செய்திகள் :

``நான் அமைச்சராகப் போகிறேனா?" - சௌமியா அன்புமணி கொடுத்த ரியாக்ஷன் என்ன?

post image

தவெக அரசின் அமைச்சரவையில் பாமக இணையப்போவதாகவும், சௌமியா அன்புமணிக்கு முக்கியமான துறை ஒதுக்கப்படவிருப்பதாகவும் தகவல் வெளியானது.

குறிப்பாக, மதுராந்தகத்தில் கணிசமான அளவில் வன்னிய சமுதாய மக்கள் இருக்கின்றனர். இவர்களின் வாக்கு வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும். அதனால் திரைமறைவில் 'தவெகவுக்கு நட்பு சக்தியாகவே இருங்கள். சரியான சமயத்தில் உங்களுக்கான உரிய கௌரவத்தை முதல்வர் செய்வார்' எனத் தவெக தரப்பில் பாமகவுக்கு உறுதி கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

அதன் பின்னரே இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை எனும் முடிவை பாமக எடுத்தது என்றும் கூறப்பட்டது.

விஜய், சௌமியா அன்புமணி
விஜய், சௌமியா அன்புமணி

இந்த நிலையில், செஞ்சியில் எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, ``தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, பா.ம.க-வின் பூரண மதுவிலக்கு பேரணியில் 'கள்' இடம்பெறுமா? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். பா.ம.க-வின் கொள்கை என்னவோ, அதைத்தான் நாங்கள் எப்போதும் வலியுறுத்துகிறோம்.

கள் தொடர்பான நிலைப்பாட்டை பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கொள்கை விளக்கத்தில் தெளிவாகக் கூறியிருப்பார். அதுவே எங்கள் நிலைப்பாடு.

தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆட்சி மாற்றத்திற்கு 'எஸ்.ஐ.ஆர்' காரணம் என்றும், தலைமைத் தேர்தல் அதிகாரி தனிச்சச்சையாகச் செயல்பட்டார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. ஆனால், இதைப் பற்றி முழுமையான விவரங்கள் தெரிந்த பிறகே கருத்துக் கூற முடியும். அந்தப் புகார்களில் உண்மை இருக்கிறதா அல்லது ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளனவா என்பது முழுமையாக ஆராயப்பட வேண்டும்.

இடைத்தேர்தல் முடிந்த பிறகு நான் அமைச்சராகப்போவதாக அரசியல் வட்டாரத்தில் பரவி வரும் தகவல் வெறும் வதந்தி. இதுபோன்ற வீண் வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்" என்றார்.

`அறிவிருக்கா தெரியலை...' - சாடிக் கொள்ளும் முன்னாள் - இன்னாள் அறநிலையத்துறை அமைச்சர்கள்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் விஜபி தரிசனம் செய்த அமைச்சர்கள், எம்.பி-கள் குறித்து முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விமர்சித்திருந்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ், ... மேலும் பார்க்க

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: போராடிய மக்களை துப்பாக்கியால் சுட்ட காவலர் ராஜா உயிரிழப்பு

2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீவிரமான போராட்டம் நடைபெற்றது. அத்தொடர் போராட்டத்தின் 100வது நாளான கடந்த 2018, மே 22-ம் தேதி நடந்த போராட்டத்தின் போது பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர... மேலும் பார்க்க

"This guy is a Monster" – சுந்தர் பிச்சை குறித்து Trump; சிரித்தபடி பதிலளித்த Google CEO

அமெரிக்க அதிபர் Donald Trump, Google CEO சுந்தர் பிச்சையை“Monster” என்று குறிப்பிட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் Trump இந்த வார்த்தையை விமர்சனமாக அல்லாமல், அவரின் செல்வாக... மேலும் பார்க்க

'தவெக அமைச்சரவையில் இணையும் சௌமியா அன்புமணி?' - விஜய்யின் 'மதுராந்தகம்' பிளான்!

தவெக அரசின் அமைச்சரவையில் பாமக இணையப்போவதாகவும், சௌமியா அன்புமணிக்கு முக்கியமான துறை ஒதுக்கப்படவிருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் தவெகவினர் பரப்பி வரும் இந்தத் தகவலுக்குப் பின... மேலும் பார்க்க

'குட் நியூஸ்' போருக்கு முந்தைய 'அதே அளவில்' கச்சா எண்ணெய் ஏற்றுமதிகள்! சவூதியின் 2 முக்கிய நகர்வுகள்

நேற்று சர்வதேச சந்தையில் WTI கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாவிற்கு 89 டாலர் என்று வர்த்தகமானது. Brent கச்சா எண்ணெய் ஒரு பீப்பாவிற்கு 102 டாலர் என்று வர்த்தகமானது. இதில் WTI கச்சா எண்ணெய் முன்பு 90 டால... மேலும் பார்க்க

6 மாதங்களாக ரேஷன் கார்டு பயன்படுத்தவில்லையா? 'முடக்கப்படலாம்' - என்ன செய்வது?

6 மாதங்களுக்கு மேலாக, ரேஷன் கார்டைப் பயன்படுத்தாமல் வைத்திருக்கிறீர்களா? நாளை (அக்டோபர் 1) உங்கள் ரேஷன் கார்டு முடக்கப்படலாம். இறந்தவர்களின் பெயரில் ரேஷன் கார்டு வைத்திருப்பது, ஒன்றுக்கும் மேற்பட்ட ரே... மேலும் பார்க்க