இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்; ஓய்வுபெற 2 ஆண்டுகள் உள்ள நிலையி...
ட்ரம்ப் தலையீட்டை மீறி 4-வது முறையாக பிரேசில் அதிபராகும் லுலா! போர்க்கொடி தூக்கும் ஃபிளாவியோ - ஏன்?
நான்காவது முறையாகப் பிரேசிலின் அதிபராகத் தொடரப்போகிறார் லுலா டா சில்வா. 51.79 சதவீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் லுலா.
இவருக்கு எதிராகக் களம் கண்ட ஃபிளாவியோ போல்சோனாரோவிற்கு மக்கள் 48.21 சதவீத வாக்குகளை அளித்துள்ளனர். ஃபிளாவியோ போல்சோனாரோவிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆதரவு இருந்தது குறிப்பிடத்தக்கது.
லுலாவின் நன்றி!
தனது வெற்றி குறித்து லுலா தனது எக்ஸ் பக்கத்தில், “பிரேசில் மக்களுக்கும், ஜனநாயகத்தைப் பாதுகாக்க வீதிகளில் இறங்கிப் போராடிய இளைஞர்களுக்கும், நமது நாட்டின் எதிர்காலத்தைக் காக்கவும் வாக்களிக்கவும் அரும்பாடுபட்ட ஒவ்வொரு மனிதருக்கும் என் என்றும் மாறாத நன்றிகள்.

நீங்கள் அனைவரும் என் நம்பிக்கையைப் புதுப்பித்துள்ளீர்கள். இது நம்பிக்கை கொண்டு போராடிச் சுயாட்சியும் ஜனநாயகமும் மிக்க ஒரு பிரேசிலை உருவாக்குவதில் ஒருபோதும் பின்வாங்காத பிரேசில் மக்களுக்கு மட்டுமே உரித்தானது.
மிக்க நன்றி, பிரேசில்!
இந்த வெற்றி நம் அனைவருக்கும் உரியது. இந்த வெற்றி பிரேசில் மக்களின் வெற்றி!” என்று நன்றி தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் தலையீடு
ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதிலிருந்து பிரேசிலுக்கு நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார். பிரேசில் மீது வரி விதிக்கப்பட்டது. இந்தியா, பிரேசில் அங்கமாக இருக்கும் பிரிக்ஸ் அமைப்பைச் சாடினார்.ட்ரம்பின் அத்தனை நெருக்கடிகளையும் லுலா நன்கு கையாண்டார்.
ஃபிளாவியோ போல்சோனாரோவிற்கு ட்ரம்பின் ஆதரவைத் தாண்டி, பிரேசில் மக்களிடம் அதிக வாக்குச் சதவீதத்தைப் பெற்றுள்ளார்.
அமெரிக்காவும், பிரேசிலும் அருகருகே அமைந்துள்ள நாடுகள். இதனால், தன்னுடைய ஆதரவாளர் ஆட்சியில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று ட்ரம்ப் நினைத்தார். அதற்கேற்பச் சமூக வலைதளங்களில் புரோமோஷன்களும் செய்யப்பட்டன.

இது குறித்து லுலா தனது வெற்றிப் பேச்சில், “இது நாட்டின் எல்லைகளைக் கடந்து டிஜிட்டல் தளங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட வெளிப்புறத் தலையீடுகளை நாம் முறியடிக்க வேண்டியிருந்த ஒரு தேர்தலாகும்.
அந்த டிஜிட்டல் தளங்களை நாம் நிச்சயம் முறைப்படுத்த வேண்டும்.
இந்த நாடு யாரோ ஒருவரின் பின்வாசலாக மாறுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
லுலாவின் வெற்றியை ஏற்றுக்கொள்ளாத ஃபிளாவியோ போல்சோனாரோ
ஆனால், லுலாவின் வெற்றியை ஃபிளாவியோ போல்சோனாரோ ஒத்துக்கொள்வதாக இல்லை.
ஃபிளாவியோ போல்சோனாரோ செய்தியாளர்கள் சந்திப்பில், “இந்தத் தேர்தல் முடிவுகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளேன்.
மேலும், வாக்குப்பதிவு நேரத்தை இரண்டு மணி நேரம் நீட்டித்து உச்சநீதிமன்ற நீதிபதி கிறிஸ்டியானோ சானின் பிறப்பித்த உத்தரவு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் இதுவரை வரலாற்றில் நடந்திராதது” என்று பேசியுள்ளார்.















