கு மாற்றாக, வெளிப்படையான கணக்குடன் படைப்பாளிகளுக்குப் பங்களிப்பை அளிக்க முடியும். தனியார் ஓடிடி சந்தாக்கள் நடுத்தர மக்களுக்குப் பாரமாக மாறும் நிலையில், மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான படைப்புகளை அரசால் வழங்க முடியும்.

மற்ற ஓடிடிகளுடன் அரசு போட்டியிட முடியுமா?

நேரடியாக நெட்பிளிக்ஸ், அமேசான் அல்லது ஜியோ சினிமாவுடன் அரசு ஓடிடி வணிக ரீதியாகப் போட்டியிட முடியாது. ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளத்தை இயக்குவதற்கு சர்வர் செலவு, நெட்வொர்க் கட்டணம், அலைவரிசைச் செலவு ஆகியவை மிக அதிகம். வணிக ரீதியான பிரமாண்ட படங்கள் இல்லாத நிலையில், வெறும் சந்தா வருவாயை மட்டுமே நம்பி இயங்கினால் தளம் நஷ்டத்திலேயே இயங்கும். அரசு இதை ஒரு லாப நோக்கற்ற கலாசாரச் சேவையாக கருதினால் மட்டுமே தொடர்ந்து நடத்த இயலும்.

அரசு ஓடிடி
அரசு ஓடிடி

முன்னுதாரணங்கள்

இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு மாநில அரசால் 2024ல் தொடங்கப்பட்ட ஓடிடி தளம் கேரளாவின் 'சி-ஸ்பேஸ்' (CSpace). இது Pay-per-view (பார்த்த அளவுக்குக் கட்டணம்) முறையில் செயல்படுகிறது. தயாரிப்பாளருக்கு 50% பங்கு வழங்கப்படுகிறது. பெரிய கமர்சியல் படங்கள் வராததால், மக்களிடையே பரவலான வரவேற்பைப் பெற முடியாமல் இத்தளம் இன்றும் தடுமாறி வருகிறது.

மத்திய அரசின் பிரசார் பாரதி (தூர்தர்ஷன்) சார்பில் தொடங்கப்பட்ட ஓடிடி தளம் 'வேவ்ஸ்' (WAVES). இது பழைய தூர்தர்ஷன் பொக்கிஷங்கள், கல்வி மற்றும் பிராந்திய உள்ளடக்கங்களை ஒருங்கிணைத்து வழங்கி வருகிறது.

உலகிலேயே பொதுத்துறை ஓடிடிக்கு மிகச்சிறந்த உதாரணம் பிரிட்டன் (BBC iPlayer). ஆனால் இது அரசு தளம் அல்ல; சுயேச்சையான மக்கள் நலன்சார் ஒளிபரப்பு நிறுவனம். மக்களிடம் வசூலிக்கப்படும் உரிமக் கட்டணம் மூலம் இயங்குவதால் உயர்தரமான தொடர்களை உருவாக்க முடிகிறது. கனடாவின் தேசிய திரைப்பட வாரியம் (National Film Board) ஆவணப் படங்களை இலவசமாகப் பார்க்கும் டிஜிட்டல் தளத்தை வெற்றிகரமாக நடத்துகிறது.

அரசு ஓடிடி வெற்றி பெற என்ன செய்யலாம்?

அரசு ஓடிடி வெற்றி பெற வேண்டுமெனில், அது தனியார் வணிக நிறுவனங்களை நகலெடுக்காமல், புதிய வியூகங்களைக் கையாள வேண்டும். முழு சந்தா முறைக்கு மாறாக, குறிப்பிட்ட கட்டணம் செலுத்திப் பார்க்கும் முறை (TVOD - Transactional Video on Demand), விளம்பரங்கள் மூலம் இலவசமாகப் பார்க்கும் (AVOD) கலவையை உருவாக்க வேண்டும். திரையரங்குகளில் வெளியாகி 60 அல்லது 90 நாள்களுக்குப் பிறகு மட்டுமே அரசு ஓடிடிக்கு படங்கள் வர வேண்டும் என்ற விதிமுறையை வகுத்தால், தியேட்டர் தொழிலும் பாதிக்கப்படாது.

