Amala Paul: ``ஆடை படம்போல இன்னொரு படம் நடிக்க மாட்டேன்" - நடிகை அமலா பால் ஓபன் ட...
CM Vijay : 'திமுக மாதிரி வேடம் போட்டு பம்ம மாட்டோம்!' - சாடித் தள்ளிய முதல்வர் விஜய்
தாராபுரம் இடைத்தேர்தலுக்காக தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், திமுகவை கடுமையாக சாடியிருந்தார்.

'முதல்வர் விஜய் பேசியதாவது, 'ஆட்சியமைத்த 100 நாள்களில் மாநில அளவில் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம்.
2026 தேர்தலில் மக்களெல்லாம் தவெகவுக்கு வாக்களித்து ஜெயிக்க வைத்துவிட்டார்கள் என்பதை மறந்துவிட்டு, இன்னமும் நாம்தான் முதல்வராக இருக்கிறோம். நம்முடைய குடும்பம் அதிகாரத்தில் இருக்கிறது என நினைக்கும் மன்னராட்சி மனப்பான்மை நமக்கு கிடையாது.

அண்ணாவையும் மறந்துவிட்டு அவர் ஆரம்பத்த கட்சியையும் மறந்துவிட்டு திமுகவுடன் சுயநலமாக கூட்டு சேர்ந்து சுற்றுபவர்களும் நாம் கிடையாது.
யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் நாமில்லை எனக் கூறித்தான் அரசியலுக்கே வந்தோம். அதனால்தான் நம் கூட்டணியின் பெயர் மதச்சார்பற்ற சமூகநீதி கூட்டணி.
நாம் கிருஷ்ண ஜெயந்திக்கும் வாழ்த்து சொல்வோம். கிறிஸ்துமஸூக்கும் பக்ரீத்துக்கும் வாழ்த்து சொல்வோம். திமுக மாதிரி பம்மி பதுங்கி வேடம் போட்டு இருக்க மாட்டோம்." என்றார்.












