செய்திகள் :

ட்ரம்ப் தலையீட்டை மீறி 4-வது முறையாக பிரேசில் அதிபராகும் லுலா! போர்க்கொடி தூக்கும் ஃபிளாவியோ - ஏன்?

post image

நான்காவது முறையாகப் பிரேசிலின் அதிபராகத் தொடரப்போகிறார் லுலா டா சில்வா. 51.79 சதவீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் லுலா.

இவருக்கு எதிராகக் களம் கண்ட ஃபிளாவியோ போல்சோனாரோவிற்கு மக்கள் 48.21 சதவீத வாக்குகளை அளித்துள்ளனர். ஃபிளாவியோ போல்சோனாரோவிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆதரவு இருந்தது குறிப்பிடத்தக்கது.

லுலாவின் நன்றி!

தனது வெற்றி குறித்து லுலா தனது எக்ஸ் பக்கத்தில், “பிரேசில் மக்களுக்கும், ஜனநாயகத்தைப் பாதுகாக்க வீதிகளில் இறங்கிப் போராடிய இளைஞர்களுக்கும், நமது நாட்டின் எதிர்காலத்தைக் காக்கவும் வாக்களிக்கவும் அரும்பாடுபட்ட ஒவ்வொரு மனிதருக்கும் என் என்றும் மாறாத நன்றிகள்.

லுலா வெற்றி
லுலா வெற்றி

நீங்கள் அனைவரும் என் நம்பிக்கையைப் புதுப்பித்துள்ளீர்கள். இது நம்பிக்கை கொண்டு போராடிச் சுயாட்சியும் ஜனநாயகமும் மிக்க ஒரு பிரேசிலை உருவாக்குவதில் ஒருபோதும் பின்வாங்காத பிரேசில் மக்களுக்கு மட்டுமே உரித்தானது.

மிக்க நன்றி, பிரேசில்!

இந்த வெற்றி நம் அனைவருக்கும் உரியது. இந்த வெற்றி பிரேசில் மக்களின் வெற்றி!” என்று நன்றி தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் தலையீடு

ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதிலிருந்து பிரேசிலுக்கு நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார். பிரேசில் மீது வரி விதிக்கப்பட்டது. இந்தியா, பிரேசில் அங்கமாக இருக்கும் பிரிக்ஸ் அமைப்பைச் சாடினார்.ட்ரம்பின் அத்தனை நெருக்கடிகளையும் லுலா நன்கு கையாண்டார்.

ஃபிளாவியோ போல்சோனாரோவிற்கு ட்ரம்பின் ஆதரவைத் தாண்டி, பிரேசில் மக்களிடம் அதிக வாக்குச் சதவீதத்தைப் பெற்றுள்ளார்.

அமெரிக்காவும், பிரேசிலும் அருகருகே அமைந்துள்ள நாடுகள். இதனால், தன்னுடைய ஆதரவாளர் ஆட்சியில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று ட்ரம்ப் நினைத்தார். அதற்கேற்பச் சமூக வலைதளங்களில் புரோமோஷன்களும் செய்யப்பட்டன.

ஃபிளாவியோ போல்சோனாரோ - ட்ரம்ப்
ஃபிளாவியோ போல்சோனாரோ - ட்ரம்ப்

இது குறித்து லுலா தனது வெற்றிப் பேச்சில், “இது நாட்டின் எல்லைகளைக் கடந்து டிஜிட்டல் தளங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட வெளிப்புறத் தலையீடுகளை நாம் முறியடிக்க வேண்டியிருந்த ஒரு தேர்தலாகும்.

அந்த டிஜிட்டல் தளங்களை நாம் நிச்சயம் முறைப்படுத்த வேண்டும்.

இந்த நாடு யாரோ ஒருவரின் பின்வாசலாக மாறுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

லுலாவின் வெற்றியை ஏற்றுக்கொள்ளாத ஃபிளாவியோ போல்சோனாரோ

ஆனால், லுலாவின் வெற்றியை ஃபிளாவியோ போல்சோனாரோ ஒத்துக்கொள்வதாக இல்லை.

ஃபிளாவியோ போல்சோனாரோ செய்தியாளர்கள் சந்திப்பில், “இந்தத் தேர்தல் முடிவுகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளேன்.

மேலும், வாக்குப்பதிவு நேரத்தை இரண்டு மணி நேரம் நீட்டித்து உச்சநீதிமன்ற நீதிபதி கிறிஸ்டியானோ சானின் பிறப்பித்த உத்தரவு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் இதுவரை வரலாற்றில் நடந்திராதது” என்று பேசியுள்ளார்.

லத்தீன் அமெரிக்க அரசியல் களம்: `ட்ரம்ப் கொள்கையை வீழ்த்திய லூலா' - இந்த வெற்றி சொல்வது என்ன?| அலசல்

லத்தீன் அமெரிக்கா: அரசியல் களம்பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா (Luiz Inácio Lula da Silva) வெற்றி பெற்று 4-வது முறை அதிபராகத் தேர்வாகியுள்ளார்.கடந்த சில ஆண்டுகளில் ல... மேலும் பார்க்க

மோடி தந்தை குறித்து கார்கே சர்ச்சைப் பேச்சு; 'சேற்றை வாரிப் பூசும் அரசியல்...' - அமித் ஷா கண்டனம்!

பீகார் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்துகொண்டு உரையாற்றினார்.கார்கே சர்ச்சைப் பேச்சுமல்லிகார்ஜுன் கார்கே தேர்தல் குளறுபடிகள் பற்றியும், இனி அனைத்து... மேலும் பார்க்க

``நாட்டை சைபர் பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும்" - பிரதமர் மோடி

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய தரவு மையம் மற்றும் சைபர் பாதுகாப்பு பயிற்சி நிறுவனம் அமைக்கப்பட்டது. இந்த நிறுவனத்தை பிரதமர் மோடி திறந்துவைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவ... மேலும் பார்க்க

'ஐப்பசி பௌர்ணமி, சிவன் செண்டிமெண்ட், தாமரையோடு காமாட்சி விளக்கு!' - தனுஷ் மகளிரணி கூட்ட ஹைலைட்ஸ்!

நேற்று சென்னை செம்மஞ்சேரியில் தனது நற்பணி இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் நடிகர் தனுஷ். தமிழகம் முழுவதுமிருந்து அழைத்து வரப்பட்டிருந்த 2500 க்கும் மேற்பட்ட மகளிர் அணி ந... மேலும் பார்க்க

கனமழையால் மிதக்கும் கோவை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் மக்கள் அவதி!

வடகிழக்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், நேற்று பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக மதுக்கரையில் 13 செ.மீ., வாரப்பட்டியில் 12.8 செ.மீ, ப... மேலும் பார்க்க