புதிதாக இணைந்துள்ள நான்கு மொழித் தயாரிப்பாளர் சங்கங்களுடன் அரசு கைக்கோத்து, ஒரு கூட்டுறவு ஓடிடி தளம் போல உருவாக்கலாம். இதில் அரசு தொழில்நுட்ப உள்கட்டமைப்பை வழங்க, தயாரிப்பாளர்கள் உள்ளடக்கத்தைப் பகிர்ந்துகொள்ளலாம். சினிமா மட்டுமல்லாது பள்ளி-கல்லூரி பாடத்திட்ட வீடியோக்கள், போட்டித் தேர்வு பயிற்சிகள், அரசு வரலாற்று ஆவணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக தளம் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

அரசு ஓடிடி
அரசு ஓடிடி

தென்னிந்தியத் திரைப்பட அமைப்புகள் ஒன்றிணைந்துள்ள சூழலில், அரசு தொடங்கக்கூடிய ஓடிடி என்பது கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏகபோக ஆதிக்கத்திற்கு எதிரான ஓர் ஆரோக்கியமான மாற்று ஜனநாயக மேடையாக இருக்க முடியும். ஆனால், சினிமா விநியோகஸ்தராகவோ அல்லது வியாபாரியாகவோ அரசு மாற நினைத்தால் அது பொருளாதார ரீதியாகப் பின்னடைவையே தரும். ஆளுங்கட்சிக்கு எதிரான கருத்துகள், சர்ச்சைக்குரிய கதைகளை அரசு தளம் அனுமதிக்குமா என்ற கேள்வியும் எழுவதைத் தவிர்க்க முடியாது.

மாறாக, இவற்றையெல்லாம் தாண்டி தயாரிப்பாளர்களின் கூட்டுறவு அமைப்பாகவும், தரமான படைப்புகளுக்கு வாழ்வளிக்கும் களமாகவும் இயங்கினால் அரசு ஓடிடி மக்கள் மத்தியிலும் திரையுலகிலும் காலத்துக்கேற்ப காலம் கடந்தும் நிலைத்து நிற்கும்.

PVR: `எப்போ படத்தை போடுவீங்க?' - 17 நிமிட விளம்பரம்: ரூ.75,000 அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்!

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல திரையரங்கு ஒன்று (PVR), படத்தின் தொடக்கத்தில் 22 நிமிடங்கள் வரை வர்த்தக விளம்பரங்கள் மற்றும் விளம்பரப் படங்களைத் திரையிட்டு காலதாமதம் செய்ததற்காக, ரூ. 75,000 வழங்க வேண்டும்... மேலும் பார்க்க

'நாங்கள் பணிய மாட்டோம்' - `பாகுபலி’ பட காட்சியைப் பகிர்ந்த ஈரான் தூதரகம்! - பின்னணி என்ன?

உலக அரசியல் மேடைகளிலும் தூதரக தகவல் தொடர்புகளிலும் பொதுவாகக் கடுமையான அறிக்கைகளும் மரபுசார்ந்த வார்த்தைகளுமே பயன்படுத்தப்படும். ஆனால், ஆந்திரா, தெலங்கானாவுக்குப் பொறுப்பான ஹைதராபாத் ஈரான் தூதரகம், சர்... மேலும் பார்க்க

"தென்னிந்தியத் திரைப்படங்களை உலகளவில் சந்தைப்படுத்துவோம்"- திரைப்பட அகாடமி தலைவர் டிஸ்கோ ரவீந்திரன்!

பிரபல நடிகரும் சர்வதேசத் திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளருமான ரவீந்திரனை, மாநிலத் திரைப்பட அகாடமியின் புதிய தலைவராக கேரள அரசு நியமித்துள்ளது. 1980-களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ... மேலும் பார்க்க

``அம்பிகா இப்படியெல்லாம் பொறாமைப்பட்டால் நான் என்ன செய்வது?" - வெடித்து பேசும் நடிகை ராதா

1980-களில் தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்த அம்பிகா - ராதா சகோதரிகள், அண்மைக்காலமாக சொத்து விவகாரத்தில், ஒருவரையொருவர் குற்றம்சாட்டி மாறி மாறி புகார் அளித்துவருவது திரையுலகைத் தாண்டி... மேலும் பார்க்க

₹2,500 கீபோர்டில் முளைத்த `இசை' கனவு... ஹிப் ஹாப் ஆதியின் பாராட்டு - சினிமாவை நோக்கி நகரும் விக்கி!

2015-ல் தொடங்கிய இசைப் பயணம்... ‘என் உயிர் அன்பே’, ‘மனசை ஏன்டி நொறுக்குற’, ‘மை லைஃப் ஃபுல் டேமேஜ்’ எனத் தொடர்ந்து, இன்று சினிமாவை நோக்கி நகரும் விக்கி (Vicky).₹2,500-க்கு நண்பர் வாங்கிக் கொடுத்த ஒரு க... மேலும் பார்க்க

What To Watch: 'என்ன விலை', 'மொத ராத்திரி', 'சண்டைக்காரி' - இந்த வாரம் ரிலீஸ்கள் | முழு லிஸ்ட்

வீக் எண்ட் வந்தாச்சு. ஷாப்பிங், அவுட்டிங், தியேட்டர், டின்னர் என இந்நேரத்திற்குப் பிளான் செய்யத் தொடங்கியிருப்பீர்கள்.உங்கள் பிளானிங்கில் கொஞ்சம் உதவி செய்யலாம் என்று இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி... மேலும் பார்க்க